தலை வலி குணமாக | Headache Home Remedies in Tamil

தலை வலி குணமாக | Headache Home Remedies in Tamil

இன்றைய சூழ்நிலையில் தலை வலி என்பது மிக சாதாரணமான ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து TV, cell phone மற்றும் கணினியை பார்த்துக் கொண்டே இருப்பதாலும் கூட தலை வலி உண்டாகிறது.

அதுமட்டுமல்லாமல் ஒற்றைத் தலை வலி கூட இன்று பலருக்கும் இருக்கும் ஒன்றாக உள்ளது. தலையின் ஒரு பகுதியில் மட்டும் வலியை உண்டாக்குகிற வாந்தி அல்லது வாந்தி எடுக்கும் உணர்வுடன் கூடிய சூரிய ஒளியை கண்டால் அதிகரிக்கிற தலைவலியை ஒற்றை தலை வலி என்கிறார்கள்.

தீராத தலைவலி நீங்க

தலை வலி ஏற்பட காரணம்

அதே போன்று சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் தலை வலி வரும். மேலும் பருவநிலை மாற்றம், வெயில், வேலைப்பளு, அழுத்தம் இப்படி பல காரணங்களால் அடிக்கடி தலைவலிக்கு ஆட்படுவது உண்டு.

பொதுவாக கால் வலி, முதுகு வலியைக் கூட தாங்கிக் கொண்டு, வேலை செய்து விடலாம். ஆனால் தலை வலி வந்தால் பாடாய் படுத்திவிடும். நகர முடியாது. வேலைகளை செய்ய முடியாது.

ப்படி தலை வலி வந்தால் சரியானால் போதும் என்று பக்க விளைவு அறிந்தும் நிறைய பேர் மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.

ஆனால் அது போன்று அடிக்கடி வலி மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் அது சிறுநீரகத்தை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

ஆனால் செலவே இல்லாமல் வந்த தலைவலியை உடனடியாக போக்கும் வைத்திய முறைய நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்தனர்.

தலை வலி குணமாக

இயற்கையான வழிமுறையை நாமும் பின்பற்றினால் அடிக்கடி தலை வலி வராமல் பார்த்துக் கொள்ள முடியும். வந்த வலியையும் உடனடியாக சரி செய்ய முடியும்.

தலைவலியை ஐந்தே நிமிடத்தில் போக்கும் ஒரு இயற்கை முறை பற்றி பார்ப்போம். நம் மூக்கில் உள்ள இரண்டு துவாரங்களையும் காற்றை சுவாசித்து உள்ளிழுக்கவும் வெளியிடவும் பயன்படுத்துகிறோம்.

ஒரு பக்க தலைவலி வர காரணம்

தலை வலி வரும்போது மட்டும் வலது துவாரத்தை மூடி, இடது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும். இது போன்று செய்தால் ஐந்தே நிமிட நேரத்தில் தலை வலி காணாமல் போய்விடும். அதே போன்று மிகவும் களைப்பாக இருக்கும் பொழுது இடது துவாரத்தை மூடி வலது துவாரம் வழியாக சுவாசிக்க வேண்டும்.

சிறிது நேரத்தில் களைப்பு போய்விடும். எனவே உங்களுக்கு தலை வலி ஏற்பட்டால் உடனே paracetamol tablets போடாமல் நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning