தான்றிக்காய் பயன்கள் | Thandrikai Uses in Tamil
தான்றிக்காய் என்பது ஒரு மர வகை இனம். இந்த தான்றிக்காய் மரமானது பெரும்பாலும் மலைப் பகுதிகளில் காணப்படுகிறது. இந்த தான்றிக்காய் மரத்தின் பட்டைகள் மற்றும் பழங்கள் சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றது.
இது இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா நாடுகளில் அதிக அளவில் உள்ளது. தான்றிக்காய் ஆனது இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவை கொண்டது. செரிமானத்தின் பொழுது இது இனிப்பு சுவையாக மாறும்.
உஷ்ணத்தன்மை கொண்டது. தான்றிக்காயில் 17 சதவீதம் டேனின், 25 சதவிகிதம் மஞ்சள் எண்ணெய், மற்றும் சைபோனின் மாவுப்பொருட்கள் அடங்கியுள்ளன.
இது ஒரு காயகல்பம் ஆகும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றினை சேர்த்து திரிபலா சூரணம் ஆனது தயாரிக்கப்படுகிறது.
திரிபலா சூரண பொடியை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் ஆனது இரும்பு போன்ற உறுதியாகி, நோயற்ற வாழ்வினை பெறலாம்.

மாரடைப்பு குணமாகும்
இந்த தான்றிக்காய் பொடியை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலமாக மாரடைப்பு சரியாகும்.
அது மட்டும் இல்லாமல் பல் வலி, சிலந்தி கடி விஷம் நீங்க, இரைப்பு பிரச்சனை குணமாக உதவுகின்றது.
சிறந்த வலி நிவாரணி
இந்த தான்றிக்காயில் இருந்து பிரித்தெடுக்கப்படக்கூடிய எண்ணையானது கை, கால், மூட்டு வலி நீங்குவதற்கு மிகவும் பயன்படுகிறது.
மேலும் தலைமுடியின் வளர்ச்சிக்கும் இந்த எண்ணை பயன்படுத்தப்படுகிறது.
தொண்டை கரகரப்பு
தான்றிக்காய் பொடியானது தொண்டை கரகரப்புக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது. மேலும் ஆஸ்துமா பிரச்சனை, ரத்தத்துடன் கலந்து வரக்கூடிய சளி மற்றும் குரல் வளத்தினை அதிகரிக்கவும் பயன்படுகிறது.
அது மட்டும் இல்லாமல் வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.
கண் பார்வை
இன்றைய காலகட்டத்தில் சாதாரணமாகவே 20 வயது கடந்து விட்டாலே கண்ணாடி போடும் நிலையானது ஏற்படுகின்றது.
கண் பார்வை நன்கு தெளிவாக தான்றிக்காய் பொடியை ஒரு டம்ளர் நீரில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து காலை, மாலை இரு வேலைகளும் அருந்தி வருவதன் மூலமாக கண் பார்வை தெளிவாகும்.
தலைமுடி
தலைமுடி அதிகமாக வளர்வதற்கு தான்றிக்காய் பொடியை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வு பிரச்சனை மற்றும் மெலிந்த முடிகள் நன்கு வலுவாகும்.
அது மட்டும் இல்லாமல் தான்றிக்காய் பொடி தலைமுடிக்கு நல்ல ஊட்டம் அளிக்கும்.
பல் வலி
பல் வலி பிரச்சினையினால் அவதிப்படுபவர்கள் தான்றிக்காய் இணை நன்றாக சுட்டு அதன் மேல் பகுதியினை பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
அந்த பொடிக்கு சரியான விகிதத்தில் சர்க்கரை கலந்து தினசரி காலை வெந்நீரில் கலந்து குடித்து வருவதன் மூலமாக பல் வலி மற்றும் பல் சம்பந்தப்பட்ட நோய்கள் அனைத்தும் சரியாகும்.
புண்கள் குணமாக
புண்கள் குணமாகும் தான்றிக்காய் நன்றாக தூள் செய்து அந்த தூளுடன் தண்ணீர் சேர்த்து அடிபட்ட காயங்கள் மீது தடவி வருவதன் மூலமாக விரைவில் குணமாகும்.
மேலும் இந்த தான்றிக்காய் இணை ஏதேனும் ஒரு வகையில் உணவில் சேர்த்து வருவதன் மூலமாக இரைப்பைக்கு நல்ல ஒரு பலத்தினை கொடுக்கக்கூடியது.
வயிற்று உபாதைகள்
வயிற்றுப்போக்கு, அஜீரணம் இது போன்ற வயிறு சார்ந்த பிரச்சினைகளால் அவதிப்படுபவர்கள் தான்றிக்காய் பழத்தினை சரியான முறையில் எடுத்துக் கொண்டு வரும் பொழுது குணமாகும்.
இதனையும் படிக்கலாமே
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
- கால்சியம் அதிகம் உள்ள உணவு வகைகள் | Calcium Foods in Tamil
- மாதுளை பழத்தின் நன்மைகள் | Pomegranate Benefits in Tamil
- ஆப்பிள் பழத்தின் நன்மைகள் | Apple Benefits in Tamil
- குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Rice Benefits in Tamil
- புடலங்காய் நன்மைகள் | Pudalangai in Tamil
- புரோட்டீன் உணவுகள் பட்டியல் | Protein Rich Food in Tamil
அனைவரும் நமது வலைதளத்தில் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.