மோர் பயன்கள் | Buttermilk Benefits in Tamil

மோர் பயன்கள் | Buttermilk Benefits in Tamil

இன்று தினமும் மோர் குடிப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை பற்றித்தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக நம் மதிய உணவில் சாம்பார், ரசம், மோர் என்று இறுதியில் மோர் சாப்பிட்டுதான் சாப்பிட்டு முடிப்போம்.

இப்படி முறைப்படுத்தி சாப்பிட கற்றுக் கொடுத்த நாம் முன்னோர்கள் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும், காரணம் இல்லாமல் இல்லை.

அதே போன்று கோவில் திருவிழாவின் போது நீர்மோர் பந்தல் கோடை காலம் வந்தால் அங்கங்கே நீர்மோர் பந்தல் என நம் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு இந்த மோருக்கு முக்கிய இடம் உண்டு.

சாதரணமாகவே நாம் அனைவரும் மோர் தாகத்தை மட்டும் போக்கும் என்று தான். ஆனால் தினசரி மோர் குடித்து வந்தாலே போதும் உடலில் பல நோய்கள் குணமடையும்.

மோர் தீமைகள்

வைட்டமின் குறைபாடு

இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் பி பன்னிரண்டு, கால்சியம், ரிபோஃப்ளேவின், பாஸ்பரஸ், புரதம், என்சைம்கள் அதிகம் உள்ள மோரில் கொழுப்பு சத்து மற்றும் கலோரி மிக மிக குறைவு. தினசரி குறைந்தது ஒரு டம்ளர் மோர் குடித்து வருவதன் மூலமாக உடலில் வைட்டமின் குறைபாடு ஏற்படுவதினை தடுக்கலாம்.

நீர் இழப்பு

உடல் வறட்சி, வியர்வை போன்றவற்றால் நீர் இழப்பு ஏற்படுகிறது. அதிலும் கோடையில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இதை ஈடு செய்யும் அருமையான மருந்து இந்த நீர்மோர். இதன் சுவை மட்டுமல்ல மருத்துவ குணங்களும் நிறைந்தது.

எனவே, தினமும் மோரைக் குடிப்பது நல்லது.

disadvantages of drinking buttermilk

கால்சியம்

கால்சியம் சத்தானது வலிமையான எலும்பிற்கும் பற்களின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியம். கால்சியம் சத்தானது தசைகள், நரம்புகள் இவற்றின் சீரான இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்று.

எனவே தினமும் மோர் குடித்து வந்தால் கால்சியம் குறைபாடு நீங்கும். மேலும் மலச்சிக்கலை குணப்படுத்தும். கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும். நம் உடல் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உதவும்.

எரிச்சல் குணமாக

ஒரு சில சமயங்களில் காரமான உணவினை உட்கொண்டால் சிறிது நேரத்திற்கு பின்னர் சில நேரங்களில் வயிறு எரிய ஆரம்பிக்கும். அப்படி, வயிறு எரியும் பொழுது, மோர் குடித்தால் அதில் உள்ள புரதம் காரத்தின் ஆற்றலை குறைச்சு விடும்.

அமில படலத்தால் ஏற்படக்கூடிய வயிற்று எரிச்சலினை குணப்படுத்தி வயிற்றினை குளிர்ச்சியடைய செய்து உடனடி நிவாரணம் தரும்.

இதனால், வயிறு எரிவது குறையும். அத்துடன் நெஞ்சு எரிச்சலுக்கும், இது நல்ல மருந்தாகும். அதே போன்று, சிலருக்கு மதியம் உணவை அதிகமாக சாப்பிட்டு விட்டால் வயிறு, உப்புசமாக இருக்கும்.

அப்பொழுது மோர் குடித்தால் வயிறு உப்புசம் உடனே நீங்கி விடும். மேலும், உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் எரிச்சல் தணியும். கண்களுக்கு, குளிர்ச்சியும் தரும்.

தினமும், மோரை குடித்து வந்தால் வாய் புண் நீங்கும். அதிலும் மோரினை விழுங்குவதற்கு முன்பாக சில நொடிகள் வாயிலே வைத்திருந்து பிறகு விழுங்கினால் விரைவான பலன் தரும்.

அதே போன்று அல்சர் என்ற வயிறு மற்றும் குடல் புண்களுக்கு மோர் ஒரு சிறந்த இயற்கை வைத்தியம். மேலும் குடலில் ஒட்டிக்கொள்ளும் எண்ணெய் பிசுபிசுப்பினைக் கூட சுத்தமாக நீக்கி விடும். மோரில் ப்ரோ பயோடிக் என்ற பாக்டீரியா உள்ளது.

இது குடலை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

buttermilk benefits in tamil

ரத்த அழுத்தம்

முக்கியமாக ஊட்டச்சத்து இதழ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி மோர் ரத்த அழுத்தத்தை, குறைக்கும் என்றும். மேலும் இதில் தனித்துவமான உயிர் செயலில் உள்ள புரதம், வைரஸ் எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருள், நிறைந்துள்ளதாகவும் தெரிவிக்கிறது.

மேலும் நிபுணர்களும் தினமும் டம்ளர் மோர் குடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகிறார்கள்.

நச்சுப் பொருட்கள்

உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. மேலும் கிருமி நாசினியாகவும், வைரஸ் எதிர்ப்பியாகவும் செயல்படுகிறது.

மேலு , உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதால் இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் சருமம் அழகாக மாறும்.

இதை பயன்படுத்தி பேசியல் கூட செய்யலாம். இது சருமத்தை பளிச்சென்று மாற்றி மென்மையாகவும் மாற்றக்கூடியது. முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையவும் இது உதவும்.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிடாய் நாட்களில் ஏற்படும் வயிற்று வலி ரத்தப் போக்கிற்கு ஒரு டம்ளர் மோருடன் வெந்தயம் சேர்த்துக் குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் மாதவிலக்கு காலங்களில் உண்டாகும் இரத்த போக்கை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள, வைட்டமின் பி இரண்டு நாம் உண்ணும் உணவை சக்தியாக மாற்ற உதவுகிறது.

மேலும் இது கல்லீரல் நன்றாக செயல்பட உதவும். மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

buttermilk advantages

உடல் உஷ்ணம் குறைய

இந்த மோரில் சீரகம், இஞ்சி, கொத்தமல்லித்தழை பொடியாக நறுக்கிய கருவேப்பிலை பெருங்கா மற்றும் தேவையான அளவு உப்பு இவற்றை சேர்த்துக் குடித்தால் வயிற்றுக்கு மேலும் நன்மை அளிக்கும்.

உடல் உஷ்ணத்தைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

மோர் செய்வது எப்படி

தயிரில் தண்ணீரைக் கலந்து குடித்தால் அது மோர் கிடையாது. ஒரு பாத்திரத்தில் தயிரினை ஊற்றி அதனுடன் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். மத்து கொண்டு கடைந்தால் தயிரில் இருக்கும் எண்ணெயும் தனியே பிரிந்து விடும். இப்படி வெண்ணெய் எடுத்தவுடன் கிடைப்பதுதான் மோர்.

butter fruit benefits in tamil

இதே போன்று, தினமும் செய்து வீட்டில் உள்ள அனைவரும், குடித்து வருவது, கோடையில் ஏற்படும் பல நோய்கள் வராமல் தடுக்கும். எனவே கண்ணில் பட்ட கெமிக்கல் கலந்த குளிர்பானங்களை சாப்பிடாமல் தினமும் இது போன்று மோரை சாப்பிட்டு வாருங்கள் மிகுந்த பலன்களை பெற முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

4 Comments

  1. Pingback: LSD sheet online

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning