பல் ஈறுகளில் இருந்து இரத்தம் கசிதல் | Teeth Health Tips in Tamil
முகத்தின் அழகை நிர்ணயிப்பதில் பற்களின் பங்கு மிக அதிகம். பற்கள் விழுந்து விட்டால், இளையவர்களை கூட வயதானவர்களாக காட்டும்.
அந்த வகையில் வாய் ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியம். சிலருக்கு, பல் துலக்கும் போது ஈறுகளில் ரத்தம் கசியும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் முழு பல்லையும் விரைவில் பற்களை விழச்செய்துவிடும்.
எனவே பல் ஈறுகளில் ரத்தம் கசிய ஆரம்பித்த உடனே அதற்கு தகுந்த சிகிச்சைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாளடைவில் பல்வேறு நோய்கள் உண்டாக காரணமாகிவிடும்.
இங்கே பல் ஈறுகளில் ரத்தம் கசிவதற்கு என்ன காரணம்? மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிவதை குணமாக்கும். அருமையான மூன்று, வீட்டு வைத்தியங்களையும் பற்றி பார்ப்போம்.

பல் ஈறுகளில் ரத்தம் கசிவதற்கான் காரணம்
பொதுவாக பல் ஈறுதான் பற்களின் வேர்களை வெளிப்புறத்தில் இருந்து பாதுகாக்கிறது எப்பொழுது வேரில் தொற்று ஏற்படுகிறதோ அல்லது பற்களில் பாதிப்பு ஏற்படுகிறதோ உடனே ஈறு வீக்கம் அடைந்து வலி ஏற்படுகிறது.
மேலும் பல் துலக்கும் போதும் சாதாரணமாகவும் ரத்தக் கசிவும் ஏற்படும். பொதுவாக ஈறுகளில் இருந்து கசிவதற்கு நிறைய காரணங்கள் உள்ளன.
பற்களில் காரைகள் அதிகமாக சேரும் பொழுது ஈறுகளில் எரிச்சல் ஏற்பட்டு, அதனால் வீக்கம் அடைந்து பின் இரத்த கசிவையும் உண்டாக்கும்
. அடுத்து பற்களை நீண்ட நேரம் துலக்கக்கூடாது. ஏனென்றால் அது பல்லின் வெளிப்புறத்தில் உள்ள எனாமலை தேய்த்துவிடும்.
அதே போன்று சிலர் ஒவ்வொரு முறை சாப்பிட்ட பிறகும் பற்களை துலக்குவார்கள். இப்படி அளவுக்கு அதிகமாக பற்களை துலக்கினால் அது, ஈறுகளில் பாதிப்பை உண்டாக்கி நாளடைவில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
அதே சமயத்தில் சாப்பிட்ட பின்னர் வாயில் எஞ்சியிருக்கும் உணவுத் துகள்களை பாட்ரியாக்களை பெருகும் இடங்கள். எனவே ஒவ்வொரு முறை சாப்பிட்டு முடித்ததும் அவசியம் வாயை நன்கு கொப்பளி வேண்டும்.
வைட்டமின் குறைபாடு
முக்கியமாக உணவில் போதிய அளவு வைட்டமின் சி இல்லாவிட்டாலும், ஈறுகளில் வலி, மற்றும், வீக்கத்துடன், ரத்தக் கசிவையும், சந்திக்க நேரிடும். எனவே வைட்டமின் சிநிறைந்த, ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை அன்றாட உணவில் சிறிது சேர்த்து வர வேண்டியது அவசியம்.
அதே போன்று வைட்டமின் கே ஈறுகளில் ரத்த கசிவை ஏற்படுத்தும். பொதுவாக வைட்டமின் கே என்பது, ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு சத்து.
இது உடலில் குறைவாக இருக்கும் பொழுது ஈறுகளில் ரத்தக் கசிவை சந்திக்க நேரிடும். மேலும் பெண்களைப் பொறுத்தவரையில் பூப்படையும் பொழுது, கர்ப்ப காலம், மாதவிடாய் காலம் இப்படி ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் அதிகமாக இருக்கும் காலங்களில் ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.
கல்லீரல் பிரட்சனை உள்ளவர்கள்
கல்லீரல் பிரச்சனைகளும் ஈறுகளில் ரத்தக் கசிவை உண்டாக்கும். அதிலும் மது அதிகமாக அருந்தினால் கல்லீரலில் வளர்சிதை மாற்றம் நிலை குலைந்து ஈறுகளில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.
குளிர்பானங்கள்
மிக முக்கியமாக கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள அமிலங்கள் பற்களில் உள்ள எனாமல்ஐ பாதிப்பதோடு பற்களையும் அறுக்கின்றன.
அப்படி குடிக்க நேர்ந்தால் straw மூலம் சாப்பிடலாம்.
பற்களில் ரத்தம் கசிவதை நிறுத்தும் அருமையான மூன்று வீட்டு வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்
1.உப்புத்தண்ணீர்
பற்களில் ரத்தம் கசிந்தால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல்வலி மற்றும் ஈறு வலி வராது.
உப்பு சிறந்த கிருமி நாசினி. அது பற்களின் வேர் வரை சென்று கிருமிகளை அழிக்கிறது. இதனால் ரத்தம் கசிவதும் நின்றுவிடும். இதை, எல்லாருமே செய்யலாம்.
2.மஞ்சள்
இது கிருமி நாசினி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது. ஈரில் ஏற்படும் சிறந்த மருந்தாகும். மஞ்சளை நீருடன் கலந்து பேஸ்ட் போன்று செய்து வீக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து மெதுவாக massage செய்ய வேண்டும்.
பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும். இதை, தினமும் இரண்டு முறை செய்யலாம்.
3.ஆயில் புல்லிங்
ஈறு சம்பந்தமான பிரச்சனைகள் மட்டுமின்ற , உடலின் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தரக்கூடியது. ஈரின் வலியே ரத்த நாளங்களில் ஊடுருவி பல் சம்பந்தமான நோயை மட்டுமில்லாமல் பல் நோய்களே இல்லாமல் செய்கிறது.
இதற்கு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெயை வாயில் ஊற்றி ஈரின் உள்ளே செல்லும்படி சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும்.
அதாவது, எண்ணெய் வெள்ளை நிறமாக மாறும் வரை கொப்பளிக்க வேண்டும். பல் துலக்குவதற்கு முன்னர், இதை செய்ய வேண்டும்.
பொதுவாக எல்லோருமே இரவு படுக்கும் முன்பு உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து விட்டு படுத்தால் பற்களுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.
நீங்களும் உங்கள் பற்களை பாதுகாத்துக் கொள்ள இங்கே சொன்னவற்றை செய்து பாருங்கள் நல்ல பலன் தெரியும்.
இதனையும் படிக்கலாமே
கறிவேப்பிலை பயன்கள் Karuveppilai Nanmaigal tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை படிக்கவும்.