கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil

கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil

கிராம்பு பயன்கள் Kirambu Benefits in Tamil

கிராம்பு பயன்கள் | Kirambu Benefits in Tamil கிராம்பு பெரும்பாலும் ஊக்குவித்தல், தூண்டுதல் உண்டாகும் பொருளாக உள்ளது. பல வழிகளை போக்குவதுடன் மிகச்சிறந்த நிவாரணி.

உடலின் சூட்டை சமன்செய்கிறது  இது நமது இரத்த ஓட்டதினை  முறைப்படுத்துகிறது.

ஜீரண கோளாறுகள்

ஜீரண உறுப்புகளில் சுரக்கும்  நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரண கோளாறுகள் நீங்குகின்றன. கிராம்பை மருத்துவ குணங்கள்.

வாந்தி நிற்க

கிராம்பினை நன்கு வருது அதனை  பொடி பொடியாக அரைத்து  அதனுடன் ஒரு  ஒரு ஸ்பூன்  தேனினை  குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும்.

கிராம்பு பயன்கள் Kirambu Benefits in Tamil

காலரா குணமடைய

கிருமிகள் நிறைந்த தண்ணீரை குடிப்பதன் மூலமாக மிக விரைவில் காலரா நோயானது பரவக்கூடியது. இந்த காலரா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பேதி, வாந்தி இது போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

இதனால் இறப்பு கூட ஏற்பட நேரிடலாம். ஒரு நான்கு முதல் இந்து  கிராம் கிராம்பினை  மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அதனை அரை பங்காக  சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்து பருகினால் காலரா குணமடையும்.

கிராம்பு காலரா நோயில் இருந்து நம்மை பாதுகா கூடியது. இந்த கிராம்பானது காலரா நோய் கிருமிகளுக்கு எதிராக செயல்பட்டு நமது உடலினை பாதுகாக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

கிராம்பில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகம் கொண்டுள்ளது. ஏனென்றால் இதில் காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை மிகுந்த அளவு உள்ளது.

எனவே இந்த கிராம்பினை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியானது அதிகரிக்கின்றது.

ஆகவே உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படும். மேலும் இந்த கிராம்பானது பல்வேறு வகை தொற்றுக் கிருமிகளிலிருந்து நமது உடலினைப் பாதுகாக்கிறது.

தொண்டை எரிச்சல்

சிறிது சமையல் உப்புடன் கிராம்பினை சேர்த்து சாப்பிடுவதன் மூலமாக   தொண்டை எரிச்சல் மற்றும்  கரகரப்பு நீங்கி தொண்டை எரிச்சலானது சரியாகும்.

தொண்டை அடைப்பால் உருவாகின்ற எரிச்சல் குணமடைவதற்கு  சுட்ட கிராம்பினை உண்பது   மிகவும் நல்லது.

கிராம்பு பயன்கள் Kirambu Benefits in Tamil

ஆஸ்துமா கட்டுப்படும்

கிராம்பு எண்ணை மூன்று முதல் நான்கு துளி உடன்  தேனினை சேர்த்து அதனுடன்  வெள்ளை பூண்டு சாறு கொஞ்சம் சேர்த்து இரவு உறங்குவதற்கு சற்றுமுன்னரே  சாப்பிட ஆஸ்துமாவால் ஏற்படகூடிய  சுவாச குழல் அலர்ஜி   சரியாகும்.

முப்பது மில்லி நீரில் ஆறு முதல் ஏழு கிராம்பினை  அதில்   போட்டு நன்றாக  கொதிக்க வைத்து அந்த நீரில்  தேன்  கலந்து குடித்து வந்தால்   ஆஸ்துமா கட்டுப்படும்.

புற்றுநோய்

இந்த புற்று நோயானது ஒரு கொடிய வகை நோயாகும். இந்த புற்று நோயினை குணப்படுத்துவதற்கு விலை உயர்ந்த மருந்துகளை பயன்படுத்த நேரிடும்.

கிராம்பினை உணவில் சேர்த்து பயன்படுத்தி வருவதன் மூலமாக புற்றுநோய்க்கு நல்ல பயனளிக்கும். கிராம்பில் இருக்கக்கூடிய பினைல்புரப்போனைடு எனப்படுகின்ற ஒரு வேதிப்பொருளானது உடலில் உள்ள புற்றுநோய் செல்களை எதிர்த்து மீண்டும் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியினை தடுக்கும்.

கிராம்பு பயன்கள் Kirambu Benefits in Tamil

 பல் சம்பந்த பிரச்சனைகளுக்கு

கிராம்பினை பொடி செய்து அதனை பற்பொடியுடன்  கலந்து பல் துலக்கி வருவதன் மூலம் ஆகா வாய் நாற்றம், ஈறு  வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும்.

கிராம்பு எண்ணெயை, ஈறுகள் பாதிக்கப்பட்ட இடங்களில் கிராம்பினை   தடவி  வருவதன் மூலமாக பூரண  குணம் கிடைக்கும்.

காது பிரச்சனைகளுக்கு 

மூன்று முதல்  ஐந்து  துளி நல்லெண்ணையுடன்  ஒரு கிராம்பை  சூடு செய்து அல்லது சிறிய கடாயில் மிதமாக வருத்து   எண்ணையில் போடவும்.  அந்த எண்ணெயை  காதில் வலியுள்ள பக்கம் விட்டால் சுகம் கிடைக்கும்.

சிறுநீரகம்

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் சிறுநீரகத்தின் பங்கு மிக முக்கியமாகும். ஒரு சிலருக்கு சிறுநீரகத்தில் கற்கள் அடைப்பு ஏற்படுவது சிறுநீர் தொற்று ஏற்படுவது போன்ற ஒரு சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இவற்றினை சரி செய்வதற்கு சிறிதளவு கிராம்பினை எடுத்துக்கொண்டு அதனுடன் மிளகினை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.

அரைத்து வைத்த பொடியினை திராட்சை சாறுடன் கலந்து பருகி வருவதன் மூலமாக சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதாவது சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முற்றிலும் குணமாகும்

தசை  பிடிப்பு

நமது உடலில் தசை  பிடிப்பு  எங்கு உள்ளதோ அவ்விடங்களில்   கிராம்பு எண்ணெயை தடவி  வருவதன் மூலமாக தசை பிடிப்பானது குணமடையும்.

கிராம்பு பயன்கள் Kirambu Benefits in Tamil

தலைவலி குணமடைய

கிராம்பு சிறிதளவு உப்பினை  பசும்பாலில் அரைத்து அந்த பசையிணை எடுத்து வைத்து கொள்ளவும்.   அதனை தலையில்  தடவனால் தலை வலி பறந்துவிடும். தலையில் உள்ள நீரை, உப்பு உறிஞ்சி எடுப்பதால்,தலை  பாரம் குறைந்து, குணம் கிடக்கிறது.

கண் இமைகளில் அலர்ஜி

கண் இமைகளில் ஏற்படக்கூடிய அலர்ஜி குணமடைய  கிராம்பினை எடுத்து அதனை மிகவும் பொறுமையுடன் , நீரில் உரச வேண்டும். பின்னர்  அந்த நீரினை கண் இமைகளில் தேய்ப்பதன் மூலம்  குணம் கிடைக்கும்.

கிராம்பு தீமைகள்

உணவு பொருட்களில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் அனைத்துமே, மருத்துவ குணங்கள் நிறைந்தது. அதில் ஒன்று தான் கிராம்பு.

ஆனால், இந்த கிராம்பை அளவுக்கு அதிகமாக எடுத்து கொள்ள கூடாது. ஏனெனில், அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படும். கிராம்பினால்  ஏற்படும் பக்க விளைவுகள் என்ன? என்பதை பற்றி நாம் இந்த பதிவில் காண்போம்.

இரத்தம் தொடர்பான குறைபாடு உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக கிராம்பை பயன்படுத்த கூடாது.

அதே போல அறுவை சிகிச்சை மேற்கொள்ள செல்பவர்கள்  இரண்டு வாரத்திற்கு முன்பே கிராம்பை சேர்க்கக் கூடாது.

உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக  உள்ளதா? நீங்கள் கிராம்பினை தினசரி உணவில் கட்டாயம் எடுத்துக்கொள்ள கூடாது.

கிராம்பு பயன்கள் Kirambu Benefits in Tamil

அளவுக்கு அதிகமாக கிராம்பை எடுத்துக் கொள்ளும்போது, அதனால் பல்வேறு அலர்ஜிகளை சந்திக்க நேரிடும். அதனால் அரிப்பு, வீக்கம் போன்றவை ஏற்பட நேரிடும்.

கிராம்பு எண்ணெயை அடிக்கடி சருமத்தில் பயன்படுத்தக் கூடாது. ஏனெனில், அதில் உள்ள உட்பொருட்கள் சரும உணர்வை இழக்கச் செய்திடும்.

இது போன்று தினம் தினம் ஒரு தகவலை அறிய தினம்தோறும் எங்களது வளையத்தின் முகப்பினை பார்வையிடுங்கள்.

உங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் ஷேர் செயுங்கள் தோழர் தோழிகளே

மஞ்சள் தூள் பயன்கள் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும் Click Here

இதனையும் படிக்கலாமே

English Blog

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning