தர்பூசணி நீர்ச்சத்து அதிகம் நிறைந்த ஒரு பழம். இது ஒரு வெள்ளரி இனத்தை சேர்ந்தது. தர்பூசணியை வாட்டர்மிலான், குமட்டிபழம், தர்பிஸ் என பல பெயர்களை அழைக்கிறார்கள்.
தர்பூசணி என்று சொன்ன உடனே ஏதோ கோடை காலத்தில் ஏற்படக்கூடிய வெயிலின் தாக்கத்தை மட்டும் தணிக்க கூடிய ஒரு பழம் என்று வெறுமனே சொல்லிவிட்டு போக முடியாது.
அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. குறிப்பாக தர்பூசணியில் இரும்பு சத்து அதிகமாக இருக்கிறது.
இதில் உள்ள இரும்புச்சத்தின் அளவானது பசலைக்கீரைக்கு சமமான ஒரு இரும்புச்சத்து இதில் உள்ளது.
தர்பூசணியில் வைட்டமின் ஏ, சி ,பி-ஒன்று , பி-ஆறு மற்றும் பொட்டாசியம் மெக்னீசியம் போன்ற தாது உப்புகளும் நிறைந்த ஒரு பழம்.
ஏராளமான சத்துக்களை கொண்டுள்ள இந்த தர்பூசணி பற்றி தான் விரிவாக இங்கு பார்க்கப் போகிறோம்.
தர்பூசணி நீர் சத்து நிறைந்த ஒரு பழம். உடல் சூட்டை குறைக்க கூடியது என்கிறது மட்டும் தான் நாம் அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
அதே நேரத்தில் கோடைக்காலங்களில் அதிக அளவில் கிடைக்கக்கூடிய தர்பூசணியை சாப்பிடுவதனால் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைகளுக்கு இந்த தர்பூசணி தீர்வாக இருக்கிறது . அது எப்படி என்பதனை பற்றி பார்ப்போம்.
அதிகப்படியான உடல் எடை மட்டும் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தாராளமாக தர்பூசணியை சாப்பிடலாம். ஏன் என்றால் தர்பூசணி உடலில் இருக்கக்கூடிய கொழுப்பை கரைக்க கூடியது.
குறிப்பாக இந்த கெட்ட கொலஸ்ட்ராலினை கரைக்கும் தன்மை இந்த தர்பூசணிக்கு உள்ளது.
இரத்த ஓட்டத்தை சீராக இயங்க வைக்கக் கூடியது.
அது மட்டும் இல்லாமல் இரத்த ஓட்டத்தை சீராக இயக்கி இரத்த உயர் அழுத்தத்தை குறைக்கும் தன்மை தர்ப்பூசணிப்பழத்திற்கு இருக்கிறது.
இரத்த அழுத்தத்தினால் அவதிப்படுபவர்கள் தாராளமாக தர்பூசணி சாப்பிட்டு வரலாம். நல்ல பலனைக் கொடுக்கக் கூடியது தர்பூசணி.
இரத்த நாளங்களில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கும் பணியையும் இந்த தர்பூசணி செய்கிறது.
மற்ற பழங்களில் இல்லாத பைட்டோ நியூட்ரியன் என்கிற ஒரு சத்து இதில் இருப்பதனால் இது உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருப்பதற்கு உதவியாக இருக்கின்றது.
இதில் உள்ள மூலப்பொருட்கள் இரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தரக்கூடியது.
இயற்கை வயகரா
இந்த தர்ப்பூசணிப்பழத்திற்கு இன்னொரு பெயர் இருக்கிறது. அது இயற்கை வயகரா என்று அழைக்கப்படுகிறது.
ஏன் என்றால் பவர்ஹவுஸ் எனப்படும் சிட்ருலின் உள்ளது. இது ஒரு வகை அறிய வகை புரதச்சத்து. தர்பூசனில அதிக அளவில் இருப்பது தான் இதற்கு காரணம். இது என்ன பண்ணுகிறது தெரியுமா?
இது இரத்த நாளங்களை விரிவடையச் செய்வதோடு மட்டுமல்லாமல் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.
தர்பூசணியை சாப்பிட்ட உடனே அதில் உள்ள சிட்ருலின் வேதியல் மாற்றம் அடைந்து அர்ஜுனைன் எனப்படும் ற ஒரு பெரிய பொருளாக நம்ம உடலில் மாறுகிறது.
இது இருதயத்தையும், இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.
அது மட்டும் இல்லாமல் இரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஒரு ஊக்குவிக்கியாகவும் இது செயல்படுகிறது.
மிக முக்கியமாக ஆண் உறுப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை தடுப்பதில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தர்பூசணி.
அதனால் தான் இதனை இயற்கை வயாகரா என்று அழைக்கிறார்கள்.
தர்பூசணி என்று சொன்னதுமே நமக்கு நினைவில் வருவது செக்க செவேல் என இருக்கும் அந்த சிவப்பு நிற சதைப்பாகம் தான்.
ஆனால் அந்த சிவப்பு நிற சதைப் பாகத்தை ஒட்டியிருக்கும் அந்த வெள்ளை நிற சதைப்பகுதியில் தான் ஆண்மையை அதிகரிக்கக்கூடிய சத்து பொருள் அடங்கியுள்ளது.
சூரியனில் இருந்து வரக்கூடிய புறஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்க கூடியது.
எவ்வாறு என்றால் தர்பூசணி நூலில் லைகோபீன் என்கிற ஒரு நினைவு தான் இது சூரியனில் இருந்து வரக்கூடிய புறஊதாக்கதிர்களினால் நம் சருமம் பாதிக்காதவாறு பாதுகாக்கிறது.
தர்பூசணிக்கு உடல் சூட்டைக் குறைத்து மனதை அமைதி படுத்தும் தன்மை உண்டு. அது மட்டும் இல்லாமல் அதிகபடியான நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு பழம். எனவே இது நல்ல பசியை தாங்க கூடிய ஒரு பழம்.
இது சிறுநீரை நன்றாக பிரிய வைக்க கூடியது. வயிற்று வலி, அடி வயிறு சம்மந்தமான பல பிரச்சனைகளுக்கு இந்த தர்பூசணி ஒரு தீர்வாக இருக்கிறது.
இதனை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?
எதுவுமே ஒரு அளவுக்கு அதிகமாக சாப்பிடும் பொழுது அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தக் கூடியது தான். குறிப்பாக சிறுநீரகப் பிரச்சனை அதாவது கல்லீரல் செயலிழந்தவராக இருந்தால் அதிக அளவில் இந்த தர்பூசணி எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஏனென்றால் இது ஒரு நீர் சத்து நிறைந்த ஒரு பழம். அதே போன்று இதில் சர்க்கரையின் அளவும் கணிசமாக இருப்பதனால் டயபிடிஸ் உள்ளவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வது நல்லது.
அதிகப்படியாக எடுக்கும் போது சர்க்கரையின் அளவு உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது.
கர்பமாக இருப்பவர்கள் இதனை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
ஜலதோஷம் பிடித்து இருப்பவர்களும் இதை எடுத்து கொள்ள வேண்டாம். ஏனென்றால் இது ஒரு நீர் சத்து நிறைந்த ஒரு பழம் என்பதனால் ஒரு சில சமயங்களில் ஜலதோஷத்தையும், காய்ச்சலையும் அதிகபடுத்தும் வாய்ப்பு உள்ளது.