பச்சை பயிரின் பயன்கள் benefits of green lentil
நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும் பருப்பு வகைகளில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நம் அன்றாட உணவில் சிறிதளவு பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்வதன் மூலமாக உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். அதில் பருப்புகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக பச்சை பயிறு பாசிப்பருப்பு திகழ்கிறது. பச்சை பருப்பினை வாரத்தில் ஒரு முறையாவது உட்கொண்டு வருவதன் மூலமாக எண்ணற்ற நன்மைகளை பெறலாம்.
மேலும் ஒரு கப் வேக வைக்கப்பட்ட பச்சை பயறில் 100 கலோரிகள் இருக்காது. பச்சைப்பயிறு நம் உடலில் நோய்கள் தாக்குதலிலிருந்து தடுப்பது மட்டுமல்லாமல் தலைமுடி மற்றும் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளது.
வாருங்கள் நம் பச்சை பயிறு உண்பதால் வரும் நன்மைகள் பற்றி விரிவாக காண்போம்!!!
உடல் எடையை குறைக்க

எவ்வாறு?
இக்கால கட்டத்தில் உள்ள உணவு வகைகளால் உடல் பருமன் அதிகரிக்கின்றது. அதிகப்படியானவர்கள் மனதில் உள்ள மிகப்பெரிய கவலை என்னவென்றால் உடல் பருமனை எவ்வாறு குறைப்பது என்பதுதான். பச்சைப்பயிறு உடல் பருமனைக் குறைக்க மற்றும் உடல் எடையினை சீராக வைத்துக் கொள்ள ,பச்சை பயிறு மிகவும் உதவியாக உள்ளது. பச்சைப்பயிறு உடல் பருமனைக் குறைக்க மற்றும் உடல் எடையினை சீராக வைத்துக் கொள்ள பச்சை பயிறு மிகவும் உதவியாக உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் பச்சை பயறு நீண்ட நேரம் நமது வயிற்றினை நிறைவாக வைத்திருக்கும் . ஆகவே உடல் எடையை குறைக்க முயற்சிப்போர் சப்பாத்தி சாப்பிடும் போது அதனுடன் ஒரு கப் பச்சை பயிறை சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதுடன் உடல் எடையும் கட்டுப்படுத்துகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது



எவ்வாறு?
பச்சை பயறு இரத்த அழுத்தத்தினை கட்டுப்பாட்டுடன் வைக்கவும், மற்றும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும் பெரிய அளவில் பயன்படுகிறது. எனவே அன்றாடம் பச்சை பயறு அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இரும்புச்சத்து நிறைந்துள்ளது
இன்றைய காலகட்டத்தில் மக்கள் உண்ணும் உணவு வகையின் காரணமாக பெரும்பாலானோர் பெரும் பிரச்சினைகள் அவதிப்படுகின்றனர் அதில் மிகவும் முக்கியமான ஒன்று இரும்புச்சத்து குறைபாடு. பச்சை பயிறு அன்றாட வாழ்வில் சிறிதளவு சேர்த்துக் கொண்டு வரும்போது அதில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து கிடைக்கிறது மற்றும் இரத்த சோகையில் இருந்து தப்பிக்கலாம்.
சரும புற்றுநோய் குணப்படுத்துகிரது



இன்றைய நடைமுறையில் நம் சருமத்தினை அழகான தோற்றத்துடன் காட்சி அளிப்பதற்காக நாம் பல ரசாயனம் கலந்த திரவங்களை பயன்படுத்துகிறோம் இதனால் நாளடைவில் சரும புற்றுநோய் உண்டாகிறது. எனவே தினமும் நாம் சிறிதளவு பச்சை பயரினை அல்லது பாசிப் பருப்பை உணவில் சேர்த்து வருவதன் மூலமாக சரும புற்றுநோய் ஏற்படுவதைத் முற்றிலுமாக தடுக்கலாம்.
பச்சை பயிறு பற்றிய காணொளியை காண இங்கே சொடுக்கவும்.
பச்சை பயிறு பற்றிய ஆங்கிலத்தில் படிக்க கீழே சொடுக்கவும்.
நமது வலைபதிப்பில் தினம் தினம் ஒரு சித்த மருத்துவம் சார்ந்த பதிவு பதிவிடபடுகிறது. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் மற்றும் வினாக்கள் இருந்தால் contact us இல் பதிவிடவும். இதற்கான Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.