அவரைக்காய் பயன்கள் | Avarakkai in Uses Tamil
உடலுக்கு ஆரோக்கியத்தையும் வலிமையையும் தரக்கூடிய அவரைக்காய் ஒரு கொடி வகை செடியாகும்.
இதில் சுண்ணாம்பு சத்து வைட்டமின்கள் நிறைந்துள்ளது. மேலும் குறைந்த அளவில் கொழுப்பு கனிம சத்துக்கள் தேவைக்கேற்ப உள்ளன.
சிறிது இடம் இருந்தாலே போதும் அவரைக்காய் செடிகளை வளர்ப்பதற்கு.
இரும்புச்சத்து
நமது உடலில் ஓடக்கூடிய ரத்தம் சிவப்பு நிறம் பெறுவதற்கு அவரைக்காய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
அனைத்து சத்துக்களும் உடலில் உள்ள அனைத்து பகுதிகளிலும் செல்வதற்கு ஹீமோகுளோபின் என சொல்லக்கூடிய புராதமானது உடலில் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருந்தால்தான் உடல் ஆரோக்கியத்துடனும் வலுவாகவும் இருக்கும். அவரைக்காயில் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.
எனவே இது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவினை சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள பெரிதளவில் உதவி புரிகிறது.
சுவாச கோளாறுகள்
நுரையீரல் சார்ந்த நோய்கள், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் ஒருசிலருக்கு உள்ளது. ஒரு சிலருக்கு நாட்பட்ட வறட்டு இருமல் நீங்காமல் இருக்கும்.
மேற்கண்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் அவரைக்காய் அதிகம் சாப்பிடவேண்டும். ஏனென்றால் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.
மேலும் அடிக்கடி அவர் அதை நீ சாப்பிட்டு வருவதன் மூலமாக நுரையீரலுக்கு பிராணவாயு மிக சுலபமாக சுவாசிக்க முடிகின்றது.
பற்கள்
கால்சியம் சத்தானது நமது உடலில் இருக்க வேண்டிய மிக முக்கியமான சத்தாகும்.
கால்சியம் சத்தானது உடலில் சரியான விகிதத்தில் இருக்கும் பொழுதுதான் உடலில் உள்ள பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகவும், ஆரோக்கியத்துடனும் இருக்கும்.
எனவே கால்சியம் சத்தானது மிகவும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதினால் வாரத்தில் குறைந்தது இரண்டு முறையேனும் சாப்பிட்டு வர வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டு வருவதன் மூலமாக பற்கள் நன்கு வலுவாகும்.
மன அழுத்தம்
எதை எடுத்தாலும் அவசரம், பரபரப்பான வாழ்க்கை, எதற்கெடுத்தாலும் கோபம் போன்ற ஒரு சில காரணங்களினால் மனிதர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கின்றது.
அதுமட்டுமல்லாமல் பதற்றம், நரம்புக் கோளாறுகள், இரவில் தூங்கச் சென்றால் தூக்கமின்மை இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
அவரைக்காய் அதிக அளவில் சாப்பிட்டு வருவதன் மூலமாக நரம்புகள் நன்கு வலுப்பெறும் இதன் மூலமாக உடல் மற்றும் மனநலம் ஆனது மேம்படும்.
நோய் எதிர்ப்பு
சக்தி நோயெதிர்ப்பு சக்தியானது வயது முதிர முதிர குறைந்து கொண்டே செல்லும்.
ஆகவே வயது அதிகரிக்க அதிகரிக்க நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கக்கூடிய உணவுகளை தினமும் சாப்பிட்டு வர வேண்டும்.
அவரைக்காயில் உள்ள சத்துக்கள் நுண்ணுயிரிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராட கூடிய ஆற்றல் கொண்டது.
அவரைக்காய் சாப்பிட்டு வருவதன் மூலமாக தொற்று நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கலாம்.
மேலும் இதில் உள்ள சத்துக்கள் நமது ரத்தத்தில் கலந்து நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கின்றது.
ஊட்டச்சத்து
அவரைக்காய் என்பது அதிக அளவு ஊட்டச்சத்து நிறைந்த ஒரு உணவாகும் கருதப்படுகின்றது. ஏனெனில் இது ரத்த சிவப்பு அணுக்களின் பிராணவாயுவை அதிகரிகிகும் ஆற்றலை கொண்டுள்ளது.
இதன் மூலமாக உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைக்கின்றது ஆகவே நாள் முழுவதும் உற்சாகத்துடனும் சுறுசுறுப்பாகவும் விரைவில் சோர்வடையாமலும் செயல்படலாம்.
ஆகவே சத்துக்கள் நிறைந்த ஆவரைக்காய் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
இதயம்
இதயம் சம்பந்தமான நோய்கள் நோய்கள் மற்றும் புற்று நோய்கள் உள்ளவர்கள் இயற்கை வகையில் கிடைக்கக்கூடிய உணவுகளை சாப்பிட்டு வருவது மிகவும் அவசியமாகும்.
ஏனென்றால் அதில் உள்ள சத்துக்கள் தான் நமது இதயத்தினை ஆரோக்கியமாக செயல்பட வைக்கின்றன.
அவரைக்காய் நெய் சாப்பிடுவதன் மூலமாக பொட்டாசியம் சத்தானது அதிக அளவில் நமது உடலுக்கு கிடைக்கின்றது.
மேலும் இது இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லக்கூடிய நரம்புகளின் இருக்கத்தினை குறைத்து இதயத்திற்கு ரத்தம் வேகமாக செல்ல வழிவகுக்கிறது.
எனவே மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு.
மலச்சிக்கல்
மலச்சிக்கல் காரணத்தினால் தான் உடலுக்கு அனைத்து விதமான நோய்களும் ஏற்பட அடித்தளம் ஆகிறது.
சாப்பிட்ட உணவுகள் எளிதில் செரிமானம் ஆகாத காரணத்தினால் மலச்சிக்கல் உருவாகின்றது.
அவரைக்காயில் நார்ச்சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே அவரைக்காய் சாப்பிட்டு வருவதன் மூலமாக மலச்சிக்கல் குணமாகும்.
உடல் எடை
உடல் எடை அதிகமாக இருப்பது பலருக்கு மன அழுத்தத்தையும் வேதனையும் தரக்கூடிய ஒன்றாக உள்ளது.
ஒரு சிலர் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பதற்கு உடற்பயிற்சி செய்வது போன்ற பல செயல்பாடுகளை செய்வார்.
உடல் கட்டுக்கோப்பாக இருந்தால்தான் எந்தவித நோய்களும் இன்றி ஆரோக்கியமான வாழ்வினை வாழ முடியும்.
அவரைக்காய் கொழுப்பினை குறைக்க கூடிய ஆற்றல் கொண்டது. எனவே அவரைக்காயை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வருவதன் மூலமாக உடல் எடை அதிகரிக்காமல் உடலை பாதுகாக்கலாம்.
இதனையும் படிக்கலாமே
- அரைக்கீரை பயன்கள் | Arai Keerai Benefits in Tamil(Opens in a new browser tab)
- சப்போட்டா பழத்தின் நன்மைகள் | Sapota Fruit Benefits in Tamil(Opens in a new browser tab)
- தண்டுக்கீரை பயன்கள் | Thandu Keerai Health Benefits(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- பாதாமில் உள்ள சத்துக்கள்(Opens in a new browser tab)
- முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கண்டிப்பாக படிக்கவும்.
3 Comments
Comments are closed.