முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்
முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம். இன்றைக்கு இரண்டு பெண்கள் பேசிக் கொண்டாலே அவர்கள் அதிகம் பேசுவது செய்வது முடி கொட்டும் பிரச்சனை பற்றித்தான். முடி கொட்டுவதற்கு பொதுவான காரணங்கள் என்று சொன்னால் அதிக மன அழுத்தம், உடல் சூடு, அதிகம் ஷாம்பு பயன்படுத்துவது, உப்புத்தண்ணீர், தட்பவெப்பநிலை மாற்றங்கள் போன்றவை ஒரு காரணம் என்றாலும் முடிக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்கள் சரியாக கிடைக்காவிட்டாலும் முடி நிறைய கொட்ட ஆரம்பிக்கும்.
தினமும் முடி உதிர்வது பிறகு உதிர்ந்த இடத்தில் புதிதாக முளைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயம்தான். அதே சமயம் ஒரு நாளைக்கு அளவுக்கு அதிகமாக உதிர்ந்தால் உண்மையில் அது கவனிக்க வேண்டிய ஒன்று. இப்படி அதிகமாக முடி கொட்டுகிறது என்றால் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
நிச்சயம் இவர்கள் முடி வளர்ச்சியைத் தூண்டும் உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் இங்கே பார்க்கப் போகும் இந்த ஏழு உணவுகளையும் இங்கே சொன்னது போன்று சாப்பிட்டு வந்தால் உங்கள் முடி கொட்டவே கொட்டாது. புது முடியும் முளைக்க ஆரம்பிக்கும்.
கறிவேப்பிலை
இதில் முடிக்கு தேவையான பீட்டா கரோட்டின் மற்றும் இரும்பு சத்தும் வலமாக உள்ளது. முக்கியமாக பாதிப்படைந்த வேர்களை சீர் செய்யும் இந்த கறிவேப்பிலையில் உள்ள சத்துக்களுக்கு உண்டு.
அதே போன்று இரும்பு சத்து குறைபாட்டாலும் முடி உதிர ஆரம்பிக்கும். அந்த வகையில் இந்த கறிவேப்பிலையில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் முடி உதிர்வைத் தடுத்து முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
எனவே தினமும் ஒரு கைப்பிடி கருவேப்பிலையை வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரண்டே நாட்களில் முடி கொட்டுவது நிற்கும். பிறகு முடியும் அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
முட்டை
முட்டையில் புரதம், வைட்டமின் பி2, இரும்பு சத்து, துத்தநாகம்,ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் என்று உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.
இந்த சத்துக்கள் அனைத்தும் முடி வளர்ச்சிக்கும் ஊட்டமளிக்கக் கூடியவை. முட்டையின் வெள்ளை கருவில் உள்ள அல்புமின் என்ற புரதம் முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது.
முக்கியமாக இதில் முடி உதிர்வைக்கட்டுப்படுத்தும் பயோட்டின் என்கிற விட்டமினும் அதிகமாக உள்ளதால் முடி அதிகமாக கொட்டுகிறது என்பவர்கள் தினமும் ஒரு அவித்த முட்டையை காலை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவது நல்லது.
முடி அடர்த்தியாக வளர என்ன சாப்பிட வேண்டும்
பேரீச்சம் பழம்
இந்த பேரீச்சம் பழத்தில் முடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான புரோடின் மற்றும் இரும்பு சத்து அதிகம் உள்ளது. எனவே, தினமும் இரண்டுஅல்லது மூன்று பேரீச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவது நின்று முடி வேகமாக வளர ஆரம்பிக்கும்.
அது மட்டும் அல்ல இதிலுள்ள விட்டமின் A கண்பார்வை சம்பந்தமான குறைபாடுகளையும் போக்கக்கூடியது. அதே போன்று இந்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு பொழுது ரத்த சோகை நீங்கும். நரம்பு தளர்ச்சியை போக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
இதில் உள்ள கால்சியம் எலும்புகளை வலுவாக்கும். முக்கியமாக இதிலுள்ள மெக்னீசியம் இதயத் தமனிகளில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. அதே போன்று ஆண்மைக் குறைபாடு இருந்தாலும் நீங்கி விடும்.
உலர் திராட்சை
இந்த உலர் திராட்சை உடல்நலப் பிரச்சனைகளுக்கு மிக அற்புதமான மருந்து என்றே சொல்லலாம். அந்த வகையில் தினமும் ஒரு பத்து உலர்ந்த திராட்சையை நன்றாக கழுவி ஸ்னாக்ஸ் சாப்பிடும் நேரத்தில் சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவது உடனே நிற்கும்.
அதே போன்று தினமும் இதை பாலில் காய்ச்சியும் குடித்து வரலாம். முக்கியமாக இந்த உலர்ந்த திராட்சையில் இரும்பு சத்து அதிகம் உள்ள ரத்தத்தில்ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.
இதனால் நம் உடலில் தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சீராக இருக்க செய்வதால் தலையின் உச்சந்தலையில் ரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்கால்கள் வலிமையோடு இருக்க செய்யும்.
முருங்கைக்கீரை
இதில் புரத சத்தும், விட்டமின்களும் அதிகமாக உள்ளன. அதாவது முருங்கைக்கீரையில் அதிக அளவு இரும்பு சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதம், ஒமேகா மூன்று கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
இந்த சத்துக்கள் அனைத்தும் முடி உதிர்வைத் தடுத்து முடியை அடர்த்தியாக வளர உதவும் சத்துக்களாகும். எனவே, அடிக்கடி முருங்கைக் கீரையை, கூட்டுப் போன்றோ, சூப் போன்றோ, பொரியல் போன்றோ சேர்த்து வந்தால் தலைமுடி உதிர்வை போக்குவதோடு முடி நரைப்பதையும் தடுக்கும்.
மேலும் இது, தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியை தூண்டி முடிக்கு இயற்கையான கண்டிஷனர் ஆகவும் செயல்படுகிறது. எனவே வாரத்திற்கு இரண்டு முறையாவது முருங்கைக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் முடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முடி கருமையாக வளரும்.
கேரட்
கேரட்டில் உள்ள வைட்டமின் A சத்து கண்களுக்கு மட்டுமல்ல முடிக்கும் மிகவும் நல்லது. எனவே தினமும் ஒரு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வரும்பொழுது நமது முடி மட்டுமல்ல நமது சருமமும் பொலிவடையும்.
முக்கியமாக இந்த கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் சத்துக்கள் உள்ளதால் இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகின்றன.
அதாவது இது உச்சந்தலையில் உள்ள எண்ணெய் சுரப்பியை தூண்டி தலையில் வறட்சி ஏற்படுவதை தடுக்கிறது.
முக்கியமாக முடியை கருமையாகவும் வலிமையாகவும் வளரச் செய்யும். எனவே தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்கள். முடியும் கொட்டாது. முடியும் ஆரோக்கியமாக வளரும்.
எலுமிச்சை
சிட்ரஸ் பழமான எலுமிச்சையில் வைட்டமின் சி அதிக அளவில் உள்ளது. வைட்டமின் சி என்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டுமில்லாமல் பல நன்மைகளை நமது உடலுக்கு தருகிறது. அதில் மிக முக்கியமாக நாம் சாப்பிடு உணவில் உள்ள இரும்பு சத்தை உடலால் உறிஞ்ச இந்த வைட்டமின் சி சத்து மிக அவசியம்.
எனவே முடிக்கு தேவையான, முக்கிய சத்தான இரும்பு சத்தை உஞ்ச இந்த வைட்டமின் சி, மிக முக்கியம். எனவே சிட்ரஸ் பழமான இந்த எலுமிச்சையை ஜூஸ் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் முடி கொட்டுவது நிற்கும்.
இங்கே பார்த்த இந்த ஏழு உணவுகளையும் சாதாரணமாக நினைக்காதீங்க. இந்த உணவுகள் முடி கொட்டுவதை நிறுத்துவதோடு நிறைய நன்மைகள் கொடுக்கக் கூடியது. உண்மையில் எதுவுமே எளிதாக கிடைத்து விட்டால் அதன் மதிப்பு தெரியாது.
அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த உணவுகளை இங்கே சொன்னது போன்று சாப்பிட்டு பாருங்கள். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
இதனையும் படிக்கலாமே
- தேமல் மறைய பாட்டி வைத்தியம் | Thembal Treatment in Tamil
- காட்டுயானம் அரிசி பயன்கள் | Kattuyanam Rice Benefits in Tamil
- பாரிஜாதம் மருத்துவ பயன்கள் | Parijatham Palnt in Tamil
- பூச்சி கடி குணமாக வீட்டு வைத்தியம் | Poochi Kadi Home Remedies in Tamil
- சப்ஜா விதை சாப்பிட்டால் உடல் குளிர்ச்சி ஆகும் தெரியுமா?
- காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிட வேண்டும்
- இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
- கொடிய நோய்களை குணமாக்கும் மணத்தக்காளி கீரை
அனைவரும் நமது வலைதளத்தின் பக்கத்தினை Disclaimer கட்டயமாக படிக்கவும்.
hair growth food tips in tamil
12 Comments
Comments are closed.