கொத்தவரங்காய் பயன்கள் | Kothavarangai in Tamil

கொத்தவரங்காய் பயன்கள் | Kothavarangai in Tamil

அந்த காலத்தில் பழைய சாதமும், கொத்தவரங்காய் வற்றலும் சாப்பிட்டவர்கள் எல்லாம், ஆரோக்கியமாகத்தான் இருந்தார்கள்.

ஆனால் நாம்தான் நாகரீகம் என்று சொல்லிக் கொண்டு, நம் பழைய உணவு முறைகளை மறந்து, இன்று தினமும் ஒரு நோய் என்று ஓடி கொண்டிருக்கிறோம்.

இங்கே நாம் பார்க்கப் போவது அதிக மருத்துவ குணங்கள் கொண்ட கொத்தவரங்காயை பற்றி. இதில் ஏராளமானவிட்டமின்கள் மற்றும் தாது உப்புக்களான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

மேலும் குறைந்த எரிசக்தி, அதிக நார்ச்சத்து, புரோட்டின், கார்போஹைட்ரேட் முதலியவையும், காணப்படுகின்றன.

சர்க்கரை

கொத்தவரை உள்ள கிளைகோ சத்துகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்படுத்துகின்றன. இது, குறைந்த கிளைமிக் குறியீட்டினை பெற்றுள்ளதால் இதனை உண்ணும் பொழுது ரத்தத்தில் சர்க்கரையின் ஏற்ற இறக்கங்கள், கட்டுப்படுத்தப்படுகின்றன.
எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை உணவில் எடுத்துக் கொண்டு அற்புதமான மாற்றத்தை பெற முடியும்.

என்ன செய்தாலும் சர்க்கரை அளவு குறையவில்லை என்பவர்கள் நூறு கிராம் கொத்தவரங்காயை 250 ml தண்ணீர் சேர்த்து முதல் நாள் இரவு வேகவைத்து காயையும் தண்ணீரையும் மூடி வைத்துவிட வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் உப்பு சேர்க்காமல் அந்த தண்ணீரை மட்டும் வடிகட்டி குடித்து விட வேண்டும். இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள். கண்டிப்பாக நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

கொத்தவரங்காய் பயன்கள்

வலிமையான எலும்பு

இதில் உள்ள கால்சியமானது எலும்புகளை பலப்படுத்துகிறது. மெக்னீசியமானது, எலும்புகளுக்கு வலுவூட்டி அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

எனவே இதை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்தால் பற்களையும், எலும்புகளையும் பலமாக வைத்துக் கொள்ளலாம்.

மேலும் எலும்புகளின் தேய்மானம், மூட்டு வலி ஆகிய பிரச்சனைகளுக்கு கொத்தவரை சிறந்த தீர்வாக உள்ளது.

உடல் எடை குறைக்க

கலோரி அளவுகளில் மிகக்குறைந்த உணவாக இருந்தாலும், விட்டமின்களையும் மற்றும் தாதுக்களையும் அதிகமாக கொண்டிருக்கும் உணவு இது. ஆகையால் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் தேவையற்ற எடையை குறைக்க முடியும்.

கொத்தவரங்காய் தீமைகள்

இதய ஆரோக்கியம்

இதில் காணப்படும் நார்ச்சத்தானது ரத்தத்தில் கெட்ட கொழுபின் அளவினை குறைக்கிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு மாரடைப்பு உள்ளிட்ட இதய நோய்கள் தடுக்கப்படுகின்றன.

சீரான ரத்த ஓட்டம்

இதில் காணப்படும் போலைட்டுகள் மற்றும் பொட்டாசியம் போன்றவை இதய சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

இதில் உள்ள இரும்புச்சத்து இரத்த செவப்பு அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. இதனால் உள்ளிழுக்கும் திறன் அதிகரித்து ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் உடலின் உறுப்புகளுக்கு நன்கு செலுத்தப்படுகின்றன.

ஆக்சிஜன் நிறைந்த ரத்தம் உடல் உறுப்புகளுக்கு சீராக செலுத்தப்படுவதால் அவை திறன்பட செயல்படுகின்றன.

எனவே கொத்தவரங்காய் வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வந்தால் சீரான ரத்த ஓட்டத்தை பெற முடியும்.

கர்பினி பெண்கள்

இதில் காணப்படும் ஃபோலேட்டுகள் கருவில் இருக்கும் குழந்தை குறைபாடுகளின்றி வளர உதவுகின்றன. இக்காயில் காணப்படும் இரும்புச் சத்து மற்றும் கால்சியம், கர்ப்பிணி பெண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.

இதில் உள்ள வைட்டமின் கே கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. எனவே இந்த கொத்தவரங்காய் கர்ப்பிணிப் பெண்கள் உண்டு நன்மை பெறலாம்.

kothavarangai benefits in tamil

சிறந்த மலமிளக்கி

மேலும் இது சிறந்த மலமிளக்கியாக செயல்படுவதால் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது.

எனவே இது அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் நல்ல செரிமானத்தை பெறுவதோடு மலச்சிக்கல் என்ற பிரச்சனையே இருக்காது.

புற்றுநோய்

பொதுவாக உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல் புற்றுநோயை விளைவிக்கக் கூடியவையாகும். கொத்தவரங்காய் உடலில் உள்ள இந்த ஃப்ரீ ரேடிக்கல்களை கொன்று புற்றுநோயை தடுக்கிறது.

மன அமைதி

மேலும் கொத்தவரங்காயை சாப்பிடு பொழுது மூளை மற்றும் நரம்புகள் அமைதிப்படுத்தப்படுகின்றன. இதனால், மன அமைதி உண்டாகிறது.

சருமம்

மேலும் சருமத்தில் இருக்கும் இறந்தசெல் களை அழித்து புதிய செல்களை, உருவாக்கும் தன்மை கொண்ட ஆன்டிஆக்ஸிடென்ட்கள் அதிகம் காணப்படுகின்றன.

எனவே உங்களுக்கு கொத்தவரங்காய் பற்றிய மருத்துவ குணங்கள் இதுவரை தெரியாமல் இருந்தால் இப்பொழுது தெரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். எனவே குறைந்தது வாரத்தில் இருமுறையாவது கொத்தவரங்காய் உணவில் சேர்த்து கொண்டு பலன் பெறுங்கள்.

இத்தனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning