மஞ்சள்காமாலை நோயின் அறிகுறிகள் | Manjal Kamalai Foods in Tamil
இன்று நோய்கள் இல்லாத, மனிதர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சிறியவர்கள் பெரியவர்கள் என்று வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் நோய்கள் அச்சுறுத்தி வருகிறது.
பொதுவாக ஒரு நோய் வந்து விட்டால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து போகிறோம். ஆனால் வருமுன் காப்பதில் அலட்சியமாக இருந்து விடுகிறோம். உண்மையில் நமது உணவு விஷயம் மற்றும் நமது பழக்கவழக்கங்களில் இனி கண்டிப்பாக அக்கறை காட்டினால் மட்டுமே வரும் நாட்களில் நோய் இல்லாமல் நிம்மதியாக வாழ முடியும்.
மஞ்சள்காமாலை அறிகுறி
மஞ்சள்காமாலை கல்லீரலை பாதிக்கும் ஒரு நிலையாகும். அதாவது பிலிறுபின் என்ற ஒரு பொருள் நமது ரத்தத்தில் அதிகரிக்கும் பொழுது மஞ்சள் காமாலை வருகிறது.
அதாவது வயதான ரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் அளிக்கப்படும் பொழுது பிலிரூபின் என்ற பொருள் உடலில் உற்பத்தியாகிறது.
இந்த பிலிறுபினை கல்லீரல்தான் ரத்தத்திலிருந்து சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. ஆனால் கல்லீரல் பாதிக்கப்பட்டாலோ, பித்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ கழிவுப் பொருட்கள் உடலிலேயே தங்கி விடுகிறது.
இந்த பிளுறுபின் ரத்தத்தில் கலந்து விடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இதனால் தான் உடலில் மஞ்சள் நிறம் ஏற்படுகிறது. உண்மையில் இதை நோய் என்று சொல்வதே விட கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும்.
இந்த நிலையில்தான் சருமம், கண்கள் போன்றவை மஞ்சள் நிறத்தில் தெரிய ஆரம்பித்துவிடும். எனவே கல்லீரலை பாதுகாக்க வேண்டியது மிக முக்கியம்.
நமது உடலில் மற்ற உறுப்புகள் சில குறிப்பிட்ட வேலைகளை மட்டும்தான் செய்து வருகிறது. ஆனால் கல்லீரல் நமது உடலில் பல பணிகளை ஓய்வில்லாமல் செய்து கொண்டே இருக்கிறது.
நாம் சாப்பிடு உணவில் உள்ள சத்துக்களை சேகரிக்கிறது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரையும் சுரக்கிறது. நாம் உண்ணும் உணவுகளில் உடலுக்கு தேவையற்றதும், தீங்கு தரக்கூடியதும் இருந்தால், அவற்றை உடனடியாக வெளியேற்றுகிற வேலை செய்வதும் இதுதான்.
அதே போன்று ரத்த செல்களை உருவாக்க மற்றும் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. மேலும் நாம் ஓய்வாக இருக்கும் நேரத்திலும் கல்லீரல் தன்னுடைய சுத்திகரிப்பு பணியை தொடர்ந்து செய்து உடலில் உள்ள கழிவை பிரித்து சிறுநீரகத்துக்கு அனுப்பி வெளியேற்றம் செய்கிறது.
முக்கியமாக தேவைப்படும் பொழுது நமது உடலுக்கு ஆற்றலையும் தருகிறது. இந்த உறுப்பின் செயல்பாடு பாதிக்கப்படும் பொழுதுதான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
கல்லீரலை பாதிக்கும் உணவுகள்
பொதுவாக எல்லோரும் நினைப்பது அதிகமாக மது அருந்தினால் மட்டும்தான் கல்லீரல் பாதிக்கும் என்று உண்மையில் நாம் சாப்பிடு உணவுகளாலும் கல்லீரல் பாதிக்கும்.
அந்த வகையில் வெள்ளை சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்ட இனிப்பு வகைகளை அதிகம் சாப்பிடுவதால் கொழுப்பு கல்லீரல் நோய் உண்டாகிறது.
அதே போன்று, குளிர்பானங்களில் சர்க்கரை அதிகமாக சேர்க்கப்படுவதால் உடல் பருமனாவதோடு கல்லீரல் ஆரோக்கியமும் கெட்டிவிடும்.
அதே போன்று உணவில் அதிகப்படியாக உப்பு சேர்த்தால் ரத்த அழுத்தம், அதிகரிப்பது மட்டுமில்லாமல் கல்லீரலில் நார் திசுக்கட்டிகள் உருவாகி கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி விடுகிறது
முக்கியமாக பதப்படுத்தப்பட்ட உணவுகள், டப்பாக்களில் விற்கப்படும் உணவுகளில் அது கெட்டுப்போகாமல் இருப்பதற்காக உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. இந்த உணவுகளை பொதுவாக தவிர்ப்பதே நல்லது.
மேலும் உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட ஊறுகாயை தினமும் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
கல்லீரல் ஆரோக்கியமாக இயங்க
தண்ணீர்
போதுமான தண்ணீர் குடிக்கும் பொழுது நமது வளர்சிதை மாற்றம் இயக்கம் சரியாகி ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க முடியும். இதனால் நமது கல்லீரலும் கொழுப்புகள் படியாமல் ஆரோக்கியமாக இருக்கும்.
கிரீன் டீ
கிரீன் டீ யில் கேப்சின் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் உள்ளதால் இது கல்லீரல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. எனவே தினமும் ஒரு கப் கிரீன் டீ எடுத்து கொண்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
கீரைகள்
கீரைகளில் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் கல்லீரல் சரியாக வேலை செய்ய உதவுகிறது. எனவே அடிக்கடி ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து வருவது நல்லது. வெந்தயக்கீரை, கொத்தமல்லி, புதினா போன்ற கீரைகள் மிக நல்லது.
காலிஃபிளவர்
காய்களில் காலிஃபிளவர் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. கல்லீரல் தன்னைத்தானே சுத்தம் செய்து கொள்ள இவை உதவும்.
மேலும்
நட்ஸ்களில் உள்ள வைட்டமின் இ கொழுப்புக் கல்லீரல் நோய் வராமல் தடுக்கிறது.
நீர் நிறைந்த இது உடலில் உள்ள நச்சுக்களை சிறுநீர் வழியாக வெளியேற்றுகிறது. இதனால் கல்லீரலின் பணி எளிதாகிறது.
கேரட், பீட்ரூட் போன்றவை ரத்தத்தை சுத்தப்படுத்தி நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. அடுத்து வைட்டமின் சி அதிகம் உள்ள எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு அதில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றுகிறது.
மஞ்சள்காமாலை பாதிப்பின் அறிகுறிகள்
கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும், மஞ்சளாக இருக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேறுவதிலும் சிரமங்கள் ஏற்படும்.
அதே போன்று வாந்தி, பசியின்மை, உடல் சோர்வு வயிற்றின் வலது பக்கம் மேல் பாகத்தில்வலி, மூட்டு வலி, வயிறு வீக்கம், காய்ச்சல், ரத்தக் கசிவு என்பது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரிடம் சென்று மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்வது முக்கியம்.
மஞ்சள்காமாலை குணமாக
இப்பொழுது ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் மருத்துவ சிகிச்சையோடு உணவு கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
உண்மையில் மருந்துகள் மட்டுமே மஞ்சள் காமாலை குணப்படுத்தாது. உணவுக் கட்டுப்பாடு மிக முக்கியம். இவர்கள் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வகையில் மஞ்சள் காமாலை வந்து ஐந்து மாதங்கள் வரை அசைவ உணவுகள் சாப்பிடக் கூடாது. மது அருந்துவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.
அதே போன்று அதிக புரதம் நிறைந்த முட்டை, பருப்பு, சோயா வகைகள் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.
சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக, அதிக உப்பு மற்றும் அதிக கார மன உணவுகளையும், தவிர்க்க வேண்டும்.
எனவே, மருத்துவ சிகிச்சையோடு இந்த கட்டுப்பாட்டை கடைபிடித்தால், நிச்சயம் மஞ்சள்காமாலை நோயிலிருந்து, முற்றிலும் குணமாக முடியும்.
பொதுவாக வருமுன் காப்பதே புத்திசாலித்தனம். அந்த வகையில், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க இங்கே சொன்ன உணவு முறைகளை கடைபிடித்தால், கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பதோடு, மஞ்சள்காமாலை வராமலும், தடுக்க முடியும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
21 Comments
Comments are closed.