தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் | Thalai Vali Marunthu in Tamil

தலைவலி குணமாக பாட்டி வைத்தியம் | Thalai Vali Marunthu in Tamil

 

பொதுவா, தலை வலி வந்து விட்டால் நாம் எந்த ஒரு வேலை செய்தாலும் அதில் கவனம் செலுத்த முடியாத அளவுக்கு வலி இருந்து கொண்டே இருக்கும்.

நிறைய பேர் தலை வலி என்றாலே உடனே ஒரு மாத்திரை போட்டுக்கொள்வார்கள். இப்படி தலை வலி வரும்பொழுதெல்லாம் மருந்து, மாத்திரை எடுத்துக் கொண்டால் பின்னாளில் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

அதே போன்று சிலர் எப்பொழுது பார்த்தாலும் தைலம் தடவிக் கொண்டே இருப்பார்கள். உண்மையில் தலை வலி வருவதற்கு பல காரணங்கள் உண்டு.

தலைவலி வருவதற்கான காரணங்கள்

அடிக்கடி தலை வலி ஏன் வருகிறது?

தலையில் நீர் கோர்த்தல்

முக்கியமாக இந்த வீட்டு வைத்தியங்களை செய்யும் பொழுது எந்த ஒரு பக்கவிளைவும் வராது. தலைவலியில் இருந்து நிரந்தர விடுதலையும் கிடைக்கும்.

மண்டையில் நீர் கோர்த்திருந்தால் தலை வலியோடு தலையும் ஒரே பாரமாக இருக்கும். பின் மண்டையிலும் வலி ஏற்படக்கூடும்.

மேலும் தலையை தூக்கவே முடியாத அளவுக்கு வலி நீடிக்கும். அதே போன்று காலையில் பொழுதே தலை பாரமாக இருக்கும்.

இதனால் மிகுந்த மன உளைச்சல் ஏற்படும். இவை எல்லாமே தலையில் நீர் கோர்த்துக் கொண்டிருப்பதின் அறிகுறியாகும்.

பொதுவாக தலையில் நீர் கோர்த்துக் கொள்வதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இதனால் உடல் உள்ளுறுப்புகள் செயலிழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

எனவே அதிகமான நீர் தங்குவதால் ஏற்படும் சைனஸ், தொடர் தும்மல், இருமல் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

தண்ணீர் சத்து குறைவு

நமது உடலில் போதுமான அளவு தண்ணீர் சத்து இல்லாமல் இருந்தாலும் தலை வலி வரும். எனவே ஒரு நாளைக்கு இரண்டு முதல், மூன்று லிட்டர் வரை தண்ணீர் கண்டிப்பாக வேண்டும்.

தலையில் அழுக்கு

சிலருக்கு தலையில் அதிகமான அழுக்கு சேர்வதாலும் தலை வலி வருகிறது. எனவே தலையில் பிசுபிசுப்பு தன்மை ஏற்படாமல் இருக்க அடிக்கடி தலைக்கு குளித்து குளித்த ஒடனேயே தலையை நன்றாக உலர வைத்து விட வேண்டும்.

ஒரு பக்க தலைவலி வர காரணம்

சரியான தூக்கமின்மை

தொடர்ந்து கணினி முன்பு அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும் தலை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவே அவ்வப்பொழுது வேலைக்கு நடுவே சிறிது ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று இன்று கைபேசி வந்த பிறகு பலரும் சரியான தூக்கம் தூங்குவதே கிடையாது. உண்மையில் மொபைல் பயன்படுத்தி நோண்டிக் கொண்டே தூக்கத்தைத் தொலைப்பவர்கள் நிறைய பேர்.

இப்படி சரியான தூக்கமின்மையாலும் தலை வலி வரலாம். எனவே தூங்கும் முன்பு உங்களுடைய கைபேசியை ஐ கைக்கு எட்டாத தூரத்தில் வைத்து விட்டு தூங்குவது சிறந்த வழி.

தலைவலியை போக்கும் அருமையான வீட்டு வைத்தியங்கள்

சுக்கு

அந்த காலம் முதலே ஆயுர்வேதத்திலும் சித்தா மருத்துவத்திலும் வீட்டு வைத்தியத்திலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் தான் சுக்குக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை என்று சொல்வதுண்டு.

இஞ்சியை காய வைத்து கிடைக்கும் சுக்கு வாதம், பித்தம், கபம் மூன்றையும் நீக்கும் அருமருந்தாக பயன்படுகிறது.

இந்த சுக்கு பொடியை தண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்று போட்டாள் மண்டையில் இருக்கும் நீரை உறிஞ்சி எடுத்துவிடும்.

இதனால் தலை வலி குறைய ஆரம்பிக்கும். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள், காலை மற்றும் இரவு படுக்கும் முன்பு பற்று போட்டு வரும்பொழுது தலையில் உள்ள நீர் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிடும். இதனால், தலை வலி அறவே நின்று விடும்.

பொதுவாக ஆண்களை விட, பெண்களுக்கு, முடி அதிகம் என்பதால், தலைக்கு குளிக்கும் பொழுதெல்லாம், தலையில் நீர் கொடுத்து பிரச்சனைக்கு உள்ளவர்கள். உடனே இந்த சுக்கு பற்று போட்டு வலியை போக்கிக் கொள்ளலாம்.

கொத்தமல்லி விதை

சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு அடிக்கடி தும்மல் மூக்கு ஒடுக்குதல், மூக்கடைப்பு, தலை வலி, கண்ணுக்கு கீழே கன்னம் மற்றும் முன்நெற்றி ஆகிய இடங்களை தொட்டால் வலி ஏற்படும்.

இவற்றுடன் காய்ச்சல், தொண்டையில் சளி கட்டுவது இரவில் இருமல் வருவது உடல் சோர்வு போன்றவையும் சேர்ந்து கொள்ளும்.

இவைகள் சைனஸ் உள்ளது என்பதை காட்டும் அறிகுறியாகும். இப்போ சைனஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கும் அடிக்கடி மண்டையில் நீர் கோர்த்து தலை வலி ஏற்படும். இவர்கள் ஐந்து தேக்கரண்டி கொத்தமல்லி விதைய ஒரு முப்பது நிமிடம் ஊற வைத்து பிறகுமிக்ஸ்யில் விட்டு அரைத்து பற்றுப் போடலாம்.

இவை இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க மண்டையை சுற்றி இருக்கும் நீரை இழுக்கும் தன்மை கொண்டது. இதை காலை மற்றும் இரவு படுக்கும் முன் போட்டுக் கொள்ளலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

கொத்தமல்லி தலை

கொத்தமல்லி விதைக்கு பதிலாக கொத்தமல்லி தலையை தண்ணீர் விடாமல் அரைத்து சாறு பிழிந்து, தலையில் பற்றுப் போட்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.

வெற்றிலை, கற்பூரம்

வெற்றிலையுடன், கற்பூரம் சேர்த்து நன்றாக மைய அரைத்து சற்று தளர்வாக்கி பற்றிப் போடலாம். சைனஸ் பிரச்சனை அவ்வப்பொழுது இந்த பச்சை போட்டுக் கொள்ளலாம். இவை தலைவலியின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தக் கூடியது.

வெற்றிலை வாங்கும் பொழுது கருப்பு வெற்றிலையாக பார்த்து வாங்குவது நல்லது

கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, சுக்கு, மஞ்சள்

தொடர்ந்து தலைபாரம் இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் கற்பூரவள்ளி, துளசி, வெற்றிலை, சுக்கு, மஞ்சள் சேர்த்து, அரைத்து, பற்று போட வேண்டும்.

இதை தினமும் படுக்கும் போது நெற்றியிலும், முகம் மற்றும் கழுத்துப் பகுதியிலும் கூட தடவலாம். இதனால் ஒரே நாள் இரவில் மண்டையில் இருக்கும் அத்தனை நீரும் வெளியேறும். மறுநாள் காலை எழும்பொழுதே தலை லேசாக இருப்பதை உணர முடியும்.

கிராம்பு

கிராம்பை மை போல் அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைபாரம் நீங்கும்.

வில்வ இலை

நீண்ட நாள் தலை வலி உள்ளவர்கள், வில்வ இலையை நன்கு அரைத்து வைத்துக் கொண்டு பதினைந்து நாட்கள் முதல் இருபது நாட்கள் வரை தொடர்ந்து ஒரு பட்டாணி அளவு சாப்பிட்டு வந்தால் நீண்ட நாட்களாக தொல்லை கொடுத்த தலை வலி நீங்கும்.

தீராத தலைவலி நீங்க

ஒற்றைத் தலை வலி

ஒற்றைத் தலை வலி உள்ளவர்கள், ஒரு தவளை எடுத்து, அதை பச்சைத் தண்ணீரில் நனைத்து தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கட்ட வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்துக் கொண்டு கை மற்றும் கால்களை அதிர்விட வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் ஒற்றைத் தலை வலி நீங்கும். அதே போன்று, பட்டை. தினமும் மாலை வேளையில், பட்டை சேர்த்து பிளாக் டீ அருந்தி வந்தால் சைன்ஸ் ஆல் உண்டாகும் தலை வலி நீங்கும்.

ஆவி பிடித்தல்

ஆவி பிடிப்பதும் சிறந்த வழி. இப்படி ஆவி பிடிக்கும் பொழுது யூகலிப்டஸ் இலைகள் கிடைத்தால் அதை நீருடன் சேர்த்து கொதிக்க வைத்து, வேப்பிலை, புதினா, துளசி, கற்பூரவள்ளி இலைகளையும் சேர்த்து அவி பிடிக்க வேண்டும்

ஆவி பிடித்த பிறகு இரண்டே நாளில் உள்ளிருக்கும் சளி அனைத்தும், வெளியேறிவிடும். பொதுவாக தலை வலி என்றால் உடனே வலி மாத்திரைகளை, எடுத்துக் கொள்வதை தவிர்த்து இது போன்ற இயற்கை வீட்டு வைத்தியங்களை செய்து கொள்வதன் மூலம் தலைவலியை போக்க முடியும்.

பக்க விளைவுகளும் வராது. எனவே தலை வலி உள்ளவர்கள் இங்கே சொன்னவற்றில் ஏதாவது ஒன்றை, தொடர்ந்து செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைப்பதை கண்கூடாக காண்பீர்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை காட்டாயமாக படிக்கவும்.

 

Related Posts

3 Comments

  1. Pingback: som777

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning