மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

மருதாணி இலைகள் என்பது, அழகிற்காக பயன்படுவது மட்டுமின்றி, பல உடல் உபாதைகளை குணமாக்கும் தன்மை கொண்டது.

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் பிடித்தமான ஒன்று மருதாணி அதிலும் பெண்பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று அவர்கள் தங்களது உள்ளங்கைகளிலும் நக கனவுகளிலும் வைத்து அழகு பார்ப்பார்.

மருதாணி இலைகளின் எண்ணற்ற நன்மைகளை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

உடற் குளிர்ச்சி

உடலுக்கு அதிக நன்மைகளை தரும் மருதாணி இலையானது கைகளில் வைக்கும் பொழுது நன்கு சிவப்பு நிறத்தை அழித்து பார்ப்பதற்கு அழகாக இருப்பது மட்டுமின்றி உடலுக்கு குளிர்ச்சி தன்மையும் தரக்கூடியது.

இது அனைவருக்கும் தெரிந்ததுதான் ஆனால் அதை தவிர்த்து இதில் நன்மைகள் நிறைந்துள்ளன.

தோல் நோய்

தோல் நோய்களை போக்கும் மருத்துவ குணங்கள் மருதாணி இலைகளில் அதிகம் நிறைந்துள்ளது.

தீக்காயங்கள் ஏற்படும் பொழுது அதன் மேல் மருதாணி இலைகளை அரைத்து தொடர்ந்து தடவி வரும் பொழுது எரிச்சல், வலி குறைந்து புண்கள் விரைவில் ஆறி வரும்.

கிருமி தொற்று

கிருமித் தொற்றின் காரணமாக உடம்பில் உங்கள் ஏதேனும் ஏற்பட்டால் ஆறாமல் அப்படியே இருக்கும் நாளடைவில் அது தழும்பாக வர வாய்ப்புகள் உள்ளது.

இது போன்ற இடங்களில் மருதாணியை அரைத்து பற்றாக போட வேண்டும் அவ்வாறு போடுவதன் மூலமாக அதில் கிருமி தொற்றுகள் ஏற்படாமல் தழும்புகள் உருவாகுவதை தடுக்கக்கூடிய குணமும் கொண்டது.

மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

மிருதுவான சருமம்

ஒரு சிலருக்கு மிகவும் சொரசொரப்பான கடினமாக கைகள் இருக்கும். அவர்கள் மருதாணி இலைகளை நன்றாக அரைத்து சாறு சாருமதில் சொரசொரப்பாக உள்ள இடங்களில் தடவவும்.

அவ்வாறு தடவி வருவதன் மூலமாக சொரசொரப்பு தன்மை குறையும். எனவே சொரசொரப்பு நீங்கி மிருதுவான சருமம் தோற்றம் ஏற்படும்.

மன அழுத்தம்

மருதாணி இலை அரைத்து உள்ளங்களுக்கு விரல் நகத்திற்கு மற்றும் கால் நகத்திற்கு வைப்பதன் மூலமாக உடல் குளிர்ச்சி அடைகிறது.

எனவே மன அழுத்தத்தை குறைத்து, இதய படபடப்பு, உடல் சூடு, பதற்றம் தலை வலி, மாதவிடாய் வலி, கோபம் போன்ற பிரச்சனைகளையும் குறைக்கும் சக்தி கொண்டது.

நகச்சுத்தி

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை கைகளுக்கும் கால்களுக்கும் வைத்து வரவேண்டும்.

அவ்வாறு வைப்பதன் மூலமாக நகங்களில் புண்கள், நகச்சுத்தி, கிருமி தொற்றுகள் ஏற்படும் பொழுது, மருதாணி இலைகளை அரைத்து வைத்தால், மிக விரைவில் மேற்கூறிய தொந்தரவுகள் குணமாகும்.

மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

பொடுகு

பொடுகு தொந்தரவு உள்ளவர்கள் பல்வேறு சிகிச்சை முறை இணையும் பாம்புகளையும் பயன்படுத்தி இருப்ப ஆனால் அதில் எதுவும் பலனளிக்காது.

வேப்ப இலைகளையும், மருதாணி இலைகளையும் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் இட்டி காய்ச்சி தலைக்கு தேய்த்து வரும் பொழுது பொடுகு தொந்தரவு விரைவில் மறைய தொடங்கும்.

சொறி சிரங்கு

இந்த எண்ணெய்யை சொறி கொப்பளம் சிரங்கு புண்கள் போன்றவற்றின் மீது தேய்த்து வரும் பொழுது விரைவில் இந்த தொந்தரவுகள் அனைத்தும் குணமாகும்.

இரத்தம் சீராக

மருதாணி இலைகளை இரவில் ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இலைகளை நீக்கிவிட்டு, வெறும் வயிற்றில் அருந்தி வரும்பொழுது, இரத்த அழுத்தம் சீராகும். இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

ஆறாத புண்கள்

மருதாணி இலைகளுடன், சுத்தமான மஞ்சள் சிறிதளவு சேர்த்து அரைத்து சர்க்கரை வியாதியினால் ஏற்படும், ஆறாத புண்களின் மீது வைத்து, தொடர்ந்து கட்டி வரும் பொழுது, புண்கள் விரைவில் ஆறி வருவதை கண் கூட பார்க்க முடியும்.

தூக்கமின்மை

மன அழுத்தங்கள் அதிகரிக்கும் காரணத்தினாலும் உடலில் நரம்பு மண்டலங்கள் பாதிக்கப்படுவதாளும் தூக்கமின்மை பிரச்சினையானது உருவாகின்றது.

மருதாணி எண்ணெயினை தூங்குவதற்கு முன்பு தலையில் தேய்த்து கொள்வதன் மூலமாக உடல் குளிர்ச்சியடைகிறது.

ஆகவே உடலில் உள்ள வெப்பம் அனைத்தும் குறைந்து நரம்புகள் குளிர்ச்சி அடைகின்றன.

இதனால் இரவு நேரங்களில் ஆரோக்கியமான தூக்கம் வரும்.

மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

கல்லீரல்

கல்லீரலானது உடலில் உள்ள நச்சு கிருமிகளை உடலில் இருந்து வெளியேற்ற முக்கிய பங்கு வகிக்கின்றது.

மருதாணி இலைகளை கொஞ்சம் எடுத்து நீரில் அலசி விட்டு தூய்மையான தண்ணீரில் நன்றாக ஒரு சில மணி நேரங்கள் ஊற வைக்கவும்.

அந்த நீரை வடிகட்டி அருந்துவதன் மூலமாக கணையம் கல்லீரல் பித்தப்பை போன்ற உறுப்புகளில் தங்கியிருக்கக் கூடிய நச்சுக்கள் அனைத்தும் உடலில் இருந்து வெளியேறும்.

மருதாணி மருத்துவ குணங்கள் | Maruthani Uses in Tamil

வீக்கம்

உடலில் ஒரு சில பகுதிகளில் கீழே விழுந்து அடிபட்டாலோ அல்லது ஒரு சில சமயங்களில் நம்மை அறியாமல் சுளுக்கு ஏற்படுகின்றது.

மருதாணி இலையில் இருந்து பெறப்பட கூடிய எண்ணெய்களை கொண்டு வீக்கம் ஏற்பட்ட இடங்களில் நன்றாக மசாஜ் செய்வது போல் செய்வதன் மூலமாக வீக்கங்கள் குறைந்து உடல் ஆரோக்கியமாகும்.

இத்தனை நன்மைகள் இந்த மருதாணி இலைகளில் நிறைந்துள்ளன.

ஆனால், மேற்கூறிய நன்மைகள் அனைத்தும் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல்கள் கலந்த மருதாணியை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்

Related Searches

maruthani leaf,maruthani uses in tamil,maruthani medicinal uses,maruthani in tamil,மருதாணி,மருதாணி தீமைகள்,மருதாணி பயன்கள்,மருதாணி தலைமுடி.

 

 

Related Posts

3 Comments

  1. Pingback: arduino
  2. Pingback: โคมไฟ

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning