மருதம் பட்டை பொடி பயன்கள் | Marutham Pattai Powder Benefits

மருதம் பட்டை பொடி பயன்கள் | Marutham Pattai Powder Benefits

எப்பொழுதும் பசுமையாக காட்சியளிக்கும் மருதமரத்தை மருத்துவ மரம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அளவற்ற மருத்துவ குணங்கள் கொண்டது இந்த மருதமரம்.

மருத மரத்தில் இருந்து கிடைக்கும் மருதம்பட்டைக்கு எண்ணற்ற மருத்துவ குணங்கள் உண்டு. மருதம்பட்டையில் விட்டமின் C மிகுதியாக அடங்கியுள்ளது. மருதம் பட்டையை அரைத்து பொடியாகவும், தண்ணீரில் ஊற வைத்து குடிநீராகவும் பயன்படுத்தலாம்.

marutham pattai side effects

மருதம்பட்டை பொடி தயாரிப்புமுறை

மருதம் பட்டை இருநூறு கிராம். சீரகம் நூறு கிராம், சோம்பு நூறு கிராம், மஞ்சள் நூறு கிராம், இவை அனைத்தையும் ஒன்றாக எடுத்து நன்றாக பொடித்து தூள் செய்து வைத்து கொள்ளவும். இப்பொழுது மருதம்பட்டை பொடி தயார்.

இதய ஆரோக்கியம்

வயது வித்தியாசமின்றி அனைத்து வயதினரையும் பாதித்து சமயங்களில், உயிரையும் பறித்துவிடும், கொடிய வியாதியாக மாரடைப்பு காணப்படுகிறது.

ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதை மாரடைப்புக்கு காரணம். ரத்தக் குழாயில் கொழுப்பு சேராமல் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல், மருதம்பட்டை பொடிக்கு உள்ளது இதை தேநீராக குடிக்கும் பொழுது, உடலில் உள்ள கொழுப்பை கட்டுப்படுத்துகிறது. இதனால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தம்

மருதம்பட்டை பொடியை தினமும் கொதிக்க வைத்த தண்ணீரில் ஐந்து கிராம் அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குணமடையும். மேலும், இதய படபடப்பு, தூக்கம் நீரிழிவு பிரச்சனை, கல்லீரல் பிரச்சனை போன்றவைகள் கட்டுக்குள் வந்துவிடும்.

marutham pattai uses in tamil

புற்றுநோய் எதிர்ப்பு

ஆன்டிஆக்ஸிடென்ட் மருதம்பட்டில் அதிகமாக இருக்கிறது. இதனால், கல்லீரல், நுரையீரல், மார்பு, வாயில் ஏற்படும், புற்றுநோய்கள் போன்றவைகள் வராமல் தடுக்கும் திறன் மருதம்பட்டிக்கு உண்டு.

தூக்கமின்மை

மருதம்பட்டை தூளுடன் சிறிது கசகசாவை, வறுத்து, அரைத்து பாலில் கலந்து, அருந்தினால், தூக்கமின்மை, மன உளைச்ச படபடப்பு நீங்கும்.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களுக்கு அதிக அளவில் துன்பங்கள் தரும் மாதவிடாய் பாதிப்புகள், உதிரப்போக்கு, ஹார்மோன் பாதிப்புகள் இவையாவும் நீங்கிட மருதம்பட்டை மற்றும் சீரகத்தை ஒன்றுக்கு கால் பங்கு என்ற விகிதத்தில் நீர் இட்டு கொதிக்க வைத்து பருகிவர தொல்லைகள் நீங்கி உடல் நலம் பெரும்.

சிறுநீரக கல்

சிறுநீரகத்தில்  கல் கரைய மருதம்பட்டியை நன்கு வேக வைத்து வடிகட்டி பருகி வர வேண்டும். இவ்வாறு செய்தால் சிறுநீரகத்தில் உள்ள கல், சிறுநீர் வழியாக வெளியேறிவிடும்.

marutham pattai powder benefits

உடல் ஆரோக்கியம்

மருதம் பட்டை பொடி தினமும் இரவில், குடிக்கும் நீரில் இட்டு அந்த நீரை மறுநாள் முழுவதும் பருகி வர ரத்த அழுத்தம், சர்க்கரை பாதிப்பு இதய குறைபாடு, உள் உறுப்புகள் பாதிப்பு, மற்றும், தூக்கமின்மை குறைபாடுகள், போன்றவை விலகி இதன் வியாதி எதிர்ப்பு தன்மைகளால் உடலும், மனமும் புத்துணர்வாகி, உடல்நலம் சீராகும். இந்த குடிநீரை தொடர்ந்து, ஒரு மண்டலம், அதாவது, நாற்பத்தி எட்டு நாட்கள் பருகி வர, பூரண குணமடையலாம்.

எனவே, நோய் வந்து மன உளைச்சல் அடைவதை விட, நோய் வராமல் தடுக்கும், இது போன்ற வீட்டு வைத்தியங்களை பார்த்து பயன்பெறுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயாமா படிக்கவும்.

 

 

Related Posts

2 Comments

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning