உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் 10 உணவுகள்
கொலஸ்ட்ரால் என்றால் அது உடலுக்கு கெடுதல் மட்டுமே தரும் என்ற எண்ணம் பலருக்கும் உண்டு. உண்மையில் கொலஸ்ட்ரால்லில் நல்ல கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் என இரண்டு வகை உண்டு.
இதில், அடர்த்தி மிகவும் குறைவாக உள்ள LDL கொலஸ்ட்ரால் இதய இரத்தக் குழாய்களின் உட்பகுதியில் ஒட்டும் தன்மை உடையது ஆனால், HDL கொலஸ்ட்ரால் அடர்த்தி அதிகம் உள்ள இது இரத்த குழாய் உட்பகுதியில் ஒட்டாமல் புரதத்தோடு சேர்ந்து ரத்தத்தில் பயணிக்கும்.
முக்கியமாக நாள் முழுவதும், உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்க இந்த நல்ல கொலஸ்ட்ரால் மிக முக்கியம். இன்னும் சொல்லப் போனால் உடலில் புதிய செல்களை உருவாக்கவும், ஹார்மோன்கள் உற்பத்தி மற்றும் முக்கிய உடல் செயல்பாடுகளை செய்யவும் இந்த நல்ல கொலஸ்ட்ரால் மிக முக்கியம்.
எனவே நம் உடலில், நல்ல கொலஸ்ட்ரால் அதிகமாகவும், கெட்ட கொலஸ்ட்ரால் குறைவாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் தற்போதைய முறையற்ற உணவுப் பழக்கத்தால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய், பக்கவாதம், உடல் பருமன் என்று அதிகரித்து, மக்கள் நோயுடன் போராடி வருகிறார்கள். அந்த வகையில், இங்கே உடலில், நல்ல கொலஸ்ட்ரால்ஐ அதிகரித்து கெட்ட கொலஸ்ட்ரால்ஐ அடியோடு நீக்கும் பத்து உணவுகள் பற்றித்தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
பூண்டு
பூண்டில் அல்லிசின் என்ன இதயத்தை பாதுகாக்கும் பொருள் அதிகம் உள்ளது. மேலும் இதில் நோய் எதிர்ப்பு அலர்ஜித்தன்மை அதிகம் இருப்பதால் இது அளவை வேகமாக குறைக்க உதவும்.
அதிலும் தினமும் ஒரு பல் பூண்டை சின்ன துண்டு துண்டாக ஆக வெட்டி வைத்துக்கொண்டு பச்சையாக சாப்பிட்டால் இதன் பலன் நன்கு தெரியும்.
அதே போன்று தினமும் நான்கு பூண்டு பல்லை சிறிது பாலில் வேகவைத்தும் சாப்பிட்டு வரலாம்.
வெண்டைக்காய்
இந்த வெண்டைக்காயும் கெட்ட கொலஸ்ட்ரால்ஐ குறைக்கும் கொண்டது. இதில் அதிக அளவில் நார்ச்சத்து மற்றும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும்.
எனவே இந்த வெண்டைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்த உதவும்.
எனவே வாரம் இரண்டு முறை, வெண்டைக்காயை அதிகம் எண்ணெய் சேர்க்காமல் வதக்கி சாப்பிட வரலாம்.
பசலைக் கீரை
பசலைக் கீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் இதய ரத்த நாளங்களில் தங்கி இருக்கும் கொழுப்புகளை கரைக்கும் தன்மை கொண்டவை.
எனவே, பசலைக் கீரையுடன் பூண்டு, வெங்காயம், பாசிப்பருப்பு சேர்த்து, கூட்டு வைத்து, வாரம் இரண்டு முறை சாப்பிட்டு வரலாம்.
சின்ன வெங்காயம்
சின்ன வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட் இரத்த குழாயில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது.
எனவே தினசரி மூன்று சின்ன வெங்காயத்தினை பச்சையாக சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ரால் குறைவதோடு இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை,திராட்சை போன்ற அனைத்து சிட்ரஸ் பழங்களிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் சி , நமது உடலில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
எனவே, இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது உடலில் கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்த முடியும்.
வெந்தயம்
இந்த வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ரால்ஆன LDL கொழுப்பை, குறைப்பது மட்டுமின்றி நல்ல கொழுப்பான HDL கொலஸ்ட்ரால்ஐயும் அதிகரிக்க செய்யும்.
எனவே வெந்தயத்தை வறுத்து, பொடி செய்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி போட்டு, தண்ணீர் குடித்து வரலாம். இதனால், ரத்த சர்க்கரையும் கட்டுக்குள் இருக்கும்.
நெல்லிக்காய்
ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும், இந்த பெரிய நெல்லிக்காயை, தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால் நல்ல கொலஸ்ட்ரால் ஆன HDL கொலஸ்ட்ரால்ஐ, அதிகரிக்க முடியும்.
அதே சமயம் கெட்ட கொலஸ்ட்ரால்ஆன LDL கொழுப்பையும், குறைக்க முடியும்.
ஆப்பிள்
இந்த ஆப்பிள் நமது இதயத்திற்கு, அதிக அளவு நன்மைகளைத் தருகிறது. ஆப்பிலில் பெக்டின் என்ற, கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமோ தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவே, குறைக்க முடியும்.
பப்பாளி
பப்பாளியில் உள்ள, அதிக நார்ச்சத்து, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவையும், கட்டுப்படுத்துகிறது.
எனவே, LDL கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் அடிக்கடி பழம் சாப்பிட்டு வருவது மிக நல்லது.
தக்காளி
தக்காளியில் vitamin A, B, C மற்றும் vitamin K போன்ற, பல்வேறு ஊட்டச்சத்துக்களானது, நிரம்பி உள்ளது. தக்காளி, நமது இதயத்திற்கு, சிறந்த உணவாக கருதப்படுகிறது.
முக்கியமாக இது இரத்த அழுத்தம், மற்றும், கொலஸ்ட்ரால் ஆகியவற்றின் அளவை, கட்டுப்படுத்த, உதவுகிறது எனவே, தினமும் ஒரு தக்காளியை பச்சையாக சாப்பிட்டு வரலாம்.
உண்மையில், கொலஸ்ட்ரால்லை, மிக வேகமாக கரைக்கும், இந்த பத்து உணவுகளை சாப்பிட்டால் மாத்திரையே தேவைப்படாது.
இதனையும் படிக்கலாமே
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- கால் நரம்பு வலி குணமாக | Paati Vaithiyam For Leg Pain in Tamil
- ஊமத்தங்காய் பயன்கள் | Umathai benefits in tamil
- நார்ச்சத்து மிகுந்த உணவுகள் | Fiber Rich Foods in Tamil
- மைதா மாவு தீமைகள் | Maida Side Effects in Tamil
- ஆளி விதை பயன்கள் | Ali Vithai Benefits in Tamil
- சிறுநீரக கல் கரைய பாட்டி வைத்தியம் | Kidney Stone Treatment in Tamil
- பூங்கார் அரிசி பயன்கள் | Poongar Rice Benefits in Tamil
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
14 Comments
Comments are closed.