தொண்டை கரகரப்பு நீங்க | Throat Pain Home Remedies in Tamil

தொண்டை கரகரப்பு நீங்க | Throat Pain Home Remedies in Tamil

பருவநிலை மாறும் பொழுது சிலருக்கு ஒவ்வாமையினால், சளி, இருமல், தொண்டை புண் ஏற்படக்கூடும். இதில், தொண்டைப்புண் அதிகமாகும் பொழுது காய்ச்சல் வர ஆரம்பிக்கும்.

எனவே தொண்டை புண்ணை ஆரம்பத்திலேயே சரி செய்தால் காய்ச்சல தவிர்த்து நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுவதை தடுத்து விடலாம்.

இப்பொழுது தொண்டை புண்ணை குணமாக்க வீட்டிலேயே செய்யக்கூடிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.

மிளகு

மிளகை வாணலியில் போட்டு நன்கு வறுத்து பின் அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு அந்த நீரை சூடாக குடித்தால் தொண்டையில் உள்ள கிருமிகள் அழிக்கப்பட்டு தொண்டைப்புண் உடனே குணமாகும்.

இஞ்சி

இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மை இருப்பதால் இது எந்த வகையான கிருமியானாலும் எளிதில் அழுத்திவிடும்.

எனவே, சிறிது இஞ்சி ஜூஸ் குடித்து வந்தால் தொண்டைப்புண் உடனே குணமாகும்.

தொண்டை கரகரப்பு நீங்க

பூண்டு

இஞ்சியைப் போன்றே பூண்டிலும் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. எனவே தொண்டைப் புண் இருக்கும் பொழுது நாலு தேக்கரண்டி வெதுவெதுப்பான பூண்டு ஜூஸ் குடித்து வந்தால் உடனே குணமாகிவிடும்.

ஆரஞ்சு ஜூஸ்

இதில் vitamin C அதிகம் இருப்பதால், இதை அடிக்கடி சாப்பிட்டு வரும்பொழுது தொண்டைப்புண் மற்றும் தொண்டை வலி குணமாகும்.

புதினா

இஞ்சி பூண்டு போன்றே புதினாவிலும் பூஞ்சை எதிர்ப்பு தன்மை உள்ளது. எனவே இதனை சாறு எடுத்து அதில் சிறிது தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும் தொண்டைப்புண் உடனே குணமாகும்.

உப்பு

உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்து வந்தாலும் தொண்டைப்புண் குணமாகும்.

throat pain remedies in tamil

தேன்

தேனில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. அதிலும் தேனுடன் மிளகுத்தூள் கலந்து சாப்பிட்டால் தொண்டைப்புண் மற்றும் இருமல் இருந்தால் குணமாகிவிடும்.

வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைச் சாற்றை கலந்து குடித்து வந்தாலும் தொண்டைப்புண் குணமாகும்.

இங்கே சொல்லப்பட்ட தீர்வுகளில் ஏதேனும் ஒன்றை தொடர்ந்து செய்து வரும் பொழுது தொண்டைப்புண் குணமாகும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

2 Comments

  1. Pingback: lasik

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning