உங்களது விளம்பரங்களை எங்களது வலைதளத்தில் பதிவிட மாதம் 300 மட்டுமே தொடர்புக்கு வாட்சப் பண்ணவும் 9384220302

முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits in tamil

முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits

முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits  முருங்கை மரத்தில் உள்ள முருங்கைக்காய், முருங்கைப் பூ மற்றும் முருங்கைக்கீரை இவை அனைத்தும் இயற்கையில் நம் அன்றாட வாழ்வில் எளிதில் கிடைக்க கூடிய ஒன்று.

ஆனால் நாம் அதில் உள்ள நற்குணங்களை பற்றி அறியாமல் இருக்கிறோம் , வாருங்கள் முருங்கைக்கீரையில் உள்ள நற்குணங்களை பற்றி காண்போம்.

முருகையில் அனைத்து தாதுக்களும் சம அளவில் நமது உடலுக்கு கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியினையும், உடல் வலிமையும் , உறுதியினையும் உண்டாக்கும.

moringa juice benefits in tamil

மாதவிடாய்

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுவலி குணமடைவதற்கு , சிறிதளவு முருங்கைக்கீரை உடன் சிறிதளவு சீரகதினை சேர்த்து இடித்து வைத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலங்களில் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிற்றுவலி குணமாகும்.

முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைப் பூ மருத்துவ தன்மை கொண்டது.

உடல் சூடு

முருங்கை ககீரையினை வேகவைத்து அதன் சாற்றினை குடித்து வருவதன் மூலம் உடல் சூடு தணியும்.

வெப்பத்தின் காரணதிதினால் ,மனித உடலில் ஏற்படுகின்ற மந்தம், உட்சூடு மற்றும் கண்நோய் போன்றவற்றினை நீக்கும் குணம் படைத்தது.

உடல் வலி

முருங்கைப் பட்டையில் நீர்விட்டு அரைத்து உடலில் உள்ள வீக்கங்களுக்கும் மற்றும் வாயு தங்கிய பகுதிகளுக்கும் போடலாம்.

இந்த  இலையினை உருவி நறுக்கி விட்டு பின்னர் மிளகு ரசம் வைத்து சாதம் உடன் சேர்த்து உண்டு வருவதன் மூலம் கை, கால் மற்றும் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும்.

அதே சமயத்தில் சிறுநீரைப் பெருக்கும்.

murungai maruthuvam tamil

முருங்கை இலை

முருங்கை மரத்தின் இலையில் இரும்புச்சத்தும் தாமிரம்ச்சத்தும் மற்றும் சுண்ணாம்புச்சத்தும் உள்ளன .

இதன்  இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிடுவதன் மூலம் இரத்த சோகை உள்ளவர்களின் உடலில் தூய்மையான ரத்தம் ஊறும்.

பல் வலுவாகும் . தோல் வியாதிகள்அனைத்தும் நீங்கும்.

முருங்கைக்காய் சுப்பினை குடித்து வருவதன் மூலம் காய்ச்சல், மூட்டு வலி முற்றிலும் குணமடையும் . முருங்கை விதையினை கூட்டு செய்து சாப்பிடலாம்.

முருங்கை மூளைக்கு நல்ல பலத்தினை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை முதலிடம் வகிக்கிறது.

முருங்கைப் பூவுக்கு தாது விருத்தி செய்யும் குணம் உண்டு. முருங்கைப் பூ உஷ்ணத்தை உண்டு பண்ணக் கூடியதுதான்என்றாலும் அதனால் கெடுதல்கள் எதுவும் இல்லை.

முருங்கைப் பிசினில் அரை லிட்டர் நீர் விட்டு புதுப் பாண்டத்தில் வைத்திருந்து காலையில் இரண்டு அவுன்ஸ் நீருடன் கற்கண்டு சேர்த்துச் சாப்பிட்டால் தாது கெட்டிப்படும்.

முருங்கை இலையில் கர்ப்பிணி பெண்ககளுக்கு தேவையான அளவு கால்சியம் மற்றும் அயன் சத்து , வைட்டமின் சத்த்துக்கள் உள்ளது.

moringa leaves in tamil

கர்ப்பையின் மந்தத்தன்மையை பேக்கி,பிரசவத்தை துரிதப்படுத்தும்.

இதன் இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்தம், தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் ஆஸ்துமா,மார்புசளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை சூப் நல்லது.

முருக்கைப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் சூப் செக்ஸ் பலவீனத்தைப் போக்கும்.ஆண்,பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும்.

முருங்கை இலை சாற்றுடன் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகப்பருக்கள் மீது தடவுவதன் மூலம் மறையும். முருக்கைகாய் இருதய தமனி  வலுப்படுத்துகிறது .

முருங்கை இலை சாறு உடன் தேனும் மற்றும் ஒரு கோப்பை இளநீரை கலந்து பருகுவதன் மஞ்சகாமாலை மற்றும்   வயிற்றுப்போக்கு ஆகிவை கட்டுக்குள் வரும். 

 

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning