ஆவாரம் பூ பயன்கள் | Avarampoo payangal in Tamil
சரும அழகு
ஆவாரம் பூ இரநூறு கிராம் அளவிற்கு சேகரித்து , சுத்தம் செய்து வெங்காயம் பருப்புடன் புளி சேர்க்காமல் சமையல் செய்து தொடர்ந்து இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வந்தால் சருமம் பொன்னிறம் ஆகி அழகு கொடுக்கும்.
சிறுநீரக செயல்பாடு
ஆவாரம் பூ சிறுநீரகத்தை முறையாக செயல்பட வைக்க கூடிய திறன் உள்ளது. ஆவாரம் பூ நூறு கிராம் எடுத்து, நூற்றி ஐம்பது மில்லி தண்ணீரில் போட்டு நீர் சுண்டக் காட்சி நூறு மில்லி அளவு தண்ணீர் சுண்ட வைக்கவும்.
இக் கசாயத்தை வடிகட்டி நூறு மில்லி பசும்பாலில் கலந்து இருபது நாட்களுக்கு குறையாமல் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் இயல்பாக செயல்படும்.
ரத்த சுத்திகரிப்பு
ஆவாரம் பூ இலையயை காயவைத்து பொடி செய்து சமமாக கலந்து வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இருபது தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்திகரிப்பு அடையும். ஈரல் நோய்கள் நிவர்த்தி ஆகும். நரம்புத் தளர்ச்சி நீங்கி உடல் பலம் பெறும்.
உடல் சூடு
ஆவாரம் பூக்கள் ஐநூறு கிராம் எடுத்துக் கொண்டு அதை மூன்று லிட்டர் தண்ணீரில் பன்னிரண்டு மணி நேரம் ஊறவைத்து கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வைத்து சாறு சுண்ட எரித்து மூன்றில் ஒரு பாகம் நீர் வற்றியதும் எடுத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
தினசரி காலை மாலை வேளைகளில் பசும்பாலில் நூறு மில்லி கசாயத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டை தணிக்கும், இது சிறுநீர் எரிச்சல், நீர் சுருக்கலை போக்கும்.
இன்சுலின் சுரப்பு
ஆவாரம் பூ, இலை, பட்டை , காய், பிசின் ஆகிய ஐந்தையும் காயவைத்து, பொடித்து சேர்த்து தயாரிக்கப்படும் மருந்து ஆவாரை பஞ்சாங்கம் என்று பெயர்.
இந்த சூரணத்தை தினமும் இரண்டு வேளை இரண்டு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வரவும். எனவே இரத்தம் சுத்தி ஆகும் ஈரல் இல் ஏற்பட்ட நோய்கள் பூரணமாக குணமாகும்.
தடைப்பட்ட இன்சுலின் சுரப்பு மீண்டும் சுரக்க ஆரம்பிக்கும்.
நீரிழிவு நோய்
ஆவாரம் பூ இலையையும் பூவையும் சம அளவாக எடுத்து சாறு பிழிந்தது வேலைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நீரிழிவு நோய் காரணமாக சிறு வயதில் தோன்றும் சர்க்கரை குறையும்.
நூறு கிராம் ஆவாரம் விதைகளை பொறித்து, நூறு மில்லி மோரில் நான்கு மணி நேரத்திற்கு குறையாமல் ஊற வைக்கவும்.
மீண்டும் அம்மியில் வைத்து நன்கு அரைத்து, விழுதை நெல்லிக்காய் அளவு எடுத்து கொள்ளவும்.
அதனை முன்னூறு மில்லி அளவு மோரில் கலக்கி தினசரி காலை மாலை இரண்டு வேலை சாப்பிட்டு வந்தால்இருபது முதல் நாற்பது தினங்களில் நீரிழிவு நோய் நிச்சயமாகவும் நிரந்தரமாகவும் நிவர்த்தி ஆகும் .
ஆவாரம் பூ சூரணத்தை தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து பசும்பால் அல்லது சுடு நீரில் கலந்து சாப்பாட்டுக்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். இவ்வாறு இரண்டு மாதங்கள் சாப்பிட்டு வரவும்.
எனவே நீரிழிவு, பிற மேகம், சிறுநீரில் சர்க்கரை, அதிகமூத்திரம், உடல் சோர்வு, அதிக பசி, அதிக தாகம், உடல் விளைத்தல், தூக்கமின்மை ஆகிய நோய்கள் குணமடையும்.
மூலம்
ஆவாரம் கொழுந்து ஆவாரம்பட்டை ஆவாரம் பூக்கள் இவைகளை சமமாக எடுத்து உலர்த்தி இடித்து பொடி செய்து வைத்து கொள்ளவும்.
இதனை அரை தேக்கரண்டி அளவு எடுத்து நெய்யில் குழைத்து சாப்பிட்டு வரவும். இருபது தினங்களில் உள் மூலம் முதல் அனைத்து வகை மூலங்கள் நிவர்த்தி ஆகும்.
வியர்வை நாற்றம்
ஆவாரை பஞ்சாங்க சூரணம் மூன்று பங்கும்,கோரைக்கிழங்கு சூரணம், கிச்சிலி கிழங்கு சேர்த்து அரைத்து அரைத்து வைத்துக் கொண்டு தினம் தினம் குளியலில் பயன்படுத்தி வந்தால், உடலின் வியர்வை நாற்றம் முதல் கற்றாழை நாற்றம் வரை நீங்கிவிடும் .
நீர்க்கடுப்பு
ஆவாரை பஞ்சாங்க த்தில் நூறு கிராம் எடுத்து, ஐந்நூறு மில்லி தண்ணீரில் கலந்து நூறு மில்லி ஆகும்படி காட்சி வடிகட்டி வைத்துக் கொண்டு தினசரி காலை, மாலை அறுபது மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் குணமாகும்.
உடையாத கட்டிகள்
ஆவாரம் பூ வினை நன்றாக சிதைத்து விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து கொள்ளவும். அதனை நீண்ட நாள்களாக உடையாத கட்டிகளின் மீது தடவி வருவதன் மூலமாக விரைவில் கட்டிகள் பழுத்து உடைந்துவிடும்.
கட்டிகள் உடைந்த பின் ஆவாரம்பூ, பஞ்சாக சூரணத்தை தேங்காய் எண்ணையில் கலந்து சூடு செய்து புண்களின் மீது தடவி வந்தால் சில தினங்களில் புண்கள் ஆறிவிடும்.
உடல் அரிப்பு
ஆவாரம் பூக்களின் பொடியுடன் பச்சை பயிறு மாவு பாதிப்பங்கு சேர்த்து வைத்துக் கொண்டு காலை வேளையில் உடலில் தேய்த்து குளித்து வந்தால். உடலில் ஏற்படும் அரிப்பு, நமைச்சல் மூன்று நாட்கள் உபயோகித்து குணமாகும்.
கை கால் வீக்கம்
ஆவாரம்பட்டை ஐம்பது கிராம் எடுத்து பொடி செய்து கால் லிட்டர் தண்ணீரில் கலந்து நன்றாக காட்சி சண்ட வைத்துக் கொண்டு தினசரி ஒரு தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட்டு வரவும். இதனால் கை கால்களில் ஏற்படும் வலியும் வீக்கமும் குறைந்துவிடும்.
ஆவாரம் விதை முப்பத்தி ஐந்து கிராம் சீரகம், சந்தனம், சர்க்கரை வகைக்கு ஐந்து கிராம் சேர்த்து இவைகளை எலுமிச்சம்பழம் சாறு விட்டு அரைத்து வேலைக்கு மூன்று வேளை சாப்பிட்டால் கை கால் அசதி, உடல் வலி தீரும்.
கண்களுக்கு குளிர்ச்சி
ஆவாரம் பூக்களை வதக்கி இரவு படுக்கும் போது கண்களின் மேல் வைத்து கட்டி வந்தால் கண் எரிச்சல், கண்களில் நீர் வடிதல் கண்களில் கூச்சம் மூன்று நாட்கள் கடைபிடித்து வந்தாலே குணமாகும். கண்களும் குளிர்ச்சி அடையும்.
மேலும்
ஆவாரம் வேரை சுத்தம் செய்து இடித்து சாறு எடுத்து ஐம்பது மில்லி அளவு சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
ஆவாரம் மூலிகையின் அனைத்து பாகங்களும் நீரிழிவு, எலும்புருக்கி நோய்களையும், கண் நோய்களையும், மூல நோய்களையும், புரையோடிய புண்களையும், சிறுநீரக கோளாறுகளையும், வெள்ளை வெட்டை நோய்களையும் நீக்க பயன்படுத்தப்படுகிறது.
அலர்ஜி அறிவிப்புகளை நீக்குகிறது.
வாதம் சம்பந்தமான நோய்களை போக்கவும் பயன்படுகிறது.
ஆவாரம் பஞ்சாங்கத்தை ஒரு தேக்கரண்டி அளவு ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி அதில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக வறட்சி , அதிக தாகம் , மூச்சுத்திணறல், மயக்கம், நீரிழிவு நீங்கும்.
உடம்பு தங்க நிறம் ஆகும் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
இதனையும் படிக்கலாமே
முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா
மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?
முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?
English Overview :
Here We have ஆவாரம் பூ பயன்கள் | Avarampoo payangal in Tamil பூ பயன்கள் | Avarampoo payangal in Tamil .Is also called ஆவாரம் பூ அழகு குறிப்புகள் or ஆவாரம் பூ பயன்கள் or ஆவாரம்பூ பயன்கள் or ஆவாரம்பூ நன்மைகள் or ஆவாரம்பூ பொடி பயன்கள் or ஆவாரம்பூ மருத்துவ குணங்கள் or ஆவாரம் பூ மருத்துவ குணங்கள் or ஆவாரம் பூவின் பயன்கள் or ஆவாரம்பூவின் நன்மைகள் or ஆவாரம் பூவின் மருத்துவ குணங்கள் or ஆவாரம் பூ கஷாயம்
4 Comments
Comments are closed.