குதிகால் வெடிப்பு நீங்க | Patha Vedippu Neenga Tips in Tamil

குதிகால் வெடிப்பு நீங்க | Patha Vedippu Neenga Tips in Tamil

பாதத்தில் உள்ள தோல் பகுதியானது வறட்சி ஏற்படும் போது பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு புண்கள் உருவாகின்றன.

புண் ஏற்பட்ட பின்பு தான் நமது உடலில் பாதம் என்று ஒரு பகுதி இருப்பதனை உணர்கின்றோம்.
நம் முகத்திற்கு அழகு சேர்க்கக்கூடிய ஆர்வத்தில் 50 சதவிகித அக்கறையாவது நமது கால் பாதங்களுக்கும் காட்ட வேண்டும்.

பாத வெடிப்பு என்று சொல்லக்கூடிய பித்த வெடிப்பானது எதனால் ஏற்படுகின்றது? வராமல் தடுப்பது எப்படி என்று பார்ப்போம்.

patha vedippu treatment in tamil

பாத வெடிப்பு ஏற்பட காரணம்

அதிக உடல் எடையும், தோல் வறட்சி இவை இரண்டும் தான் பாத வெடிப்பிற்கு முக்கிய காரணிகள் ஆகும்.
மேலும் நமது உடலில் நீர் சத்து பற்றாக்குறை ஏற்படும் பொழுது தோல் வறண்டு வெடிப்புகள் ஏற்படும்.

தைராய்டு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள் மற்றும் தினசரி குறைவான அளவில் தண்ணீர் குடிப்பவர்கள், இவர்களுக்கு கால்களில் வெடிப்பு ஏற்படும்.

குளிர்காலம் வந்துவிட்டாலே இயற்கையாகவே தோலில் வறட்சி ஏற்பட்டு பாதத்தில் வெடிப்புகள் ஏற்படும்.

நமது பாதத்தில் உள்ள தோல் சற்று தடிமனாக இருக்கும். ஏனென்றால் ஒரு கொழுப்பு அடுக்கு இருக்கும்.

உடல் எடை அதிகரிக்கும் சமயங்களில், நடக்கும் பொழுது அந்த கொழுப்பு அடக்கு இடம் மாறி, மாறி தோலில் வெடிப்புகள் உண்டாகும்.

Tips 1

தினசரி இரவில் தூங்குவதற்கு முன்னதாக பாத வெடிப்புகள் உள்ள இடத்தில் கடுகு எண்ணெய் தடவி சற்று நேரம் வரை மசாஜ் செய்து வருவதன் மூலமாக பாத வெடிப்பானது குணமாகும்.

Tips 2

வேப்பிலை மற்றும் மருதாணி, பச்சை மஞ்சள் ஆகிய மூன்றையும் சிறிதளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து பாத வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் பத்து போன்று போட்டு வருவதன் மூலமாக வெடிப்புகள் சரியாகும்.

patha vedippu marunthu

Tips 3

தேன், சுண்ணாம்பு ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்த கலவையினை இரவு தூங்க செல்வதற்கு முன்னதாக பாத வெடிப்புகள் உள்ள இடங்களில் தடவி வருவதன் மூலமாக பாத வெடிப்புகள் மறையும்.

Tips 4

தினசரி குளிக்க செல்லும் பொழுது சுரசொரப்பான கற்களை கொண்டு, பாதங்களை தேய்த்து வருவதன் மூலமாக வெடிப்புகள் மறையும்.

Tips 5

பப்பாளி பழத்தின் நன்றாக அரைத்து பாத வெடிப்புகள் உள்ள இடங்களில் தேய்த்து வருவதன் மூலமாக குதிகால் வெடிப்பானது மறையும்.

Tips 6

தினசரி இரவு தூங்கச் செல்வதற்கு முன்னதாக தேங்காய் எண்ணெய் குதிகால் வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி சற்று மசால் செய்து வருவதன் மூலமாக வெடிப்புகள் சரியாகும்.

Tips 7

ஒரு பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி அளவு சர்க்கரையை எடுத்துக் கொள்ளவும் அதனுடன் தேங்காய் எண்ணெய் சிறிதளவு சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

கலந்து வைத்த கலவையினை குதிகால் வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தினசரி இரண்டு முறையாவது செய்து வருவதன் மூலமாக கால்களில் உள்ள வெடிப்பு சரியாகும்.

Tips 8

விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்து அதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.

குதிகால் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரத்திற்கு பின்னர் கழுவினால் வெடிப்பு சரியாகும்.

பாத வெடிப்பு

Tips 9

வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பி6 ஆகிய சத்துக்கள் சருமத்தின் மென்மையினை மேம்படுத்தி நன்கு நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

மேலும் இது பாதங்களை ஈரமாக்குகிறது. தோல் வறட்சி ஏற்படுவதை தடுக்கின்றது.

நன்கு பழுத்த வாழைப்பழத்தினை பேஸ்ட் போன்று நன்றாக பிசைந்து வைத்துக் கொள்ளவும் அந்த பேஸ்டிணை கால் பாதங்களில் தேய்த்து 20 நிமிடத்திற்கு பின்னர் கால் பாதங்களை சுத்தம் செய்யவும்.

இவ்வாறு செய்து வந்தால் பாத வெடிப்புகள் விரைவில் குணமாகும்.

Tips 10

தேன் பயன்படுத்தி பாத வெடிப்புகளை சரி செய்யலாம் இது சருமத்தினை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளவும் வறண்டு போகாமல் தடுக்கவும் உதவுகிறது. தேனின் இனிமையான பண்பு என்னவென்றால் சருமத்திற்கு உயிர் பெற வைக்க உதவும்.

ஒரு கப் தேனை வெதுவெதுப்பான நீரில் கலந்து வைத்துக் கொள்ளவும். இந்த கலவையினை பாதங்களில் தடவி 20 நிமிடம் வரை மசாஜ் செய்யவும் பின்னர் கால் பாதங்களினை சுத்தம் செய்யவும்.

இவ்வாறு ஒரு சில வாரங்கள் செய்து வந்தோம் எனில் குதிகால் வெடிப்பு இருந்த இடம் தெரியாமல் போகும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning