மருதம் பட்டை பொடி பயன்கள் | Marutham Pattai Powder Benefits in Tamil
எப்பொழுதும் பசுமையாக காட்சியளிக்கும் மருதமரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு வைட்டமின் சி மிகுதியாக அடங்கியுள்ளது.
மருதம்பட்டையை அரைத்து பொடியாகவும், தண்ணீரில் ஊற வைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.
இப்பொழுது மருதம்பட்டியை கொண்டு பல நோய்களை குணப்படுத்தும் பொடி ஒன்றை தயாரிப்பது எப்படி? என்பதைப் பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மருதம் பட்டை பொடி செய்முறை
இதற்கு, மருதம் பட்டை இருநூறு கிராம், சீரகம் நூறு கிராம், சோம்பு நூறு கிராம், மஞ்சள் நூறு கிராம். இவை அனைத்தையும் ஒன்றாக எடுத்து நன்றாக அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

மாரடைப்பு குணமாக
வயது வித்தியாசமின்றி, அனைத்து வயதினரையும் பாதித்து, சமயங்களில், உயிரையும் பறித்துவிடும் கொடிய வியாதியாக மாரடைப்பு காணப்படுகிறது.
ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதே மாரடைப்புக்கு காரணம். இரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல், அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் மருதம்பட்டை பொடிக்கு உள்ளது.
இதை தேநீராக குடிக்கும் பொழுது உடலில் உள்ள கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது. இதனால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
இரத்த அழுத்தமும்
மருதம் பட்டை பொடி தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் ஐந்து கிராம் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும்.
மேலும், இதய படபடப்பு, தூக்கமின்மை, நீரிழிவு பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை போன்றவைகள் கட்டுக்குள் வந்துவிடும்.
புற்றுநோய்
ஆன்டி ஆக்ஸிடென்ட் மருதம் பட்டையில் அதிகமாக இருக்கிறது. இதனால், கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும். புற்றுநோய்கள் போன்றவைகள், வராமல் தடுக்கும் திறன் மருதம் பட்டைக்கு உண்டு.
உடல் நலம்
மருதம் பட்டைகளை, தினமும் இரவில், குடிக்கும் நீரில் இட்டு, அந்த நீரை, மறுநாள் முழுவதும் பருகிவர, ரத்த சர்க்கரை பாதிப்பு, இதய குறைபாடு, உள் உறுப்புகள் பாதிப்பு, மற்றும் தூக்கமின்மை குறைபாடுகள் போன்றவை விலகி இதன் வியாதி எதிர்ப்புத் தன்மைகளால் உடலும் மனமும் புத்துணர்வாகி உடல்நலம் சீராகும்.
இந்த குடிநீரை தொடர்ந்து ஒரு மண்டலம், அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் பருகி வர பூரண குணமடையலாம்.
பெண்கள் ஆரோக்கியம்
பெண்களுக்கு அதிக அளவில் துன்பம் தரும் மாதவிடாய் பாதிப்புகள் உதிரப்போக்கு, ஹார்மோன்
பாதிப்புகள் இவையாவும் நீங்கிட மருதம்பட்டை மற்றும் சீரகத்தை ஒன்றுக்கு கால் பங்கு என்ற விகிதத்தில் நீரிட்டு கொதிக்க வைத்து, பருகிவர தொல்லைகள் நீங்கி உடல் நலம் பெறலாம்.
சிறுநீரக கல்
சிறுநீரகத்தில் உருவான கல் கரைய, மருதம்பட்டியை நன்கு வேகவைத்து, வடிகட்டி பருகி வர வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் சிறுநீரகத்தில் உள்ள கல் சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். எனவே, நோய் வந்து மன உளைச்சல் அடைவதை விட, நோய் வராமல் தடுக்கும்.
இதனையும் படிக்கலாமே
- முருங்கை கீரை பயன்கள் | Murungai Keerai Soup Benefits in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- திரிபலா சூரணம் பயன்கள் | Triphala Suranam Uses in Tamil
- நரம்பு தளர்ச்சி குணமடைய என்ன செய்ய வேண்டும் | Narambu Thalarchi Solution in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
அணைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்