முடக்கத்தான் கீரை பயன்கள் | Mudakathan keerai benefits in Tamil

முடக்கத்தான் கீரை பயன்கள் | Mudakathan keerai benefits in Tamil

முடக்கத்தான் கீரை பயன்கள்-அந்தக் காலங்களில் உடம்புக்கு வாயுத்தொல்லை, மலச்சிக்கல், மாதவிலக்கு, தலையில் முடி உதிர்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கும் பாட்டிமார்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள முடக்கத்தான் கீரையைப் பறித்து வந்து ரசமோ அல்லது தோசையாகவோ செய்து கொடுப்பார்கள்.

அதன் பிறகு உடலில் பல தற்காலிக நோய்கள் கிட்டவே நெருங்காது.

ஆனால் தற்காலத்தில் அலோபதி மாத்திரைகளை நம்பி ஓடுகிறோம்.

அது ஏதாவது ஒரு பக்க விளைவுகளை கொடுக்காமல் போகுமா? உண்மையில் முடக்கத்தான் கீரையில் எத்தனை எத்தனை நன்மைகள் இருக்கின்றது தெரியுமா?

தொடர்ந்து படியுங்கள் பிடித்திருந்தால் உங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் பகிருங்கள் மீண்டும் நமது பாரம்பரிய மருத்துவத்தினை அனைவரும் அறியும் படி செய்வோம்.

“சூலை பிடிப்பு சொறி சிரங்கு வன் கரப்பான் காலைத் தொட்டு வழியும் கண் மலமும் சால கடக்க தான் ஓடிவிடும் காசினியை விட்டு” முடக்கற்றான் தனிமொழி என்று ஒரு சித்தர் பாடல் முடக்கத்தான் கீரை பெருமையை பறைசாற்றுகின்றன.

இதற்கு அர்த்தம் கீழ் பிடிப்பு, கிரந்தி கரப்பான் பாதத்தில் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கத்தான் கீரை உபயோகித்தால் உடலை விட்டு ஓடி விடும் என்பதே அதன் அர்த்தம்.

முடக்கத்தான் இலையில்

  • ஈரப்பதம் 83.30%
  • புரதச் சத்து 4.70%,
  • கொழுப்புச் சத்து 0.60%,
  • மாவுச்சத்து 9.10%,
  • தாதுச்சத்து 2.30%

முடக்கு அறுத்தான் என்பதே மருவி முடக்கரு தான் என்றும் முடக்கறான் என்றும் அழைக்கப்படுகின்றது.

முடக்கத்தான் கீரை பயன்கள் Mudakathan keerai benefits in Tamil

மூட்டு வலி

முடக்கு வாத நோய் மூட்டுகளை முடக்கி வைக்கிறது. இந்த கீரை முடக்கு வாத நோயினை சரி செய்வதால் முடக்கத்தான் என பெயர் பெற்றது.

மூட்டு வலியிலிருந்து குணமடடைய ஆமணக்கு எண்ணையில் முடக்கத்தான் இலையினை நன்கு நலைத்து மூட்டு பகுதியில் தேய்க்க வேண்டும்.

பெண்களுக்கு ஏற்றது

மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு முடக்கத்தான் கீரை மிகவும் நல்லது.

பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரை சாறு, ஒரு மேசை கரண்டி போதும்.

சுகப்பிரசவம் உண்டாவதற்கு இந்த முடக்கத்தான் கீரையை நன்கு அரைத்து அதனை கர்ப்பிணி பெண்கள் அடிவயிற்றில் அடிக்கடி கட்டி வரவேண்டும்.

முடக்கத்தான் கீரை பயன்கள் Mudakathan keerai benefits in Tamil

வாயு பிரட்சனை

வாயு சமபந்தபட்ட பிரச்சனைகள் உடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.

மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடக்கத்தான் ரசம் வைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள வாயுகலைந்து வெளியேறிவிடும்.

வாயு வாதம் நாள்பட்ட மலச்சிக்கல் சம்மந்தப்பட்ட எல்லா கோளாறுகளும் நீங்கும்.

பொடுகு

பெரும்பாலானோர் பொடுகு தொந்தரவினால் அவதிப்படுகிறார்கள்.

இவர்கள் முடக்கத்தான் இலையினை கொண்டு ஆட்டப்பட்ட எண்ணையயைவ தலைக்கு தேய்த்து வருவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம்.

முடக்கத்தான் கீரை பயன்கள் Mudakathan keerai benefits in Tamil

மூலம்

நீண்ட நாட்கள் மலசிக்கல் மற்றும் நார் சத்து குறைவான உணவுகளினை சாப்பிடுவதாலும் மூலம் ஏற்படுகிறன்றது.

தினமும் சிறிதளவு முடக்கத்தான் கீரையினை பச்சையாக சாப்பிட்டு வந்தால் மூல நோய்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

தோல் வியாதிகள்

முடக்கத்தான் கீரை தோல் சார்ந்த அணைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக உள்ளது. இந்த கீரையினை நன்கு மை போன்று அரைத்து கொள்ளவும்.

அதனை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சைனைகளான சொறி சிரங்கு, படர்தாமரை போன்ற பிரச்சனைகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் குணமாகும்.

முடக்கத்தான் கீரை பயன்கள் Mudakathan keerai benefits in Tamil

தலைவலி

ஜலதோஷம் மற்றும் ஒரு சில காரணங்களினால் சிலருக்கு கடுமையான தலைவலி ஏற்படுகின்றது.

எனவே வெண்ணீரில் முடக்கத்தான் இலைகளை நன்கு கசக்கி விட்டு ஆவி பிடிப்பதன் மூலமாக தலைவலி நீங்கும்.

முடக்கத்தான் கீரை பயன்கள் Mudakathan keerai benefits in Tamil

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி

ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் இலை காம்பு, தண்டு இவைகளை ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் அளவுக்கு தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வைத்து கொள்ளவும்.

அந்த நீரை மட்டும் வடித்து சாதாரண புளி ரசம் வைப்பது போல அந்த நீரில் புலி கரைத்து மிளகு, பூண்டு, சீரகம் சேர்த்து ரசம் தயாரிக்க வேண்டும்.

முடக்கத்தான் கீரை தோசை செய்வது எப்படி

முடக்கத்தான் கீரை தோசை செய்ய இரண்டு கோப்பை புழுங்கல் அரிசியை ஊற வைத்து அத்துடன் இரண்டு கைப்பிடி முட கற்றான் கீரையையும் உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து தோசை போல சுட்டு சாப்பிடலாம்.

இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.

நல்ல காரமான சட்னி உடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இதனால் பல நோய்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும். நீண்ட நாட்கள் இயற்கை தரும் உணவே மருந்து என்பதை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.

முடக்கத்தான் கீரை பயன்கள் Mudakathan keerai benefits in Tamil

இதனையும் படிக்கலாமே

 

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning