ஆரஞ்சு பழம் சாப்பிடுவதினால் கிடைக்கும் 10 நன்மைகள்
ஆரஞ்சு என்றாலே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது வைடமின் சி அதிகம் நிறைந்தது என்பது மட்டும் தான்.
ஆனால் கமலா ஆரஞ்சில் வைடமன் சி மட்டுமில்லாமல் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து, வைடமன் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற பல சத்துக்கள் அடங்கி உள்ளது.
பழங்களிலே மிகக் குறைவான கலோரி கொண்ட பழம் மட்டும் இல்லாமல் நம் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை தரக்கூடியது இந்த கமலா ஆரஞ்சு.
கொலஸ்ட்ரால் அளவு சீராகும்
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுவர்கள் இந்த அரேஞ் பழத்தினை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இரத்தத்தில் இருக்க கூடிய கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும்.
அதுமட்டும் இல்லாமல் இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகபடியான கொலஸ்ட்ராலை கரைத்து வெளியேற்றுகிறது. இதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக இருக்கும்.
ஆரோக்கியமான இருதயத்திற்கும் மிகவும் நல்லது
கமலா ஆரஞ்சு கொலஸ்ட்ரால் குறைப்பது மட்டும் இல்லாமல் இருதயம் சீராக இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது.
இந்த கமலா ஆரஞ்சு உடலில் பொட்டாசியம் சத்து குறையும்போது தான் இருதயம் சம்பந்தமான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும்.
கமலா ஆரஞ்சில் பொட்டாசியம் என்னும் கணினிமசத்து அதிக அளவில் இருக்கிறது. இது இருதய சுவர்களுக்கு நல்ல வலு கொடுக்கிறது.
இது இருதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவியாக இருக்கிறது. எனவே இருதயம் சம்பந்தமான பிரச்சனைகளினால் அவதிப்படுபவர்கள் தினமும் ஒரு கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
கமலா ஆரஞ்சில் இருக்கக்கூடிய வைடமன் சி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.
இதில் இருக்கக்கூடிய பாலிஃபினால் என்னும் வேதிப்பொருள் உடலில் வைரஸ் தொற்றுகள் வராமல் தடுக்கிறது என்று பல்வேறு ஆய்வுகளை நிருபித்திருக்கிறார்கள்.
எனவே அடிக்கடி சளி, காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த கமலா ஆரஞ்சு சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
மலச்சிக்கல் தடுக்கப்படும்
தொடர் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த கமலா ஆரஞ்சினை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய அதிகபடியான நார்ச்சத்து குடலின் இயக்கத்தை சீராக இயக்கி மலம் எளிதில் வெளியேற உதவியாக இருக்கும்.
ஆகவே அடிக்கடி மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவர்கள் கமலா ஆரஞ்சினை சாப்பிட்டு வர மலச்சிக்கல் குணமாகும்.
கண்பார்வை தெளிவடையும்
கண் சம்பந்தமான பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய கரட்டினாயிடுகள் என்னும் வேதிப்பொருள் வைடமின் ஏ ஆகா மாறி கண் சம்பந்தமான பிரச்சனைகள் குணமாகும்.
எனவே கண் பார்வை மங்கலாக இருப்பவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர கண்பார்வை தெளிவடையும்.
உயர்ரத்த அழுத்தம் குறையும்
அதிக இரத்த அழுத்தம் பிரச்சனையால் அவதிப்படுவர்கள் இந்த கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
இதில் இருக்கக்கூடிய பெருடின் மட்டும் ப்ளோவநாய்டுகள் அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் இரத்த அழுத்தம் சீராக இருப்பதற்கும் உதவியாகஉள்ளது. எனவே அதிக இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுவர்கள் இந்த கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர மிகவும் நல்லது.
சிறுநீரக கற்களை கரைக்கும்
கற்கள் சம்பந்தமான பிரச்சனைகள் அவதிப்படுபவர்கள் இந்த கமலா ஆரஞ்சு பழ சாற்றினை குடித்து வர சிறுநீரகக் கற்கள் கரைந்து வெளியேறும்.
ஆரம்ப கட்டத்திலேயே கற்கள் உருவாகாமல் தடுக்க கூடியது.
பொலிவான சருமத்தை தரக்கூடியது
இந்த கமலா ஆரஞ்சு பழத்தில் பீட்டா கரோட்டின் என்னும் சக்தி வாய்ந்த அன்டி ஆக்சிடன் அதிக அளவில் இருக்கிறது.
கமலா ஆரஞ்சு ஐ தினமும் சாப்பிட்டு வர, சூரியக் கதிர்களினால் சரும செல்கள் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமலும் தடுக்கிறது.
மூட்டுவலி குணமாகும்
மூட்டுகளில் வலியோ அல்லது வீக்கமும் இருந்தால் கமலா ஆரஞ்சு பழச்சாற்றினை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.
இதில் இருக்கக்கூடிய நோய் எதிர்ப்பு பொருள் மூட்டுகளில் இருக்கக்கூடிய வீக்கத்தை குறைத்து, மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கக்கூடியது.
ஆரோக்கியமான விந்தணுக்கள்
ஆண்கள் இந்த கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர, இதில் இருக்கக்கூடிய போலைட் என்னும் ஊட்டச்சத்து ஆண்களின் விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் மற்றும் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.
3 Comments
Comments are closed.