கிரீன் டீ குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் | Green Tea Benefits in Tamil
கிகிரீன் டீ எங்கு எப்படி வாங்க வேண்டும்? என்பதனை பற்றியும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பதனைப் பற்றியும் உண்மையிலேயே, இது உடம்புக்கு நன்மை செய்கிறதா? ஒரு நாளைக்கு நாம் எத்தனை முறை குடிக்கலாம்? யாரெல்லாம் கிரீன் டீ குடிக்கக்கூடாது? பற்றி பார்ப்போம்.
கிரீன் டீ செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்கி விட வேண்டும்.
அதில் ஒரு தேக்கரண்டி அளவு கிரீன் டீ இலைகளை போட்டு இரண்டு நிமிடம் வைக்க வேண்டும்.
இரண்டு நிமிடத்திற்கு பிறகு கிரீன் டீ சாறு வெந்நீரில் இறங்கி இருக்கும். அதை வடிகட்டி சர்க்கரை சேர்க்காமல் அப்படியே குடிக்க வேண்டும்.
தேவையற்ற நச்சுக்கள்
ஒரு சிலர் கிரீன் டீயில் சர்க்கரையோ, தேனையோ கலந்து குடித்தால் இந்த கிரீன் டீ உடம்பில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றும் தன்மையினை இழந்துவிடும்.
இது லேசான துவர்ப்புத் தன்மையோடு உள்ள கிரீன் டீயினை, குடிப்பதுதான் நல்லது. இருந்தாலும் இரண்டு அல்லது மூன்று சொட்டு எலுமிச்சைச்சாறை இதில் பிழிந்து குடித்தால் நச்சுக்களை வெளியேற்றும் தன்மை green teaக்கு அதிகமாகும்.
கிரீன் டீ தூளை வாங்கி பயன்படுத்த கூடாது. அதே போன்று கிரீன் டீயை பாலில் கலந்து குடிக்கக் கூடாது.
உறுதி தன்மை
Green teaயினை தொடர்ந்து குடித்து வரும்பொழுது, பல் மற்றும் எலும்புகள், நன்றாக உறுதியாகும்.
செரிமானம்
சாப்பிட்ட உணவினை ஜீரணிக்க க்ரீன் டீக்கு நிகர் வேறு எதுவும் இல்லை.
கிரீன் டீ செரிமான சக்தியை தூண்டி செரிமான உறுப்புகளுக்கு, நன்மை செய்யுது. ஆகவே சாப்பாடு சாப்பிட்டு, ஒரு மணி நேரம் பிறகு க்ரீன் டீ குடிப்பது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி
ஒரு சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தியானது குறைவதினால் உடம்பில் ஒரு விதமான நடுக்கம் ஏற்படும். இப்படிப்பட்டவர்கள் கிரீன் டீயினை குடித்து வருவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இந்த நடுக்கம் அனைத்தும் நிற்கும்.
உடல் எடை
உடல் எடையை குறைப்பதற்கு கிரீன் டீ மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. கிரீன் டீ குடித்தால் உடம்பில் உள்ள கலோரிகள் அனைத்தும் எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் அனைத்தும் கரைந்துவிடும்.
சர்க்கரை நோய்
நம் உணவை எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள குளுக்கோஸ் ரத்தத்தில் கலந்து கொள்ளும். ரத்தத்தில் குளுக்கோஸ் கலக்கும் வேகத்தினை இந்த கிரீன் டீ கட்டுப்படுத்துகிறது.
ஆகவே சர்க்கரை நோயாளிக்கு, இந்த க்ரீன் டீயானது மிகவும் நல்லது. இந்த க்ரீன் டீ ரத்தக் குழாய்களில் சேருகின்ற கொலஸ்டரோலின் அளவினைக் குறைத்து மாரடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
புற்றுநோய்
இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடென்டுகள் , உடலில் தேவையற்ற கட்டிகளின் வளர விடாது. பெருங்குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் இவை அனைத்தும் வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.
மனஅழுத்தம்
மனஅழுத்தம் இருக்கும் சமயங்களில் கிரீன் டீ குடித்து வந்தால் மனஅழுத்தம் மற்றும் மன சோர்வினை போக்கி விடும்.
கிரீன் டீயினை குடிப்பவர்கள் ஒரு சில விஷயங்களை நினைத்த கவனிக்க வேண்டும்.
காஃபின் என்று சொல்லக்கூடிய சத்தானது உடம்பினை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
மறதி நோயான முதுமறதி வராமல் தடுக்குகிறது.
கிரீன் டீ தீமைகள்
கிரீன் டீயின் இலைகளை அதிக நேரம் அடுப்பில் கொதிக்க விடக்கூடாது. அவ்வாறு கொதித்தால் அது கசப்புத்தன்மை கொண்டதாக மாறிவிடும்.
வெந்நீரை அடுப்பிலிருந்து இறக்கி வைத்துவிட்டு green tea இலைகளை போட வேண்டும். அதிக நேரம் கிரீன் டீ இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்தால் அது டார்க்காக மாறிவிடும். இது உடம்புக்கு கெடுதல் விளைவிக்கும்.
கிரீன் டீயை அதிக சூடாகவும் குடிக்கக்கூடாது. ரொம்ப நேரம் கழித்து குளித்தால் அல்லது ஆறிய பின்னர் குடிக்க கூடாது. மிதமான சூட்டில் குடிக்க வேண்டும்.
கிரீன் டீயினை, ஆல்கஹாலோடு சேர்த்தோ அல்லது சாப்பாடு சாப்பிட்ட பிறகு அல்லது சாப்பாடு சாப்பிடும் பொழுதோ அல்லது இடையிலோ குடிக்கக்கூடாது.
அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் இந்த க்ரீன் டீயினை குடிக்க கூடாது.
சிறுநீரக பிரச்சனை மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மருத்துவருடன் கலந்துரையாடிய பின்னரே க்ரீன் டீயினை குடிக்க வேண்டும்.
பொதுவாக பனிரெண்டு வயதிற்கு மேல் உள்ளவர்கள் green tea தாராளமாக குடிக்கலாம். அதிகபட்சமாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று கப் மட்டும்தான் குடிக்க வேண்டும்.
அதிகமாக கிறீன் டீ குடித்து வருவதால் தூக்கம் வருவதினைக் கெடுக்கும். மேலும், மன அழுத்தம், குழப்பம், பதற்றம், இது போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கர்ப்ப காலத்தில் இருப்பவர்களும், பால் கொடுக்கின்ற தாய்மார்களும் இந்த கிரீன் டீயினை குடிப்பது நல்லது இல்லை.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- சேப்பங்கிழங்கு பயன்கள் | Seppankilangu Uses in Tamil(Opens in a new browser tab)
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil(Opens in a new browser tab)
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
அனைவருவம் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
14 Comments
Comments are closed.