யூகலிப்டஸ் எண்ணெய் பயன்கள் | Eucalyptus Oil in Tamil

யூகலிப்டஸ் எண்ணெய் பயன்கள் | Eucalyptus Oil in Tamil

இந்த யூகலிப்டஸ் எண்ணெய் மிகவும் பெயர் போன ஊர் என்னவென்றால் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டிதான். ஊட்டிக்கு சென்று வரக்கூடிய அனைவர் பையிலும் இந்த யூகலிப்டஸ் எண்ணெய் இருப்பது நிச்சயம். இ

தனது நறுமணமானது நாசியை துளைக்கும் அளவிற்கு உள்ளது. இதனை முகர்ந்து பார்த்த உடனேயே நமது உடலுக்கு புத்துணர்வு தோன்றுவிடும்.

இது பெரும்பாலும் மருந்தாக பயன்படுத்தப் படுகிறது. இதனை நீலகிரி தைலம் என்றும் அழைக்கின்றனர். இது தலைவலி தவிர வேறு எந்தெந்த பிரச்சனைகளுக்கெல்லாம் பயன்படுகிறது? என்பதனைப் பற்றி இங்கு பார்ப்போம்.

eucalyptus oil meaning in tamil

முகப்பரு

நமது முகத்தில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு மிகச்சிறிய நுண்ணிய துளைகள் நமது சருமத்தில் உள்ளன.

இதில் இந்த சிறிய துளைகளில் எண்ணெய்கள் அடைக்கப்படுவதுதான் முகப்பரு ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணமாகும். இந்த எண்ணெய்கள் சரும எண்ணெய் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன

இந்த எண்ணெய்யால் மூடப்பட்ட துளைகள் புரோப்பியானிபாக்டீரியம்’ (Propionibacterium) என்று சொல்லப்படுகின்றது.

இதுதான் முகப்பருவாக மாறுகின்றது. இதில் சீல் கட்டிக் கொள்வதனால் வலிகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் ஐந்து அல்லது ஆறு சொட்டு யூகலிப்டஸ் எண்ணெயினை வெந்நீரில் கலந்து ஆவி பிடித்து வருவதன் மூலமாக சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் நீங்கும்.

மேலும் சருமத்தில் எண்ணெய் சுரப்பியின் சுரப்பினையும் குறைக்கும். மேலும், இந்த புரோப்பியானி பாக்டீரியதிற்கு எதிராக செயல்பட தொடங்கும்.

eucalyptus tree in tamil name

சுத்தமான காற்று

பெரும்பாலும் தினசரி பயணிப்பவர்களுக்கும் மேலும் காற்றோட்டமான பகுதிகளில் வேலை செய்பவர்களுக்கும் காற்றில் உள்ள பரவக்கூடிய பூஞ்சை தொற்றின் காரணமாக ஜலதோஷம், தும்மல் போன்றவை ஏற்படுகின்றன.

இந்த பிரச்சனை உள்ளவர்கள் யூகலிப்டஸ் தைலம் கொண்டு முகர்ந்து வருவதன் மூலமாக இந்த பூஞ்சை தொற்றிலிருந்து உடலினை பாதுகாக்கலாம்.

இந்த யூகலிப்டஸ் எண்ணெய்க்கு பூஞ்சை தொற்றிலிருந்து எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் கொண்டது. துணி துவைக்கும் பொழுது இந்த எண்ணெயினை சிறிது தெளித்து துணியினை துவைத்து வருவதன் மூலமாக துணியில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகள் அனைத்தும் அழிந்துவிடும்.

சுவாச பிரச்சனை

யூகலிப்டஸ் எண்ணெயினை கொண்டு ஆவி பிடித்து வருவதன் மூலமாக சுவாச பிரச்சனைகள் நீங்கும். மேலும் சளி பிடித்தவர்களுக்கும் மற்றும் சளியினால் ஏற்பட்ட அடைப்பினை நீக்குவதற்கும் இந்த யூகலிப்டஸ் இலையினை நீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.

அந்த தண்ணீர் ஆறிய பின் வாய்களை கொப்பளித்து வருவதன் மூலமாக தொண்டை புண்ணானது குணமாகும். மூச்சுக்குழல் சம்பந்தப்பட்ட எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் இதனை பயன்படுத்தலாம் நல்ல ஒரு தீர்வு கிடைக்கும்.

eucalyptus leaves in tamil

சிறந்த வலி நிவாரணி

மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இரு பிரிவினராக பிரிக்கப்பட்டனர். அதில் ஒரு பிரிவினருக்கு பாதாம் எண்ணெய் வலிக்கு மருந்தாக கொடுக்கப்பட்டது மற்றொரு பிரிவினருக்கு யூகலிப்டஸ் எண்ணெய் வலிக்கு மருந்தாக கொடுக்கப்பட்டது.

முடிவில் பாதாம் எண்ணெயிலே பயன்படுத்தியவர்களை விட இந்த eucalyptus எண்ணெயினை பயன்படுத்தியவர்களுக்கு வலியானது மிகவும் குறைவான அளவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் அறிவியல் நிபுணர்கள் கூறுவது என்னவென்றால் இது சிறந்த வலி நிவாரணியாக உள்ளது. வலி உள்ள இடங்களில் இதை தடவி வருவதன் மூலமாக வலியானது குறையும்.

பொடுகு பிரச்சனை

மலஸ்செஸியா ஃபர்ஃபர் எனப்படும் பூஞ்சைதான் பொடுகு பிரச்சனைக்கு மிக முக்கிய காரணமாக உள்ளது. இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்றால் யூகலிப்டஸ் எண்ணெய் மூன்று சொட்டு எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலந்து வைத்த எண்ணெயினை கொண்டு ததலைக்கு தேய்த்து நன்றாக மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், சிறிது நேரம் கழித்து நன்றாக தலையணையினை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக தலை அரிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள பொடுகுத் தொல்லை பிரச்சனையானது சரியாகும்.

மேலும் ஷாம்பூவுடன் யூகலிப்டஸ் எண்ணெயை சிறிதளவு கலந்தும் பயன்படுத்தலாம்.

eucalyptus uses in tamil

காய்ச்சல்

காய்ச்சலினால் சிரமப்படுபவர்கள் இந்த யூகலிப்டஸ் எண்ணெயினை சிறிதளவு வெந்நீருடன் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலந்து வைத்த எண்ணெயினை துணியில் முக்கி எடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ஒத்தனம் கொடுப்பதன் மூலமாக உடலில் வெப்பமானது குறையும்.

இதன் காரணமாக உடல் வெப்பநிலையானது குறைந்து காய்ச்சல் சரியாகும்.காய்ச்சல் எண்ணெய் என்று யூகலிப்டஸ் எண்ணையானது அழைக்கப்படுகின்றது.

பற்கள் ஆரோக்கியம்

இந்த யூகலிப்டஸ் எண்ணை ஆனது பற்களின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. நல்ல ஒரு தீர்வினையும் கொடுக்கின்றது.

பல் ஈறுகளில் வீக்கம், பல் சொத்தை போன்ற பிரச்சனைகளுக்கு யூகலிப்டஸ் சேர்க்கப்பட்டுள்ள பற்பசைகளினை வாங்கி பயன்படுத்தி வருவதன் மூலமாக நல்ல ஒரு நிவாரணம் பெற முடியும்.

Eucalyptus Oil in Tamil

யூகலிப்டஸ் தீமைகள்

  1. இந்த யூகலிப்டஸ் எண்ணையினை நேரடியாக பயன்படுத்துவது சரியானது அல்ல. இதனுடன், தண்ணீர் அல்லது தேங்காய் எண்ணை அல்லது ஆலிவ் எண்ணை இது போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
  2. இந்த எண்ணெயினை மருத்துவர் மருத்துவர் பரிந்துரை எதுவும் இல்லாமல் குடிக்கக் கூடாது.
  3. மேலும் மிக முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் யூகலிப்டஸ் எண்ணை பயன்படுத்துவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. இதனை சரியான விகிதத்தில் பயன்படுத்தி வருவது, சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
  4. இந்த எண்ணெயினை குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. இது குழந்தைகளுக்கு நச்சாக மாறுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது.
  5. உயர் ரத்த அழுத்தம் மற்றும் கை, கால் வலிப்பு இருப்பவர்கள் யாரும் இந்த யூகலிப்டஸ் எண்ணை முக்கியமாக பயன்படுத்தவே கூடாது.
  6. யூகலிப்டஸ் எண்ணையை நேரடியாக சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்துவதற்கு முன்பாக நீர்த்துப்போகச் செய்து பின்னர் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் சருமத்தில் எரிச்சலினை ஏற்படுத்தும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

 

Related Posts

7 Comments

  1. Pingback: rich89bet
  2. Pingback: bk8
  3. Pingback: Exology
  4. Pingback: pglike
  5. Pingback: dultogel

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning