கோதுமை மருத்துவ பயன்கள் | Kothumai Benefits in Tamil
கோதுமையானது உலகில் அதிக அளவு மக்கள உணவாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த கோதுமை முதல் முறையாக தென் அமெரிக்கா ஆசிய பகுதியில்தான் பயிரிட பட்டது.
இது ஒரு புல் வகையை சார்ந்தது ஆகும். இதில் ஊட்டச்சத்து ஆனது அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றது. இந்த கோதுமையினை தின மூன்று வேளைகளும் உணவாக பயன்படுத்தலாம். அவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கிறது.
செலினியம் சத்து
கோதுமையில் செலினியம் எனப்படுகின்ற சத்து அதிக அளவில் காணப்படுகின்றது. இந்த சத்தானது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமாக விளங்குகிறது.
கோதுமையில இருந்து, தவ்விட்டு பிரித்தெடுக்கப்படாத, கோதுமையினை உணவாக சாப்பிடுவதன் மூலமாக, நமது உடலுக்கு, செலினியம் அதிக அளவில் கிடைக்கும்.
கோதுமையிலே இருந்து தவிட்டினை பிரித்து எடுக்காமல் சாப்பிடுவதன் மூலமாக அதில் நிறைந்திருக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடென்டுகள் உடலில் உள்வாங்கப்படுவதன் மூலமாக சருமங்கள் சுருங்காமல் பாதுகாக்கின்றது. இளமையான தோற்றத்தினை தருகின்றது.
முகப்பருக்கள்
முகப்பருக்கள் போகுவதற்கு கோதுமையை அடிக்கடி பயன்படுத்தி வர வேண்டும் ஏனென்றால் கோதுமையில் நார்ச்சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது.
இந்த நார்ச்சத்து நிறைந்த கோதுமையினை உணவாக சாப்பிட்டு வருவதன் மூலமாக ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும். உடல் தூய்மையாகும்.
ஆகவே தோலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி விடுவதன் மூலமாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை ஏற்படாமல் சருமத்தினை பாதுகாக்கும்.
தலைமுடி
அனைவருமே தங்களது தலைமுடியினை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள விரும்புவார்கள்.
ஒரு சிலருக்கு வயதாகக்கூடிய காரணத்தினாலும், உடலில் சத்து பற்றாக்குறை ஏற்படுவதாலும் முடி கொட்டுதல், தலை முடியின் அடர்த்தி குறைவது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
கோதுமையில் ஜிங்க் சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே கோதுமையினை உணவில் அடிக்கடி சேர்த்து வருவதன் மூலமாக தலைமுடி நன்கு பலம் பெற்று, தலைமுடியானது அடர்த்தியாக வளரும்.
மேலும் தலை முடியானது பளபளப்பாகவும் இருக்கும்.
ஊட்டச்சத்து உணவு
ஒரு நாள் முழுவதும் நாம் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என்றால் சரியான அளவில் நமது உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும்.
மிகவும் முக்கியமாக வைட்டமின் பி சத்தானது நமது உடலுக்கு கிடைக்க வேண்டும். நாம் தினந்தோறும் சாப்பிடக்கூடிய உணவுகளில் ஊட்டச்சத்தானது கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்த கோதுமையில் வைட்டமின் பி சத்தானது அதிக அளவில் நிறைந்துள்ளது. ஆகவே கோதுமையினை பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக ஒரு நாளுக்குத் தேவையான வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி சத்தானது கிடைக்கின்றது.
ஆகவே அந்த நாள் முழுவதும் மனச்சோர்வின்றி சுறுசுறுப்பாக நாம் செயல்பட கோதுமை உதவும்.
சர்க்கரை நோய்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினசரி சாப்பிடுவதற்கு கோதுமை ஏற்றதாகும். மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளுக்கு பரிந்துரைக்கக் கூடியது இந்த கோதுமையைதான்.
ஏனென்றால் இந்த கோதுமையில் மிகவும் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உள்ளது. மேலும் அதிக அளவில் நார்ச்சத்து அடங்கியுள்ளது.
ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவாக இந்த கோதுமை உள்ளது. மேலும் இந்த கோதுமையானது ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை சரியான விகிதத்தில் வைத்துக் கொள்ள உதவுகின்றது. ஆகவே நீரிழிவு நோயாளிகளுக்கு, மிகவும் ஏற்றதாகும்.
ஞாபகம் மறதி, மனநலம்
உடல்நலம் மற்றும் ஆரோக்கியமாக இருந்தால் பத்தாது. மனநலமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று நடத்தப்பட்ட ஆய்வில் கோதுமை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு அதில் உள்ள சத்துக்கள் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துகிறது என தெரியவந்துள்ளது.
அதனால் அல்சைமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் ஏற்படுவது குறைகின்றது.
பக்கவாதம்
பக்கவாதம் வருவதற்கு மிகவும் முக்கியமான ஒரு காரணம் நரம்பு மண்டலம் இருப்பது தான். இத்தகைய பிரச்சனை உடையவர்கள் கோதுமையினை அடிக்கடி உணவில் சேர்த்து வர வேண்டும்.
அதிலும் முக்கியமாக தவிடு பிடித்தெடுக்கப்படாத கோதுமையினை பயன்படுத்த வேண்டும். இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்தானது நரம்பு மண்டலங்களை வலுப்படுத்துகின்றது.
மேலும் இதய மற்றும் மூளைக்கு செல்லக்கூடிய நரம்புகளில் அடைப்புகள் எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கின்றது.
ஆகவே, பக்கவாதம் ஏற்படக்கூடிய நபர்கள் பசும்பால் தயிருடன் கோதுமை தவிடுனை சேர்த்து அதில் ஏதேனும் ஒரு பழத்தினை கலந்து தினசரி காலையில் சாப்பிட வேண்டும்.
குடல் புற்றுநோய்
இந்த குடல் புற்று நோயானது நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பதாலும், மாமிச உணவுகளை அதிக அளவில் சாப்பிடுவதாலும் ஏற்படுகின்றது.
கோதுமை உணவினை தினசரி சாப்பிட்டு வருவதன் மூலமாக குடல் புற்று சார்ந்த ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படாது.
ஏனென்றால் இதில் உள்ள நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சுக்களை எளிதில் வெளியேற்றுகிறது. எனவே தினசரி குறைந்தது இருபது முதல், இருபத்தி ஐந்து கிராம் வரை கோதுமையினை சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது என மருத்துவ வல்லுநர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வைட்டமின் சக்தி
கோதுமையில் வைட்டமின் பி சக்தியானது அதிக அளவில் நிறைந்துள்ளது. இதில் இருக்கக்கூடிய தயாமின் நியாசின், ரிபோஃப்ளேவின் போன்ற வைட்டமின் பி சத்துக்கள் வளர்ச்சிதை மாற்றத்தினை அதிகரிக்க உதவுகின்றது.
இதில் மற்றொரு வகையான வைட்டமின் சக்திஃபோலிக் அமிலம் எனப்படக்கூடிய சத்து உடலில் ரத்த சிவப்பு அணுக்களினை அதிகரிக்க செய்கின்றன.
மேலும் கருவுற்றிருக்கும் பெண்கள் சாப்பிடுவதன் மூலமாக அவர்கள் வயிற்றில் வளரக்கூடிய குழந்தை பிறவியிலே ஏற்படக்கூடிய நோய்களான வளர்ச்சிதை மாற்ற குறைபாடுகள் நீங்கும்.
இதனையும் படிக்கலாமே
- கேழ்வரகு பயன்கள் | Kelvaragu Benefits in Tamil
- சீத்தாப்பழம் நன்மைகள் | Seethapalam Benefits in Tamil
- அவரைக்காய் பயன்கள் | Avarakkai in Uses Tamil
- வாழைப்பூ பயன்கள் | Valaipoo Health Benefits in Tamil
- பசலைக்கீரை பயன்கள் | Pasalai Keerai Benefits in Tamil
- உடல் சூடு குறைய சித்த மருத்துவம் | How to Reduce Body Heat in Tamil
அவைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.
3 Comments
Comments are closed.