ப்ரோக்கோலி பயன்கள் | Broccoli Benefits in Tamil
ப்ராக்கோலி பார்ப்பதற்கு, பச்சை காலிஃபிளவர் போன்று இருந்தாலும் இது முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த காய்கறி ஆகும்.
இது மிக அதிகமான மருத்துவ நன்மைகள் கொண்டது. பழங்காலத்தில் ரோமானியர்களின் உணவில் ப்ராக்கோலியை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.
இதில் உள்ள அதிக மருத்துவ நன்மைகள் தெரிய வந்ததால் தற்போது உலகெங்கிலும் ப்ராக்கோலியை அதிகம் விரும்பி சாப்பிடுகிறார்கள். உண்மையில் இதில் கணக்கில் அடங்காத சத்துக்கள் உள்ளதால் மருத்துவர்கள் கூட இதை அதிகம் பரிந்துரை செய்கின்றனர்.
முக்கியமான வைட்டமின்கள் மற்றும் கனிம சத்துகள் கொண்ட இதில் மிகக்குறைந்த அளவு கலோரிகள் அதிக நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜன்கள் நிறைந்துள்ளன.
சருமம்
இதிலுள்ள, விட்டமின் A, மற்றும், வைட்டமின் C சத்துக்கள் சருமத்தில் ஈரப்பதம் குறையாமல் பாதுகாப்பதோடு, தோலில் சுருக்கம் ஏற்படாமல் தடுத்து தோலில் பளபளப்பு தன்மை அதிகரித்து இளமையுடன் வைக்கிறது.
மேலும் இது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மை அதிகரிக்க உதவும். இது இறந்த அணுக்களை வெளியேற்றி புதிய அணுக்களை சருமத்தில் உற்பத்தி செய்ய உதவுகிறது. அதே போன்று ப்ராக்கோலி சருமத்திற்கு மட்டுமில்லாது தலைமுடிக்கும் சேவையான போஷாக்கை தருகிறது.
வலிமையான எலும்பு
இதில் உள்ள விட்டமின் K, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் போன்ற சத்துக்கள் ஒருங்கிணைந்து எலும்பின் வலிமையை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
முக்கியமாக எலும்புகளுக்கு வைட்டமின் K சத்து மிக முக்கியம். அந்த வகையில் இந்த வைட்டமின் K சத்து உள்ள இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் எதிர்காலங்களில் எலும்புப்புரை (osteoporosis) எனப்படும் எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்க முடியும்.
அஜீரண பிரச்சனை
இந்த ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் அஜீரண பிரச்சனைகள் வராது.
காரணம் இதிலுள்ள அதிக நார்ச்சத்து தான். பொதுவாக தினமும் நமது உடலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றவும், பெருங்குடல் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிப்பது அவசியம்.
அந்த வகையில் ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கலை குறைத்து, செரிமான பாதையை சீராக இயங்க வைக்கும்.
இன்னும் சொல்லப் போனால் இது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை செயலிழக்கச் செய்து உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றம் செய்கிறது.
இதய ஆரோக்கியம்
இது தமனிகளுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதைத் தடுக்கிறது. காரணம் ப்ராக்கோலியில் உள்ள அதிகப்படியான போலிக் அமிலம்.
இதய ஆரோக்கியத்திற்கு உதவக்கூடியது. மேலும் இதில் இருக்கும் பாலிபினால்கள் இதய செயல்பாடுகளை மேம்படுத்த கூடியது. இதில் உள்ள வைட்டமின் C இதயத்திற்கு மிகவும் நல்லது.
ஞாபக சக்தி
மூளை ஆரோக்கியம் மற்றும் நரம்பு திசு செயல்பாட்டிற்கு நன்மை அளிக்கக்கூடியது இந்த ப்ராக்கோலி.
வெண்டைக்காய் மற்றும் வல்லாரைக்கீரை போன்றே இதுவும் ஞாபக சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
எனவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதனை வாரத்தில் இரண்டு முறை எடுத்துக்கொண்டால் நிச்சயம் ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.
முக்கியமாக வயதான காலத்தில் ஏற்படும் ஞாபக மறதியை தடுக்கக் கூடியது இந்த ப்ராக்கோலி.
தைராய்டு
இந்த ப்ராக்கோலியில் இருக்கும் சத்துகள் தைராய்டு சுரப்பி சீராக செயல்பட உதவுகிறது. இதனால் எந்த வகை தைராய்டாக இருந்தாலும் இதனை குணப்படுத்த இது பெரிதும் உதவுகிறது.
ரத்த சர்ககரை
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவே கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. காரணம் இதில் உள்ள குரோமியம் சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தக்கூடியது. மேலும் இன்சுலின் சுரக்கும் அளவையும் அதிகரிக்கும்.
புற்றுநோய்
புற்றுநோய்க்கு எதிராக செயல்படக்கூடியது. பெருங்குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மார்பக புற்றுநோய், இப்படி அனைத்து புற்றுநோயையும் அழிக்கும் சக்தி ப்ராக்கோலிக்கு உண்டு.
காரணம் ப்ராக்கோலியில் சல்பர் எனப்படும் வேதிப்பொருள் அதிகம் உள்ளது. இது, புற்றுநோய் செல்களின் அடிப்படை வளர்ச்சியை அழிக்கக் கூடியது.
கண் பார்வை
வயசு அதிகரிக்கும் பொழுது, கண்புரை போன்ற கண் நோய்கள் ஏற்படும். அந்த வகையில் இதை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் கண் நோய்கள் வராமல் இருக்கும்.
காரணம் இதிலுள்ள வேதிப்பொருள் கண் ஆரோக்கியத்திற்கு பயன்படக்கூடியவை. மேலும் ப்ராக்கோலிஇல் உள்ள வைட்டமின் C, மற்றும், வைட்டமின் B two ஆகியவையும் பார்வைத்திறன் மேம்பட உதவும்.
இரத்த சோகை
நாம் சாப்பிடு உணவில் இரும்பு சத்து குறைந்தால் இரத்த சிவப்பு அணுக்களின் அளவும் குறையும். இதனால்ரத்த சோகை ஏற்படும்.
இதில் இருக்கும் வைட்டமின் C நமது உடலில் இரும்பு சத்து அதிகரிக்க உதவும் என்பதால் தொடர்ந்து இதை உணவில் சேர்த்து வந்தால் ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.
முக்கிய குறிப்பு
ப்ராக்கோலியை எண்ணெயில் பொரித்தால் அதில் இருக்கும் வைட்டமின் C, புரதச் சத்துக்கள் மற்றும் மினரல்களை இழக்க நேரிடும்.
இதை ஆவியில் வேக வைத்தால் சத்துக்களை இழக்காமல் பாதுகாக்கலாம். அதிகமாக வைத்த ப்ராக்கோலியில் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலும் ஆன்டிஆக்ஸிடென்ட் தன்மையும் குறைந்துவிடும்.
பச்சையாக அரை வேக்காடாக சாலட் போன்று சாப்பிடுவது மிகுந்த பலனைத் தரும். எனவே காலை உணவு மதிய உணவு மற்றும் இரவு உணவு என அனைத்து நேரங்களிலும் ப்ராக்கோலியை உணவாக சாப்பிடலாம்.
ஒரு கப் பச்சை ப்ராக்கோலியில் வெறும் இருபத்தைந்து கலோரிகள் மட்டுமே உள்ளது. அதிலும் ஐந்து கிராமுக்கும் குறைவான கார்போஹைட்ரேட் மட்டுமே உள்ளது.
முக்கியமாக இதில் கொழுப்புகள் சிறிதும் இல்லை. இந்த ப்ராக்கோலியை நம் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் நோய்களை கிட்டவே நெருங்க விடாது.
இதனையும் படிக்கலாமே
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- கொடுக்காப்புளி பயன்கள் | Kodukapuli Benefits Tamil
- கரும்பு சாறு நன்மைகள் | Sugarcane Juice Benefits in Tamil
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
12 Comments
Comments are closed.