வணக்கம். நம்மில் நிறைய பேர், காலையில் எழுந்ததும் குடிக்கும் முதல் பானம் காபியோ அல்லது டீஆகத்தான் இருக்கும். உண்மையில், வெறும் வயிற்றில், நாம் எந்த உணவை எடுத்துக் கொள்கிறோம்? என்பது மிக முக்கியம்.
வெறும் வயிற்றில் காபி, டீ குடிப்பது நல்லதா? என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதில் காஃபின் என்ற வேதிப்பொருள் உடல் நலத்திற்கு கேடு தரக்கூடியது.
அதுமட்டுமல்ல இரவு முழுவதும் வெறும் வயிற்றில் இருந்துவிட்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாம் சாப்பிடு உணவானது நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடியதாக கண்டிப்பாக இருக்க வேண்டும்.
அதிலும் கோடை காலத்தை பொறுத்தவரையில் நிச்சயம் காபி, டீ ஐ, வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர் நல்லது.
உண்மையில் நாம் காலையில் எழுந்ததும் நாம் சாப்பிடு முதல் உணவு அன்றைய நாள் முழுவதையும் உற்சாகமாக வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
அதாவது, நம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியும் ஆரோக்கியமும் கிடைக்கும் உணவாக இருக்க வேண்டும்.
அந்த வகையில் இங்கே நீங்கள் பார்க்கப் போவது வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய உணவு பற்றித்தான் பார்க்கப் போகிறோம். சொல்லப் போனால் கோடைக்கு ஏற்ற பதிவு இது.
தண்ணீர்
காலை வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் இளம் சூடான தண்ணீரை அருந்துவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். அதாவது இப்படி தண்ணீர் குடிப்பதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
முக்கியமாக உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கழிவுகள் மலம் வழியாக வெளியேறிவிடும். இதனால் சருமமும் பொலிவாகும். உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அதே போன்று உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
அது மட்டும் அல்ல தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன் செய்து வயிற்றை சீராக இயங்க உதவுகிறது. மேலும் இப்படி தொடர்ந்து தண்ணீர் குடித்து வரும் பொழுது உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல் பருமன், சிறுநீரக கோளாறு போன்றவற்றையும் தடுக்க முடியும்.
எலுமிச்சை
எலுமிச்சை பழத்தில் அதிக அளவில் வைட்டமின் சி ஆனது இருப்பதனால் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்கிறது.
மேலும் இதில் உள்ள பொட்டாசியம், மூளை மற்றும் நரம்புகளை வெகுவாக தூண்டுகிறது. இரத்தத்தில் இருக்க கூடிய இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையின் அளவினை அதிகரிக்க உதவுகிறது.
செரிமான பாதைகளில் தேங்கி உள்ள கொழுப்புகள் கரைவதோடு செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும்.
மேலும் கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து கல்லீரலை வலிமையோடு வைத்துக் கொள்ளும்.
அதே போன்று குடல் இயக்கத்தை அதிகரித்து மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.
முக்கியமாக எலுமிச்சையில் இருக்க கூடிய பெக்டின் கரையக்கூடிய நார்ச்சத்து ஆனது உடல் எடையினை குறைப்பதற்கு மிகவும் உதவியாக உள்ளது. மேலும் இந்த பெக்டின் குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
வெந்தயம்
முதல் நாள் இரவு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை ஊற வைத்து அடுத்த நாள் காலையில் வெறும் வயிற்றில் அப்படியே சாப்பிட்டு விட வேண்டும்.
அதே போன்று வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி பொடியை வாயில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட வேண்டும்.
இதனால் உடல் சூடு குறைவது மட்டுமில்லாமல் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால்ஐயும் குறைக்கும்.
முக்கியமாக, இதில் கரையும் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதோடு செரிமான பிரச்சனைகள் அல்சர் போன்றவையும் நீங்கும். மேலும் உடலில் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.
நீராகாரம்
காலையில் எழுந்தவுடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைபிடிக்க படுகிறது. இதனால் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடக்கிறது. நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது மிக நல்லது.
உடலுக்கு தேவையான சக்தியைநீ கொடுத்து நாள் முழுக்க உற்சாகமாக வேலையினை செய்வதற்கு உதவியாக இருக்கும்.
தர்பூசணி
கோடையில் காலையில் வெறும் வயிற்றில் தர்பூசணி சாப்பிடுவது மிக நல்லது.
காரணம் இது எலக்ட்ரோலைட் சமநிலையை மேம்படுத்துகிறது. இதில் தொண்ணூறு சதவீதம் தண்ணீர் சத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இதில் இயற்கையாகவே இருக்க கூடிய சர்க்கரை மற்றும் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதனால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
மேலும், இதில்வைட்டமின் சி மற்றும்வைட்டமின் பி 6 மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
முளைகட்டிய பயிர்
முளைகட்டிய பயிரில் வைட்டமின்கள், தாது உப்புகள்,புரதம், என்சைம்கள், ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் சூரிய கதிர்கள்ல இருந்து நம் சருமத்தை பாதுகாக்கும். அதே போன்று தோல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்கிறது.
இதய நோயிலிருந்து நம்மை காக்கிறது. உடல் எடையை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதே சமயம் வாயுத் தொல்லை உடையவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
தேன்
இளம் சூடான தண்ணீரில் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலுக்கு பலம் தரும். ரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில், ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
வயிறு எரிச்சலை குறைக்கும் செரிமானம் மேம்படுவதால் மலச்சிக்கல் இருக்காது. உடல் எடையும் குறையும். தொண்டையில் தொற்றுகள் ஏற்படுவதையும் தடுக்கும்.
முக்கியமாக இதில் உள்ள ஃபிளாவனாய்டுகள், ஆக்ஸிஜனேற்றிகள் இதய நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும். அதே போன்று இதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு தன்மை, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல் இருந்து பாதுகாத்து சுத்தமான மற்றும் பொலிவான சருமத்தை பெற உதவும்.
உண்மையில் இங்கே பார்த்த இந்த ஏழையும், கோடை காலத்தில், காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், கோடைகால பிரச்சனைகள் ஒன்று கூட கிட்ட நெருங்காது.
உண்மையில் காபி, டீ என்பது உடல் சூட்டை அதிகரித்து அதுவே பல உடல்நல பிரச்சனைகள் ஏற்பட காரணமாகிவிடும். எனவே இந்த கோடையில் இங்கே பார்த்த இந்த ஏழையும் ஒரு மாதம் சாப்பிட்டுப் பாருங்கள் பலன்கள் கண்கூடாகத் தெரியும்.
இதனையும் படிக்கலாமே
- மொச்சை கொட்டை பயன்கள் | Mochai Kottai Health Benefits
- இயற்கை உணவு பட்டியல் | Healthy Food in Tamil
- பேரிக்காய் பயன்கள் | Pear Fruit in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- கொத்தவரங்காய் பயன்கள் | Kothavarangai in Tamil
- கேரட் நன்மைகள் தீமைகள் | Carrot Benefits in Tamil
- காராமணி பயன்கள் | Karamani Benefits in Tamil
- வெந்தய கீரை பயன்கள் | Vendhaya Keerai Benefits
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
13 Comments
Comments are closed.