துவரம் பருப்பு பயன்கள் | Thuvaram Paruppu in Tamil
துவரம் பருப்பு நம் நாட்டின் மூவாயிரத்தி ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் முறையாக பயிர் செய்யப்பட்ட பயினமாகும்.
இன்று உலகம் முழுவதும் இந்த பயிர் பரவி இருக்கிறது. இந்த தாவரத்தில் மஞ்சள் நிறத்தில் ஒரு பூக்கள் பூக்கின்றன.
இந்த பூக்களில் பச்சை நிற காய்களும் காய்க்கின்றன. இந்த காய்களில் இரண்டு முதல் எட்டு விதைகள் இருக்கின்றன. இந்த விதையில் தோன்றும் பருப்பு தான் துவரம் பருப்பு.
உலகெங்கிலும் ஏராளமான பருப்பு வகை பயிர்கள் மனிதர்கள் உண்பதற்காகவே பயிரிடப்பட்டு வளர்க்கப்படுகின்றன. இந்த பருப்புகள் அனைத்துமே நமது உடல் நலத்திற்கு மிகவும் அத்தியாவசியமான சத்துக்களை கொடுக்கும்.
இதில் நம் நாட்டு சமையலில் அன்றாடம் இடம்பெறும் ஒரு பருப்பு வகையாக துவரம் பருப்பு இருக்கிறது. இந்த துவரம் பருப்பு சாப்பிடுவதால் ஏற்படும் மருத்துவ ரீதியான பலன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மெலிந்த உடல்
ஒரு சிலர் உடலில் சதைப்பற்று இல்லாம, மிகவும் மெலிந்த உடலைக் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக துவரம் பருப்பை பசு வெண்ணெயில் வதக்கி, அரிசி சாதம் சாப்பிடும்போது, இந்த கலவையை கலந்து சாப்பிடுங்கள். உங்களுக்கு சதை பிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமையும் கிடைக்கும்.
துவரம் பருப்பில் இரும்புச் சத்து,மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், கார்போஹைடிரேடுகள், புரதச்சத்து, நார்ச்சத்து போன்ற அனைத்துமே துவரம் பருப்பில் அடங்கியுள்ளன.
இரத்த அழுத்தம்
நடுத்தர வயசு மனிதர்களுக்கு இரத்த அழுத்தம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து, ரத்தக்குழாய் விரிவாக செயல்பட்டு ரத்த ஓட்டத்தை சீராக நடைபெற உதவுகிறது.
இதனால் ரத்த அழுத்தம் குறைந்து, உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே, ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி துவரம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
புரதசத்து
உடலில் தசைகளின் வலுவிற்கும், வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து. துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதச்சத்து அதிகமாகவே இருக்கிறது.
புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகள் உருவாக்க மிகவும் அவசியமானது. எனவே, குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள், துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடுங்கள்.
மலசிக்கல்
நம் உணவு சரியாக செரிமானம் நன்றாக நடந்து வெளியேற, நார்ச்சத்து தேவைப்படுகிறது. இந்த நார்ச்சத்து உணவில் இருந்தாலே மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பல பிரச்சனைகள் இல்லாமல் இருக்கும்.
இந்த நார்ச்சத்து, துவரம் பருப்பில் அதிகமாகவே இருக்கிறது. துவரம் பருப்பை பயன்படுத்துவதனால், நமக்கு செரிமான கோளாறுகள் வருவதில்லை.
காயங்கள்
நாம் அனைவருமே, எப்போதாவது அடிபட்டு, காயங்கள், புண்கள் ஏற்படுவது சகஜம். இத்தகைய காயங்கள், வெகு விரைவில் ஆறுவதற்கு புரதச்சத்து மிகுந்த உணவுகளை நாம் உன்ன வேண்டும்.
காயங்களை விரைந்து ஆற்றவும், செல்களின் மறு வளர்ச்சிக்கும் புரதச்சத்து அவசியமானது. எனவே, துவரம் பருப்புகளை பக்குவம் செய்து அடிக்கடி சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி
வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வைட்டமி ன் சி துவரம் பருப்பில் இருக்கிறது. இந்த துவரம் பருப்பை நாம் உணவில் சேர்த்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவதோடு ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்தியும் அதிகமாகும்.
இதனால், உடல்நலம் மேம்படும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.
இரத்த சோகை
வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக, ரத்த சோகை இருக்கிறது ரத்தத்தில் போலோட்கலின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது.
துவரம் பருப்பில் அபரிதமான ஃபோலோட்கள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
கொழுப்பினை குறைக்க
துவரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கின்றன. மேலும் இந்த துவரம் பருப்பில் குறைந்த அளவு கலோரி இருக்கிறது. குறைந்த அளவு கொழுப்பு சத்தினை கொண்டுள்ளது.
இதில் உள்ள நார்ச்சத்து வயிறு நிரம்பிய நிலையில் இருப்பது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உடல் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக நடைபெற துவரம் பருப்பு உதவுகிறது.
துவரம் பருப்பில் இருக்கும் பொட்டாசியம் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவு கொழுப்புச் சத்து, இதய நலத்தை அதிகப்படுத்துகிறது.
மேலும்
பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சமநிலையில் வைக்கிறது. நார்ச்சத்து, கொழுப்பு சேராமல் தடுக்கிறது. எதிர்பாராவிதமாக அடிபடும் போது, சிலருக்கு உடலில் அடிப்பட்ட பகுதிகளில் வீக்கம் ஏற்படும். மேலும், இது தீவிரமடைந்து,அலர்ஜியை உண்டாக்கும்.
இந்த துவரம் பருப்பை நாம் குழம்புகளிலும் பயன்படுத்துகிறோம் இதை தினமும் நாம் உணவில் சேர்த்து வருவதால் எண்ணற்ற பல நன்மைகள் நமக்கு கிடைக்கும் நாம் பயன்படுத்தும் உணவு பொருள் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற புரிதல் நமக்கு இருந்தால், ஆரோக்கியமான வாழ்வு நம்மிடம் நிலைக்கும்.
இதனையும் படிக்கலாமே
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
- மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாம் படிக்கவும்
7 Comments
Comments are closed.