கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil

கசகசா பயன்கள் | Kasa Kasa Health Benefits in Tamil

பாப்பி சீட்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கசகசா மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற பயன்களை அளிக்கக்கூடியது.

இந்த பாப்பி விதைகள் பாப்பி எண்ணும் மலர் தாவரத்தில் இருந்து பெறப்படும் எண்ணெய் விதைகள் ஆகும்.

நார்ச்சத்து

கசகசா விதைகளில் கரையாத நார்ச்சத்துக்கள் மிக அதிகமாக இருப்பதால் இது முறையான செரிமானத்திற்கு உதவுவதோடு மலச்சிக்கலை முற்றிலுமாக ஒழிக்கின்றது.

இது உடலின் இயக்க அமைப்பை மேம்படுத்தி அமிலத்தன்மை, நெஞ்செரிச்சல், வாயு உற்பத்தி போன்ற நோய்களிலிருந்து நிவாரணம் அளிக்கின்றது.

தூக்கம்மின்மை

கசகசாவை மாதுளம் பழச்சாற்றில் ஊற வைத்து அரைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை தீரும்.

சீதபேதி

இரண்டு தேக்கரண்டி அளவு கசகசாவை கால் டம்ளர் பாலில் ஊற வைத்து பசை அரைத்து அதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.

வாய்ப்புண்

வாய்ப்புண் பிரச்சனைக்கு கசகசாவை பொடித்த சர்க்கரை மற்றும் கொப்பரை தேங்காய் துருவலுடன் சேர்த்து, சிறு பிடித்து சாப்பிட்டு வர வாய்ப்புண்ணில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கசகசா பயன்கள் Kasa Kasa Health Benefits in Tamil

வயிற்றுப் போக்கு

வயிற்றுப் போக்கு ஏற்படும் போது சிறிதளவு கசகசாவை எடுத்து, வாயில் போட்டு, நன்றாக மென்று, கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப் போக்கு குறையும்.

எலும்புகள்

கசகசா விதைகள், எலும்புகளையும், அத்துடன் தொடர்புடைய திசுக்களையும் பலப்படுத்தக் கூடிய இயற்கையான மூலக்கூறு ஆகும். இதில் செறிந்துள்ள பாஸ்பரஸ் எலும்புத் திசுக்கள , உறுதிப்படுத்துகின்றது.

எலும்புகளின் தீவிரமான காயங்களில் இருந்து கசகசா விதைகளில் உள்ள மாங்கனீஸ் காப்பாற்றுகிறது.

உடல் பலம்

மேலும் கசகசா முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, தலா நூறு கிராம் எடுத்து அரைத்துக் கொள்ளவும். இது ஒரு தேக்கரண்டி பொடியை காலை, மாலை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும்.

நோய் எதிர்ப்பு சக்தி

கச கசா விதைகளில் உள்ள துத்தநாக மற்றும் இரும்பு சாத்து ஆகியவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது. மேலும் உடலுக்கு நோய் ஏற்பட காரமாக உள்ள நுண்ணுயிரிகளை எதிர்த்து போராட உதவுகின்றது.

இதிலுள்ள துத்தநாக மூலக்கூறுகள் சுவாசக் கோளாறுகளை சரி செய்வதில் முக்கியமாக தொடர்பு கொண்டுள்ளது. மேலும் இந்த விதைகள் உடலில் எதிர்ப்பு செல்களின் உற்பத்திக்கு உதவுகின்றது. கசகசாவில் அடங்கியுள்ள முக்கிய மூலக்கூறான துத்தநாகம் தைராய்டு சுரப்பியின் இயக்கத்திற்கு உதவுகின்றது.

கசகசா பயன்கள் Kasa Kasa Health Benefits in Tamil

அயோடின் குறைபாடு

அயோடின் சேர்க்கப்பட்ட கசகசம் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தைராய்டு செயல்பாட்டில் பிழை ஏற்படுத்தும் அயோடின் குறைபாட்டை குறைக்க உதவுகின்றது.

கண் பார்வை

கசகசா விதைகள் உங்கள் பார்வைத் திறனை மேம்படுத்துகின்ற மேலும் கண் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகின்றது.

கச கசா விதைகளில் அடங்கியுள்ள,ஆன்டி ஆக்ஸிடென்டுகள் மற்றும் துத்தநாகமும், தீவிர கண் பிரச்சனையான கருவிழி படலத்தின் நசி ஏற்படும் குருட்டுத்தன்மையை தடுக்க உதவுகின்றது.

இரத்த அழுத்தம்

நீங்கள் ரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், கசகசா அதிகம் அடங்கிய உணவுகளை உட்கொள்வதால், உங்களுக்கு நன்மை தரும். கசகசா விதைகளில் அடங்கியுள்ள olic அமிலம் ரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இடுப்பு வலி

கச கசா, ஜவ்வரிசி, பார்லி இவை மூன்றையும் தலா பத்து கிராம் எடுத்து பச்சரிசியுடன் சேர்த்து கஞ்சி காய்ச்சி குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.

கசகசா பயன்கள் Kasa Kasa Health Benefits in Tamil

முகபரு

கச கசா, முந்திரி பருப்பு, இரண்டையும் சம அளவு பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பரு மறையும். முகம் அழகு பெறும்.

தலைமுடி

கசகசா விதைகளை புதிதாக எடுக்கப்பட்ட தேங்காய்ப்பால், சாறுள்ள வெங்காயம் ஆகியவற்றுடன் அரைத்து, தலையில் தடவ ஒரு மணி நேரம் ஊற வைத்து பின்னர், லேசான shampoo கொண்டு கழுவி வந்தால் தலைமுடி வளர்ச்சியில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.

தேமல்

கசகசாவை முள்ளங்கி சாறில் ஊற வைத்து, அரைத்து தேமல் மற்றும் படை உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் அவை விரைவில் குணமாகும்.

கசகசா பயன்கள் Kasa Kasa Health Benefits in Tamil

அம்மை

பத்து கிராம் கசகசாவுடன் ஒரு பிடி வேப்பிலை, ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து, அரைத்து, அம்மை விழுந்த இடத்தில் தடவினால், அம்மைத் தழும்புகள் மறையும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning