வசம்பு பயன்கள் | Vasambu uses in Tamil
சித்தர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சித்த மருத்துவத்தின் சில எளிமையான மருத்துவ முறைகளை நமது முன்னோர்கள் தங்களின் வீட்டில் அவசர கால மருத்துவ முறையாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
செரிமான மற்றும் வயிறு பிரச்சனைகள்
அவற்றில் ஒன்றுதான் வசம்பு. வசம்பு மூலிகையினை பற்றி நாம் இதுவரை அறியாத பல்வேறு மருத்துவ குணங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நாம் சாப்பிடும் உணவுகளை நன்றாக செரிமானம் செய்து உடலுக்கு சக்தி அளிக்கும் பணியை வயிறு செய்கின்றது.
வயிற்றில் பூச்சி தொல்லைகள் வாயுக் கோளாறுகள், உப்பசம் மற்றும் அஜீரணம் ஆகிய அனைத்து பிரச்சனைகளுக்கும் வசம்பு பயன்படுகிறது. வசம்பினை நன்றாக நசுக்கி, அதை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின்பு அருந்தினால் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.
ஜலதோஷம்
மழை மற்றும் குளிர் காலங்களில் அனைத்து வயது வரையும் பாதிக்கும் ஒன்றாக சளி அல்லது ஜலதோஷம் ஆக இருக்கிறது.
வசம்பு ஜலதோஷம் தொல்லைக்கு சிறந்த நிவாரணமாக இருக்கின்றது. கால் தேக்கரண்டி அளவு வசம்பை வெந்நீரில் கலந்து பருகி வந்தால் ஜலதோஷம் மற்றும் தொண்டை கட்டு போன்றவை விரைவில் குணமாகும்.
பொடுகு
கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு தலைமுடிகளை முறையாக பராமரிக்காததால் உங்களுக்கும் பொடுகுத் தொல்லை ஏற்படுவது வாடிக்கையானது தான்.
பொடுகு தொல்லைக்கு சிறந்த இயற்கை மருந்தாக வசம்பு இருக்கின்றது.
நசுக்கிய வசம்பு சிறிதளவு வேப்பிலைகள் ஆகியவற்றை தேங்காய் எண்ணெயில் கொதிக்கவைத்து ஆறவைத்து அந்த ஜெல்லை தலைக்கு தடவி வந்தால் பொடுகுத் தொல்லை சீக்கிரம் குணமாகும்.
நச்சு முறிப்பான்
பழங்காலத்தில் பிறந்து ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு சிறிதளவு வசம்பை தேனில் குழைத்து கை குழந்தைகளின் நாக்கில் தடவி விடும் பழக்கத்தை அதிகம் மேற்கொண்டு இருந்தனர்.
இப்படி செய்வதால் சிறு குழந்தைகளுக்கு சீக்கிரமாக பேச்சுத் திறன் பெறுவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை எந்த பாதிப்புகளும் ஏற்படாமல் தடுக்கும் ஒரு நச்சு முறிப்பானா மருந்தாக பயன்படுத்தி வந்தனர்.
நாம் வசிக்கின்ற வீட்டின் தோட்டங்கள் மற்றும் வீட்டின் சுவர் இடுக்குகளில் பூரான், தேன், விஷ வண்டுகள் போன்றவை இருக்கின்றன. இவை சமயங்களில் நம்மை கடித்து விடுவதால் அவற்றின் விஷம் நமது உடலில் பரவி விடுகிறது.
வசம்பை நன்கு பொடி செய்து கடிபட்ட இடம் வைத்தால் போதும்.மேழும் கொதிக்க வைத்த நீரில் வசம்பை போட்டு காய்ச்சி பருகி வந்தாலும் உடலில் பூச்சி கடியினால் பரவிய விஷம் முறிந்து விடும்.
கிருமி நாசினி
வசம்பு ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகின்றது.
வசம்பு இயற்கையிலேயே அமிலத்தன்மை மிக்க ஒரு மூலிகை. சிறு குழந்தைகள் உறங்கும் அறைகளில் வசன பொடியாக ஆங்காங்கே தூவி வைப்பதால் தொற்றுநோய்கள், நுண்ணுயிரிகள் போன்றவற்றால் குழந்தைகளுக்கு நோய் பற்றும் அபாயத்தினை வெகுவாக குறைக்கிறது.
வாந்தி, குமட்டல்
வாகனங்களில் பயணம் செய்யும் போதும் சிலருக்கு வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படுகின்றது. இப்பிரச்சனை ஏற்படும்போது வசம்பை நன்கு பொடி செய்து வாயில் போட்டு சிறிது இதமான வெந்நீரை அருந்தினால் வாந்தி, குமட்டல் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.
வாத நோய்
வாதம் உடலில் அதிகரிக்கும்பொழுது உடலின் மூட்டு பகுதிகள் அனைத்தும் விரைத்துக் கொண்டு வலியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கின்றது.
வாதத்தின் குறிப்பாக கீழ்வாதம் எனப்படும் வாதநோய் மிகவும் கஷ்டங்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.
வசம்புடன் சிறிது நீர் விட்டு நன்கு அரைத்து மூட்டு பகுதிகளில் தடவி வந்தால் வாதம், கீழ்வாதம் போன்ற அனைத்து பிரச்சனைகளும் குணம் ஆகும்.
திக்கு வாய்
திக்கு வாய் என்பது நாக்கு மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும். இதனால் சிறிய பாதிப்புகள் உண்டாகும். இந்த திக்கு வாய் பிரச்சனையை தீர்க்க முறையான மருத்துவம் மற்றும் பேச்சு பயிற்சிகளை மேற்கொள்ளும் காலத்தில் வசம்பை நன்கு பொடி செய்து தேன் விட்டுக் குழைத்து கொடுத்து வந்தால் திக்கு வாய் குணமாகும்.
காக்கை வலிப்பு
வசம்புடன் திரி கடுகு, பெருங்காயம், அதிமதுரம், கடுக்காய் தூள்,உப்பு ஆகியவறை சிறிதளவு சேர்த்து நன்கு அறைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும்.
ஒரு தேக் கரண்டி பொடியை பாலில் கலந்து காலை மாலையில் இருவேளையும் காக்கை வலிப்பு ஏற்படுபவர்களுக்கு கொடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.
இதனையும் படிக்கலாமே
முருகை மரத்தின் பயன்கள் | Moringa Tree Benefits(Opens in a new browser tab)
பெருஞ்சீரகம் பயன்கள் | PerunJeeragam Uses(Opens in a new browser tab)
மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)
பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)
மஞ்சள் தூள் பயன்கள் | Turmeric Powder Benefits(Opens in a new browser tab)
உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)
தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
வசம்பு பயன்கள் | Vasambu uses in Tamil.
7 Comments
Comments are closed.