முதுகு வலி குணமாக

முதுகு வலி குணமாக | Back Pain Relief in Tamil

முதுகு வலி குணமாக | Back Pain Relief in Tamil

அனைவரையும் பாடாய்ப்படுத்தும் மிகப் பெரிய பிரச்சனை முதுகு வலி. முதுகெலும்புகளுக்கு நடுவே மிகவும் பாதுகாப்பான முறையில் உள்ள தண்டுவட நரம்புகள் தான் உடல் உறுப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்தக்கூடிய மூளையின் உத்தரவுகளை கடத்திச் செல்லும் மிக முக்கியமான பணியை செய்கிறது.

patti vaithiyam for back pain in tamil

முதுகு வலி ஏற்பட காரணம்

முதுகெலும்பில் உள்ள டிஸ்க் நரம்பு நசுக்கப்படும் போது தாங்க முடியாத வலி ஏற்படும். இதுதான் முதுகு வலி. முதுகு வலி ஏற்பட காரணங்கள் என்னவென்றால் அதிகப்படியான எடையை தூக்குவது, வேலை நிமித்தமாக தொடர்ச்சியாக கணினியில் அமர்ந்திருக்கக்கூடிய சூழல், கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்து இருத்தல் போன்ற செயல்களால் உடல் தசை பலவீனம் அடைந்து முதுகெலும்பு டிஸ்க்கில் அதிக அழுத்தமும் தேய்மானமும் ஏற்படுகிறது.

இதன் மூலமாக,தண்டு நரம்புகள் அழுத்தம் ஏற்பட்டு முதுகு வலி ஏற்படுது.

முதுகு வலி வராமல் தடுக்க

முதுகு வலி வராமல் தடுக்க எலும்புகளை வலிமையாக்குவது மிகவும் அவசியம். எலும்புகளை வலிமையாக்குவதற்கு இந்த விஷயங்கள் மிகவும் அவசியம்.

moochu pidippu in back in tamil

வைட்டமின் டி 3 குறைப்பாடு இருக்க கூடாது

வைட்டமின் டி மூன்று, வைட்டமின் டி மூன்று குறைபாடு காரணமாகவும் எலும்பு பலவீனம் அடையும்.

வைட்டமின் டி 3னை நாம் இலவசமாகவே பெற முடியும். தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து வெயிலில் நிற்பது மூல , vவைட்டமின் டி 3 இலவசமாக பெற முடியும்.

இதன் மூலம் வைட்டமின் டி குறைபாடு சரி செய்யலாம்.

வெயிலில் நிற்க முடியாதவர்கள் வைட்டமின் டி satisfies மருந்தகங்களில் கிடைக்கும். அதை வாங்கி பயன்படுத்தி வைட்டமின் டி 3 குறைபாடை சரி செய்து கொள்ளலாம்.

கால்சியம்

எலும்புகளின் உறுதிக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. கால்சியம் அதிகம் உள்ள உணவுகளான பால், முட்டை, போன்ற உணவுகளை அதிக உணவில் சேர்த்து வருவதன் மூலம் கால்சியம் குறைபாட்டை தடுக்க முடியும்.

வைட்டமின் சி

எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகமாக நிறைந்துள்ளது. எனவே இதை மேற்கண்டவற்றைய சாப்பிடுவதன் மூலமாக வைட்டமின் சி குறைபாடை நம் சரிசெய்து கொள்ளலாம்.

வைட்டமின் சி எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. கால்சியம் சத்து எலும்புகள் கிரகித்துக் கொள்வதற்கு வைட்டமின் சி துணை புரியும்.

உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யும் போதுதான் எலும்புகள் உணவில் இருக்கக் கூடிய கால்சியத்தை சீராக எடுத்துக்கொள்ளும். ஆகவே தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலமாக எலும்புகளை வலிமையாக்க முடியும்.

moochu pidippu home remedies in tamil

முதுகு வலி வராமல் இருக்க

அதிக வலுவான பொருட்களை தூக்கக்கூடாது. அது மட்டும் இல்லாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்து வேலை செய்பவர்களுக்கு முதுகு வலி வருவதற்கு அதிக வாய்ப்பு உண்டு.

ஒரே இடத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் அடிக்கடி எழுந்து கொஞ்சம் நேரம் நடப்பது மிகவும் அவசியம்.

தொடர்ந்து உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமாகவும் முதுகு வலி வராமல் தடுக்க முடியும்.

முதுகுவலிக்கு தீர்வு

ஒரு 50மில்லி நல்லெண்ணெய் மற்றும் ஒரு பத்து பல் பூண்டு, ஒரு வாணலியில, 50மில்லி எண்ணெயை விட்டு நன்றாக சூடு படுத்த வேண்டும்.

அதில் இந்த பத்து பல்லு பூண்டை போட்டு நன்றாக கருக வறுத்து எடுத்துகொள்ளவேண்டும். இந்த பூண்டுல் எல்லா சத்துக்களும் இந்த எண்ணெயில் நன்றாக கலந்து இருக்கும்.

அந்த எண்ணெய் நன்றாக ஆறிய பின்னர் இந்த எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டலில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும். முதுகு வலி இருக்க கூடிய சமயங்களில் இந்த எண்ணையை தடவி மசாஜ் செய்து வருவதன் மூலமாக நல்ல தீர்வு கிடைக்கும்.

முதுகு தண்டுவடம் வலி

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning