கூகை கிழங்கு பயன்கள் | Arrowroot in Tamil
சில தாவரங்கள், மூலிகையாகவும், உணவாகவும், பயனளிக்கின்றன. சில தாவரங்கள் மூலிகையாக மட்டும் பயனளிக்கின்றன.
அவற்றில் ஒன்று ஆரோரூட். உஷ்ண பிரதேச தாவரமான ஆரோரூட் கிழங்கானது ஸ்டார்ச் நிறைந்தது. இந்த ஸ்டார்ச்சின் ரூபத்தில் தான் கார்போஹைட்ரெட் தாவரங்களில் சேமித்து வைக்கப்படுகிறது.
ஸ்டார்ச் உடலுக்கு சக்தி தரும் உணவு. ஸ்டார்ச்சை உணவினை ஜீரணிக்க உதவுகிறது ஆரோரூட் உயர்ந்த தரமான எளிதில் ஜீரணமாகும் ஸ்டார்ச் சத்து உள்ளது.
எனவே பலமிழந்த நோயாளிகளுக்கு இது நல்ல ஆகாரம்.
உலகின் மொத்த ஆரோரூட் சேவையை நிறைவு செய்வது மேற்கிந்திய தீவுகளும், அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணங்களும் ஆகும்.
இந்தியாவில் உத்திரப்பிரதேசம், பீகார், ஒரிசா, கேரளா, வங்காளம், அஸ்ஸாம் முதலிய மாநிலங்களில் ஆரோரூட் ஓரளவு ஆரோரூட் கிழங்குகளால் பயரிடப்படுகிறது.
இது நட்ட பத்து முதல் பதினோரு மாதங்களில் அறுவடை செய்யப்படுகிறது. ஆரோரூட் இலைகள் வாடி வதங்கி தொங்கும் போது தண்டு கிழங்கின் முதிர்ச்சி அடைந்ததை தெரிந்து கொள்ளலாம்.
கிழங்குகள் பூமியிலிருந்து தோண்டி எடுத்து சேகரிக்கப்படுகின்றன.
கிழங்குகளின் மேல் பாகத்தில் ஸ்டார்ச் குறைவு என்பதால் அவை வெட்டிவிட படுகிறது. பின் கிழங்குகள் தோல் உரிக்கப்பட்டு கழுவப்பட்டு, கூழாக்கப்படுகின்றன.
இந்த கூழுடன் சிறிதளவு நீரினை சேர்த்து சன்னமான சல்லடை அல்லது துணிகளளில் செலுத்தப்படும்.
வடிகட்டப்பட்ட கலவையினை நன்றாக தெளிய வைக்கவும். பின்னர் அடியில் சேரும் பொடி பலமுறை கழுவப்படுகிறது.
இவ்வாறு பிரித்து எடுக்கப்பட்ட பொடி, வெயிலில் உலர்த்தி விற்பனைக்காக பாக்கெட் செய்யப்படுகிறது.
ஆரோரூட் பயன்கள்
குழந்தைகள், பலவீனமான நோயாளிகள், நோய் குணமானவுடன் ஓய்வெடுத்துக் கொள்பவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
பிஸ்கட், கேக் போன்றவற்றில் சேர்க்கப்படுகிறது. முக பவுடர்களில் சேர்க்கப்படுகிறது.
சில ஒட்டும் பசை, பிசின் தயாரிப்பில் உதவுகிறது.
மருத்துவ பயன்கள்
அருமருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இது பேதி, ரத்த பேதி, சுவாச நோய்கள் இவற்றிற்கு நல்ல மருந்து.
அமீமாவினால் ஏற்படும் பேதிக்காக கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளில் ஆரோரூட் சேர்க்கப்படுகின்றனர். மத்திய பிரதேச ஆதிவாசிகள் பால் புலியுடன் சேர்த்த ஆரோரூட் பொடியை மஞ்சள் காமாலை மருந்தாக பயன்படுத்து கின்றனர்.
சரும நோய்களுக்கு மருந்தாக பயனாகிறது. ஆயுர்வேத மருந்துகளான சவனப்பிராசம், அஸ்வகந்தா லேகியம் இவற்றில் ஆரோரூட் சேர்க்கப்படுகிறது.
ஆரோரூட் மாவை தேவையான அளவு குளிர்ந்த நீரில் கரைத்து, போதுமான அளவு தண்ணீர் விட்டு கட்டி படாமல் சிதறும். கஞ்சி பதம் வந்ததை சீனி போட்டு சாப்பிட கொடுக்கவும்.
இது கெட்டியாக இராமல் கஞ்சி தண்ணீர் பதமாக இருக்க வேண்டும். இதனை குடிப்பதால், காய்ச்சல், அஜீரணம்,வயிற்று போக்கு, மாந்தம் ஆகிய நோய்களை குறைய செய்யலாம்.
இதனையும் படிக்கலாமே
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
- மூக்கிரட்டை கீரை பயன்கள் | Mookirattai Keerai Benefits in tamil(Opens in a new browser tab)
- நிலக்கடலை பயன்கள் | Nilakadalai payangal in Tamil(Opens in a new browser tab)
- பாகற்காய் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகள்(Opens in a new browser tab)
- அமுக்கிரா கிழங்கு பயன்கள்(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கரிசலாங்கண்ணி மருத்துவ பயன்கள் | benefits of karisalankanni in tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
7 Comments
Comments are closed.