குதிரைவாலி அரிசி பயன்கள் | Kuthiraivali Rice Benefits in Tamil
குதிரைவாலி அரிசியானது அனைத்து இடங்களிலும் பயிரிடப்படக்கூடிய ஒரு சிறுதானிய வகையாகும்.
இது பல மருத்துவ தன்மைகளினை கொண்டுள்ளதினால் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் உணவாக பயன்படுத்துகின்றனர்.
மேலும் இது ஆயுர்வேதத்திலும் பயன்படுத்தப்படுகின்றது.
இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. ஆகவே குதிரைவாலி கொண்டு செய்யப்பட்ட உணவு வகைகளை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தாராளமாக கொடுக்கலாம்.
குதிரைவாலி அரிசி உள்ள சத்துக்கள்
100 கிராம் அளவு குதிரைவாலி அரிசியை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கக்கூடிய சத்துக்கள் என்ன என்பதனை பற்றி பார்ப்போம்.
- கலோரிகள் 300 கலோரி
- கொழுப்புச்சத்து 3.6 கிராம்
- நார்ச்சத்து 13.6 கிராம்
- புரதம் 11 கிராம்
- கார்போஹைட்ரேட் 55 கிராம்
- கால்சியம் 22 மில்லி கிராம்
- வைட்டமின் பி1- 0.33 மில்லி கிராம்
- இரும்புச்சத்து 18.6 மில்லி கிராம்
- வைட்டமின் பி3 4.2 மில்லி கிராம்
- வைட்டமின் பி2 0.10மில்லி கிராம்
சர்க்கரை நோய்
இந்த குதிரைவாலி அரிசியில் நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தானது அதிக அளவில் உள்ளது. ஆகவே சர்க்கரை நோய்க்கு குணமாக கோதுமை போன்ற தானியங்களை விட குதிரைவாலி அரிசியினை பயன்படுத்தலாம்.
ஏனென்றால் இந்த குதிரைவாலி அரிசி ஆனது மிகக் குறைந்த அளவில் கிளைசெமிக் குறியீட்டினை கொண்டுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை விரைவில் உயர்த்தாது. ஆகவே நீரிழிவு நோய்கள் குதிரைவாலி அரிசியை தாராளமாக பயன்படுத்தலாம்.
மலச்சிக்கல்
இந்த குதிரைவாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக செரிமானம் நன்றாக ஆகும்.
ஏனென்றால் இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார் சத்துக்கள் ஆனது அதிக அளவில் உள்ளது.
ஆகவே குதிரைவாலி அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதினால் உடலில் உள்ள கழிவு பொருட்களின் செரிமானம் எளிதில் நடக்கின்றது. மலச்சிக்கல் பிரச்சினை உடையவர்கள் எளிதில் விடுபடலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் நோய் எதிர்ப்பு சக்தியானது குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
குதிரைவாலியில் இரும்புச்சத்து, துத்தநாகும் ஆகிய இரண்டும் அதிக அளவில் அடங்கியுள்ளது.
இவை இரண்டுமே நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
ஒரு சிலரின் உடலில் கபம் ஆனது அதிகமாவதன் மூலமாக அடிக்கடி சளி, காய்ச்சல், இருமல் போன்ற உபாதைகள் ஏற்படும்.
இது போன்ற பிரச்சனை உடையவர்கள் அடிக்கடி குதிரைவாலி அரிசியினை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதனால் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கும்.
சிறுநீரகப் பிரச்சனை
சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனை உடையவர்கள் தங்களது உணவு பழக்கவழக்க முறைகளில் குதிரைவாலி அரிசியை சேர்த்துக் கொள்வது மிகவும் முக்கியம்.
குதிரைவாலி அரிசி ஆள் செய்யப்பட்ட உணவு வகைகளினை சாப்பிட்டு வருவதன் மூலமாக சிறுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமாகும்.
ஏனென்றால் இது அதிக அளவில் சிறுநீரை பெருக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இதனால் உடலில் உள்ள தேவையில்லாத உப்புக்கள் அனைத்தையும் கரைக்கும்.
கொலஸ்ட்ரால்
குதிரைவாலியில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பின் அளவானது மிகவும் குறைவான விகிதத்தில் உள்ளது.
100 கிராம் குதிரைவாலி இணை எடுத்துக் கொண்டால் அதில் கொழுப்பு சத்தானது வெறும் 3.6 கிராம் அளவு மட்டுமே உள்ளது.
நாம் அன்றாட வாழ்க்கையில் தினசரி குதிரைவாலி சாப்பிட்டு வருவதன் மூலமாக நமது இதயத்தினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஏனென்றால் இது உடலில் உள்ள ஒட்டுமொத்த கொலஸ்ட்ராலின் அளவினை குறைப்பதற்கு உதவி புரிகின்றது.
எனவே இந்த குதிரைவாலி அரிசி ஆனது உடல் எடை குறைப்பதற்கும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் முக்கிய பங்கு வகுக்கின்றது.
குதிரைவாலி சமையல்
நாம் குதிரைவாலி அரிசியை பயன்படுத்தி பொங்கல், இட்லி, தோசை உப்புமா மற்றும் இதனை நன்கு அரைத்து கஞ்சி வைத்து கூட குடிக்கலாம்.
மேலும் குதிரைவாலி அரிசியை சமைத்து சாப்பிடலாம்.
இது போன்று நாம் உடலுக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் தரக்கூடிய சிறுதானிய வகைகளை அன்றாட உணவில் சேர்த்து வந்தால் நமது உடலினை ஆரோக்கியமாக பாதுகாக்கலாம்.
குதிரைவாலி தீமைகள்
முக்கிய குறிப்பு வயிற்றுப்புண் இருப்பவர்கள் மட்டும் இந்த குதிரைவாலி அரிசியை உண்பதனை தவிர்க்க வேண்டும்.
இதனையும் படிக்கலாமே
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- மன அழுத்தம் நோயின் அறிகுறிகள் | How to Reduce Stress in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
- முளை கட்டிய பயறு பயன்கள் | Mulaikattiya Pachai Payaru Benefits in Tamil
- கோதுமை மருத்துவ பயன்கள் | Kothumai Benefits in Tamil
வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை அனைவரும் கட்டாயமாக படிக்கவும்
10 Comments
Comments are closed.