இலந்தை பழம் பயன்கள் | Elantha Palam Benefits in Tamil

இலந்தை பழம் பயன்கள் | Elantha Palam Benefits in Tamil

இந்த இலந்தை பழம் மரமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமையானது.இந்த மரம் சுமார் 30அடி உயரம் வரை வளரக்கூடியது.

இதில் வளைந்த கூர்மையான முட்கள் இருக்கும். இலந்தை பழம் மரம் வளர்வதற்கு உரம் எதுவும் தேவை இல்லை. குளிர் காலத்தில் இது நன்றாக பூத்து காய் விட தொடங்கும்.

இலந்தை பழத்திற்கு சிறிய பேரிட்சை மற்றும் காய்ந்த வத்தல் என்ற வேறு பெயர்களும் உள்ளது. இதனுடைய விதையானது மிகவும் கெட்டியாக இருக்கும்.

இலந்தை பழம் பயன்கள்

100 கி இலந்தைப்பழத்தில் உள்ள சத்துக்கள்

கலோரி எழுபத்தி நாலு சதவிகிதம். மாவுப்பொருள் பதினேழு சதவிகிதம். புரதம், பூஜ்ஜியம் புள்ளி எட்டு சதவிகிதம். மேலும், தாது உப்புக்கள், இரும்புச் சத்துக்களும் உள்ளது.

உடல் உஷ்ணம்

இலந்தைப்பழம் இது உடல் உஷ்ணத்தினை தணிக்ககூடியது. கோடை காலங்களில் வெப்பம் அதிகம் உள்ள காரணத்தினால் அனைவரின் உடலும் வெப்பம் அடைந்து அதிக அளவில் வியர்வை வருதல் நீர்ச்சத்து , இழப்பு ஏற்படுதல் போன்றவை ஏற்படுகின்றது.

இந்த இலந்தைப்பழம் சாப்பிட்டு வருவதன் மூலமாக இதில் உள்ள குளிர்ச்சி தன்மை உடல் உஷ்ணத்தினை தணிக்கிறது. இந்த இலந்தை பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் சூடு மற்றும் உடல் சூடு தணிந்து உடலில் நீர் இழப்பினை சரி செய்கின்றது.

இலந்தை பழம் தீமைகள்

வலிமையான எலும்புகள்

எலும்புகள் பலமிழப்பதற்கு மிக முக்கியமான காரணம் உடலில் சுண்ணாம்பு சத்து குறைவதால்தான்.

எலும்பு சத்து குறைவாக இருந்தால் அதாவது எலும்பு பலவீனமாக இருந்தால் லேசாக கீழே விழுந்தால் கூட எலும்புகள் உடைந்து விடும்.

இத்தகைய பிரச்சனை உடையவர்கள் இந்த எலந்தைப் பழத்தினை கிடைக்க கூடிய நாட்களில் அதனை வாங்கி அளவோடு சாப்பிட்டு வருவதன்மூலம் எலும்புகள் நன்றாக வலுப்பெறும்.

பித்தம்

வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் நமது உடலில் அதிகரிக்கும் பொழுது தலை வலி, மயக்கம் போன்ற ஒரு சில பிரச்சனைகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இந்த இலந்தைப் பழத்தில் பித்தத்தினை சமன் செய்யக்கூடிய ஆற்றல் உள்ளது. எனவே பித்தம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட்ட அனைவரும் இந்த எலந்தை பழத்தை கிடைக்கும் காலங்களில் சாப்பிட்டு வருவதன் மூலமாக பித்தத்தின் நிலை சீராகும்.

வாந்தி தலைசுற்றல்

ஒரு சிலர் பேருந்தில் பயணம் செய்யும் பொழுதும், கார்களில் மற்றும் இருசக்கர வாகனகளில் பயணிக்கும் பொழுதும், மற்றும் மலை மீது ஏறும்பொழுதும் ஒரு சிலருக்கு வாந்தி மற்றும்தலைசுற்றல் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றது.

இந்த பிரச்சனை உடையவர்கள் பயணத்தின் பொழுது இலந்தைப் பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலமாக இந்த வாந்தி, தலைச்சுற்றல் இது போன்ற அனைத்தும் நீங்கும்.

உடல் வலி

வயது ஆக ஆக உடல் வலியானது அடிக்கடி ஏற்படும். தினசரி கடுமையான உழைப்பு உடல் உழைப்பு செய்பவர்களுக்கும், நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உடல் வலி ஏற்படுகின்றது.

இந்த இலந்தைப்பழத்தில் உடல் வலியைப் போக்கக்கூடிய ஒரு வகையான வேதிப்பொருள் உள்ளது.

ஆகவே இந்த இலந்தைப் பழத்தினை இவர்கள் சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் வலி நீங்கி, உடல் புத்துணர்ச்சி பெறும்.

elantha pazham health benefits

பசியின்மை

ஒருவன் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்றால் மூன்று நேரமும் நன்றாக பசி எடுக்க வேண்டும். பசி எடுத்தால்தான் நாம் நன்றாக உணவு உண்ண முடியும்.

ஒரு சில காரணங்களினால் ஒரு சிலருக்கு பசியின்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.

இந்த பசியின்மை பிரச்சனையினை தீர்க்க இழந்த பழம் ஒரு நல்ல தீர்வாகும்.

ஆகவே, இந்த இலந்தை பழத்தினை, அவ்வப்போது சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

தூக்கமின்மை

ஒரு சிலர், தூக்கமின்மை பிரச்சனையினால் மிகவும் அவஸ்தைப்படுகின்றனர். நரம்புகள் சம்மந்தப்பட்ட பிரச்சனை உடையவர்களுக்கும் தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்படும்.

இந்த இழந்தை பழத்தினை சாப்பிட்டு வருவதன் மூலமாக நரம்பிற்க்கு நல்ல ஒரு வலிமையினைத் தரும்.

ஆகவே, இந்த இலந்தைப் பழத்தினை அதிக அளவில் சாப்பிடுபவர்களுக்கு தூக்கமின்மை பிரச்சனை முற்றிலும் நீங்கும்.

elantha palam benefits

மாதவிடாய் பிரச்சனை

பெண்களுக்கு மாதம் கண்டால் கடினமான காலம் என்று சொல்லப்படக்கூடிய காலம்தான் இந்த மாதவிடாய் காலம்.

இக்காலத்தில் பெண்கள் பலருக்கு இந்த ரத்தப்போக்கானது அதிக அளவில் ஏற்படுகின்றது. இதனால் இவர்கள் உடல் அளவிலும், மனதளவிலும், களைப்படைகின்றனர்.

இந்த காலத்தில் பெண்கள் இந்த இலந்தைப் பழத்தினை சாப்பிட்டு வருவதால் ரத்தப்போக்கு அதிகம் ஏற்படாமல் தடுக்கும்.

ஞாபக சக்தி

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஞாபக சக்தியானது மிகவும் முக்கியமான ஒன்று. வயது முதிர முதிர ஞாபக சக்தியானதும் குறைந்து கொண்டே செல்லும்.

மேலும் ஞாபகத்திறன் என்பது கல்வி பயில கூடிய மாணவர்களுக்கு மிக மிக முக்கியமான ஒன்று.

எனவே சிறியவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் இந்த இலந்தைப் பழத்தினை அடிக்கடி சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது.

இலந்தை பழம் தீமைகள்

இந்த இழந்த பழத்தினை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.அவ்வாறு தண்ணீர் குடித்தால் பேதி உண்டாகும்.

இந்த இலந்தைப்பழத்தினை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிறு எரிச்சல் ஏற்படும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வளைத்ததின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

Related Posts

5 Comments

  1. Pingback: pilsakmens
  2. Pingback: arduino

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning