பன்னீர் நன்மைகள் | Paneer Benefits in Tamil

பன்னீர் நன்மைகள் | Paneer Benefits in Tamil

பளிச்சிடும் வெண்மையான மெத்தென்ற அதன் தோற்றமும், சுவையும் அலாதியானது. அசைவ உணவுக்கு மாற்று என்றே இதை சொல்லலாம்.

அசைவம் சாப்பிட முடியாத பொழுது இந்த பன்னீரை சாப்பிட்டால் அசைவம் சாப்பிட்ட திருப்தி கிடைத்துவிடும்.

அதே சமயம் பன்னீர் சாப்பிடுவதில் நிறைய சந்தேகங்களும் பலருக்கு உண்டு. பன்னீர் சாப்பிடலாமா? கூடாதா? யாரெல்லாம் சாப்பிடக் கூடாது? தினமும் சாப்பிடலாமா? பன்னீர் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா? ஆண்கள் இதை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்? சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா? அணைத்து சந்தேகங்கள் பற்றி பார்ப்போம்.

paneer tamil

பன்னீரில் உள்ள சத்துக்கள்

பொதுவா பன்னீர் என்றாலே இதில் கால்சியமும், புரதச் சத்துக்களும் தான் உள்ளது என்று நினைக்கிறோம். உண்மையில் இதைத் தவிர இன்னும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.

அதாவது, பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த ஒவ்வொரு சத்துகளுமே, நமக்கு மிக அவசியமான சத்துக்களாகும். இதில் உள்ள வைட்டமின் டி, கால்சியம் சத்தை உறிஞ்ச உதவும்.

அதே போன்று வைட்டமின் கே உடலில் புரதத்தை உருவாக்க உதவியாக இருக்கும். இதனால் எலும்புகள் மற்றும் தசைகள் ஆரோக்கியமாக இருக்கும் முடியும்.

இதில் உள்ள ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் கண்பார்வை தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும், தீர்வு தரக்கூடியது.

பொதுவாக புரதம் நிறைந்த உணவுகளில் முட்டைக்கு இணையான நன்மைகளை கொண்டுள்ளது இந்த பன்னீர்.

நோய் எதிர்ப்பு சக்தி

பன்னீரை, அடிக்கடி சாப்பிடு பொழுது, நமது தசைகள், வலிமை அடைவதோடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

புரதம், தசைகளுக்கு நன்மை பயக்கும் என்பது மட்டுமில்லாமல், நோய் எதிர்ப்பு சக்திக்கும் முக்கியமானது. மேலும், இந்த புரதம், உடலுக்கு ஆற்றலையும் தருகிறது.

பன்னீரில் உள்ள வைட்டமின் பி குழந்தைகளின் ஞாபக சக்தியும் அதிகரிக்க உதவும்.

பன்னீர் நன்மைகள்

சருமம்

அடிக்கடி பன்னீர் சாப்பிடு பொழுது சரும ஆரோக்கியம் மேம்படும். காரணம், இதிலுள்ள செலினியம் பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும் இந்தசெலினியம் ஒருஆக்ஸிஜன் இறைச்சியாகும்.

இது செல்களை சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. அது மட்டும் அல்ல ஆரோக்கியமான சருமத்திற்கு தேவைப்படும் வைட்டமின் ஏவும் இதில் உள்ளதால் இதை சாப்பிடும்போது சருமம் பொலிவாக இருக்கும்.

கால்சியம் சத்து

பொதுவாக பற்கள் மற்றும் வலிமையடைய கால்சியம் சத்து தேவை. அந்த வகையில் கால்சியம் இதில் வளமாக உள்ளது.

அதிலும் முக்கியமாக இதில் கால்சியம் சத்தை உறிஞ்ச உதவும் வைட்டமின் டியும் உள்ளதால் இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும்.

பெண்கள் ஆரோக்கியம்

கர்ப்பிணி பெண்களுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவை. அந்த வகையில் இதில் காணப்படும் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ், புரதம், வைட்டமின் பி 12, ஒமேகா மூன்று கொழுப்பு அமிலம் போன்றவை வயிற்றில் வளரும் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்கும், அந்த தாய்க்கும் நன்மை செய்யக்கூடியது.

அதே போன்று மாதவிடாய் நின்ற பெண்கள் பன்னீர் உணவுகளை அடிக்கடி சேர்த்துக் கொள்வது நல்லது. காரணம் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படக்கூடிய எலும்பு தேய்மானத்தை போக்குவதோடு மார்பக புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கிறது.

மூட்டு வலி

பன்னீரில் உள்ள ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் கீழ் வாதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது.

எனவே, மூட்டு வலியால் பாதிக்கப்பட்டவர்கள் பன்னீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

paneer benefits in tamil

உடல் ஆரோக்கியம்

இதில் உள்ள நல்ல பாக்டீரியா, வயிறு ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கும் உதவக்கூடியது.

பன்னீர் இல் பொட்டாசியம் சத்தும் அதிகம் உள்ளது. இது தசைகள் மற்றும் மூளையின் நரம்பு செயல்பாடுகளுக்கு முக்கியமாகும்.

மேலும், ரத்த ஓட்டத்திற்கும் உதவியாக இருக்கும். பொதுவாக, ஜிம்களில் அதிக அளவு உடற்பயிற்சி செய்பவர்கள் அதிக அளவு புரதத்தை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

இதற்கு முட்டையை போன்றே பன்னீரையும் எடுத்துக் கொள்ளலாம். இதிலுள்ள ரிப்போ பிளேவர் புரதம் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது.

மேலும், இது எலும்பு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.உடல் ஒல்லியாக தாராளமாக சாப்பிடலாம்.

ஆண்கள் ஆரோக்கியம்

ஆண்கள் ஏன் அவசியம் சாப்பிட வேண்டும்? பன்னீரில் உள்ள செலினியம் மற்றும் பொட்டாசியம் ஆண்களின் உடலில் உருவாகும் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் தன்மை கொண்டது.

முக்கியமாக ஆண்களின் பிறப்புறுப்பைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயைத் தடுக்கும் தன்மை கொண்டது. அதே போன்று இதை அதிகம் சாப்பிடக் கூடாது.

பன்னீர் எப்படி சாப்பிட வேண்டும்

வாரம் இருமுறை அளவாக சாப்பிடலாம். அடிக்கடி சாப்பிட நேரிட்டால் இதை மட்டும் சாப்பிட்டுவிட்டு வேறு கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடவே கூடாது.

அதே சமயம் புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடு பொழுது வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். இதனால் அதிக பசியும் எடுக்காது.

எனவே உடல் எடையை குறைக்கும் முயற்சியில் உள்ளவர்கள் இதை சாப்பிடு பொழுது கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, இதை மட்டும் சாப்பிடலாம்.

அதே சமயம் இவர்கள் இதை எண்ணெயில் பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிடவே கூடாது. பொதுவாக, பன்னீர் உணவுகளின் நன்மை கிடைக்க வேண்டுமென்றால் அதிக எண்ணெயில் வறுத்தோ அல்லது நிறைய எண்ணெய், வெண்ணெய் ஊற்றி சமைக்கக் கூடாது.

இது உடல் எடையை அதிகரிப்பதுடன் இதய நோய்களையும் கொண்டு வந்துவிடும். அது மட்டுமல்ல, இதை அதிகமாக வறுத்தாலோ அல்லது பொரித்து சாப்பிட்டாலோ இதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும்.

எனவே இதை சாண்ட்விச், குழம்பு,  முட்டைப் பொரியல் இவற்றில் கலந்து சாப்பிடலாம். அதே சமயம் தினமும் அதிக அளவில் சாப்பிடுவது கூடாது.

காரணம் கார்போஹைட்ரேட் குறைவு என்றாலும் கொழுப்பு சத்து அதிகம் உள்ளதால் இதை அதிகம் சாப்பிடு பொழுது கொழுப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, அளவாக சாப்பிடுவது நல்லது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

பன்னீர் யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

உடல் எடை மிக உள்ளவர்கள், இதய நோய் உள்ளவர்கள், ஆஸ்துமா, அலர்ஜி இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

அதே போன்று, மற்றவர்கள் இதை தினமும் சாப்பிடுவதும் கூடாது. சர்க்கரை நோயாளிகள் அளவாக வாரம் இரண்டு முறை சாப்பிடலாம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning