கல் உப்பு தீமைகள் | Side Effect of Salt in Tamil
உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழி நம் எல்லாருக்கும் தெரியும். எவ்வளவு தான் சுவையாக சமைத்தாலும் அதில் உப்பு இல்லை என்றால் அந்த உணவு சுவை இல்லாமல் போய்விடும்.
அதே போன்று அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் கூட நஞ்சு தான் பழமொழியையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதாவது உப்பு என்னதான் சுவையை அதிகரித்தாலும் அளவுக்கு அதிகமா பயன்படுத்தினால் அது நமக்கு விஷமாக மாறி உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் பல நோய்களை உண்டு பண்ணும்.
அந்த வகையில், இங்கே கல் உப்பு அதிகம் சாப்பிட்டால் நம் உடலில் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும்? யாரெல்லாம் உப்பை தவிர்க்க வேண்டும்? உப்பு அதிகம் உள்ள தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? இது போன்ற சந்தேகங்களுக்கு இந்த பதிவினை இறுதி வரை படியுங்கள்.
சோடியம்
உப்பு சத்து என்பது அன்றாட உடல் ஆரோக்கியத்திற்கும் உடல் செயல்பாடுகளுக்கும் மிக முக்கியமானது. அதாவது சோடியம் சத்துதான் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் நடக்கும் செயல்களுக்கும் முக்கியமானது.
ஆனால் அதே சோடியம் சத்தை அளவுக்கு அதிகமாக எடுக்கும் பொழுது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களும் பாதிக்கப்படும் என்பதும் உண்மை.
இதன் பாதிப்பு வெளியில் தெரியாமலேயே இருந்துவிடும். இறுதி நிலையில் சிறுநீரக கோளாறு அல்லது இரத்த கொதிப்பாக மாறிவிடுகிறது.
சிறுநீரக கற்கள்
உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரக கற்கள் உருவாகும். அதே போன்று, நீரிழிவு நோய் ஏற்படக் காரணமாகவும் அமையும்.
முக்கியமாக மருத்துவர்களின் அறிவுரைப்படி ஒருவர் ஒரு நாளைக்கு, இரண்டு தேக்கரண்டி உப்பை மட்டுமே உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம்
உடலில் சோடியத்தின் அளவு அதிகரிப்பது நல்லது இல்லை என்றும் அதிலும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஒருதேக்கரண்டி உப்பு மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி உப்புதான் என்றும் கூறப்படுகிறது.
நீர்க்கட்டு
வீக்கமானது முட்டி, பாதம் மற்றும் கை பகுதிகளில் இருந்தால் அது நீர்க்கட்டாக இருக்க வாய்ப்புள்ளது. அதாவது உடலில் அதிக அளவு சோடியம் சேரும் பொழுது அது உடலில் இருக்கும் நீரின் அளவைக் குறைக்கும்.
இதன் விளைவாக கை மற்றும் வீக்கம் ஏற்படும். எனவே அதிக அளவு உப்பு சேர்ப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இதயம் செயயலிழப்பு
ரத்தத்தில் உப்பு அதிகம் சேர்ந்தால் அதை நீர்த்துப் போக செய்ய ரத்தத்துடன் நீர் சேர்ந்து கொள்ளும். இதனால் அணுக்களை சூழ்ந்திருக்கும் திரவம் ரத்தத்தின் அளவும் அதிகரிக்கும். ரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் ரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகரித்து இதயத்தின் செயல்திறன் கூடும்.
இதனால் அதிக ரத்த அழுத்தம் உருவாகி பக்கவாதம், மாரடைப்பு ஏற்படும். இந்நிலை தொடர்ந்தால் இதயம் செயலிழக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
அயோடின் குறைவாக உள்ள உப்புகளை அதிகம் எடுத்துக்கொண்டால் நன்மைகளை விட, தீமைகள் அதிகம் உண்டாகும். இதனால் ஹைப்பர் தைராய்டு போன்ற ஆபத்தான நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
உண்மையில் ருசிக்காக உப்பு சேர்த்தாலும் குறைந்த அளவே உப்பை சாப்பிட்டு பழகினால் நாவில் உள்ள நுண் நரம்புகள் அதற்கு ஏற்றார் போல் மாறிக்கொள்ளும்.
எனவே குறைந்த அளவில் உப்பு சேர்த்த போதிலும் சுவையாக உணர முடியும்.
பாக்கெட் உப்பு தீமைகள்
பாக்கெட் உப்பில் உள்ள அதிக அளவு சோடியம் நமது உடலில் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மனித உடலுக்கு பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், சோடியம் ஆகிய நான்கு விதமான உப்புகள் தேவை.
ஆனால் நாம் சோடியம் கலந்த உப்பை மட்டுமே உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் பொழுது அது நம் உடலில் இருந்து வியர்வையாக, சிறுநீராக வெளியேறாமல் உடலிலேயே தங்கி விடுகிறது.
இதனால் உடல் பருமனும் அதிகமாகிறது. ஆனால் அதே சமயம் உடலுக்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் வெளியேறி விடுகின்றன.
கால்சியம் வெளியேறுவதால் மூட்டு வலி, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் வரும்.
மெக்னீசியம் வெளியேறுவதால் உடல் அசதியும், உயர் ரத்த அழுத்தமும் உண்டாகும். இதனால், மாரடைப்பு, சிறுநீரகப் பழுது ஏற்படவும் வாய்ப்பு உள்ளது என்றும், மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
முக்கிய குறிப்பு
பொதுவாக உணவுகளைப் பதப்படுத்த அவற்றில் உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை சாப்பிடவே கூடாது.
ஏனென்றால் இது வயிற்றுப்புற்று நோயை உண்டாக்கக்கூடியது. அதே போன்று உப்பு அதிகம் சேர்க்கப்படும் சூப், ஊறுகாய்கள், கருவாடு, அப்பளம் மற்றும் குளிர்பானங்கள், இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.
நம் உடலுக்குத் தேவையான சோடியம் நாம் சாப்பிடு காய்கறிகள், கீரைகள் போன்றவற்றில் இருந்து கிடைத்துவிடும்.
முக்கியமாக நாம் சாப்பிடு உணவில் உப்பை அதிகம் சேர்த்தால் அது சிறுநீரகத்தை பாதிக்கும். ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும்.
உப்பு அதிகரிக்கும் பொழுது அதில் உள்ள அதீத சோடியம் உடல் செல்களில் உள்ள தண்ணீரை இரத்த ஓட்டத்திற்கு கொண்டு இதனால் ரத்தத்தில் தண்ணீரின் அளவு அதிகமாகி அதில் அழுத்தம் அதிகரித்துவிடும்.
இதன் விளைவாலும் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் உண்மையில் உணவில் உப்பின் அளவை குறைத்து சாப்பிட்டால் புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு, வயிறு சார்ந்த கோளாறுகளும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
முக்கியமாக ரத்த அழுத்தம், பக்கவாதம், இதய நோய் நீரிழிவு நோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கலாம்.
அதே போன்று ஐம்பது வயதுக்கு மேற்பட்டோர் குறைந்த இரத்த அழுத்தம் அல்லது அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சர்க்கரை நோய் உள்ளவர்கள் சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் உப்பை உணவில் அதிகம் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.
இதனையும் படிக்கலாமே
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
- உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
10 Comments
Comments are closed.