பக்கவாதம் சித்த மருத்துவம் | Stroke Treatment in Tamil

பக்கவாதம் சித்த மருத்துவம் | Stroke Treatment in Tamil

மாரடைப்பு எந்த அளவுக்கு அச்சத்தை தருகிறதோ அதே அளவுக்கு பக்கவாதமும் அனைவரையும் அச்சுறுத்தி வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் மாரடைப்பை விட மிகக் கொடுமையானது இந்த பக்கவாதம். காரணம் இதற்கு சிகிச்சை கொடுக்கத் தவறினால் நிரந்தரமாக ஊனமாக்கிவிடும்.

அதன் பிறகு நமது ஒவ்வொரு தேவைக்கும் மற்றவரை சார்ந்து இருக்க வேண்டிய நிலை வந்துவிடும். மாரடைப்பு போன்றே இதுவும் இளம் வயதினரையும் விட்டு வைப்பதில்லை என்பதுதான் உண்மை.

பக்கவாதம்

நம்முடைய மூளை செயல்பட தேவையான சத்து இதயத்திலிருந்து இரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும் பொழுது மூளையின் சில பாகங்கள் செயலிழப்பதால் நம் உடலின் பாகங்கள் செயலிழக்கின்றன. இதுதான் பக்கவாதம்.

அதாவது மூளையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளதோ அதைப் பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும்.

இந்தப் பக்கவாதம் இரண்டு வகைப்படும். ஒன்று மூளைக்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போவது.

மற்றொன்று இரத்த கொதிப்பினால் மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய் வெடிப்பதால் மூளையில் ரத்தக் கசிவு ஏற்படுவது. இது ரத்த வெடிப்பு என்றும் கூறப்படுகிறது.

பக்கவாதம் சித்த மருத்துவம்

பக்கவாதம் அறிகுறிகள்

ஒருவருக்கு பக்கவாதம் வருவதை ஒரு சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். நன்றாக இருப்பார்கள்.திடீரென்று கை, கால் வராமல் போவது, ஒருபுறம் வாய் கோணலாக போவது, சிலருக்கு பேசுவதற்கு வார்த்தை வராது.

ஒரு சிலர் பேசுவார்கள். ஆனால் வாய் உளரும். ஒரு சிலருக்கு இடது கையோ, வலது கையோ மரத்துப்போகும். இன்னும் சிலருக்கு நடை தடுமாறுுதல், சிலருக்கு கண்களில் பாதிப்பு ஏற்படும், தலை சுற்றுவது என ஏற்படும்

அதாவது, மூளையில் எந்த பகுதியில், இரத்தக் குழாயில் அடைப்பு ஏற்படுகிறதோ அதனுடைய செயல்கள் இழந்து போவதால் அதை பொறுத்து நமது உடலின் பாகங்களில் குறைபாடுகள் ஏற்படும்.

இந்த அறிகுறிகள் இருந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மூன்று மணி நேரத்தில் மருத்துவமனை செல்ல வேண்டும்.

 பக்கவாதம் வந்து விட்டது என்று தெரிந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

உடனடியாக ஒவ்வொரு வினாடியும் தாமதிக்காமல் செயல்பட வேண்டும். முதல் விஷயம் நோயாளிகளால் எனக்கு பக்கவாதம் வந்து விட்டது என்று அவர்களால் சொல்ல முடியாது.

காரணம் இதற்கான அறிகுறிகள் அவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். எனவே உடன் இருப்பவர்கள், விரைவாக செயல்பட வேண்டும். அதாவது அறிகுறி தெரிந்த அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் CT scan எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்கு உடனே அழைத்துச் செல்ல வேண்டும்.

அப்பொழுது தான் மருத்துவர்கள் பக்கவாதம் தான என்பதை உறுதி செய்து பிறகு ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தி பக்கவாதத்தின் தாக்கத்தை குறைக்கவோ முற்றிலும் குணப்படுத்தவோ முடியும்.

எனவே மூன்று மணி நேரத்திற்குள் சென்றால்தான் மருத்துவர்களால் உரிய ஆய்வு செய்து இந்த மருந்தை செலுத்தி நோய் தாக்குதலை தடுப்பார்கள்.

ஆனால் மூன்று மணி நேரம் கழித்து தாமதமாக சென்றால் மருந்தை செலுத்தினாலும் பலன் இல்லை அந்த மூன்று மணி நேரத்திற்குள் விளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

எனவே பக்கவாத அறிகுறிகள் தென்பட்டால் விரைந்து செயல்படுவது மிகவும் அவசியம்.

பக்கவாதம் அறிகுறிகள்

பக்கவாதம் வரக்காரணம்

பொதுவாக மாரடைப்பு வருவதற்கு என்னென்ன காரணமோ அதே காரணம்தான் பக்கவாதத்திற்கும். முதலில் உயர் இரத்த அழுத்தம், சிலர் ரத்த அழுத்தம் இருந்தும் சரியாக மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் இருப்பார்கள்.

சொல்லப் போனால் ரத்தக் கொதிப்புதான் பக்கவாதம் வருவதற்கு முதல் காரணம். எனவே அடிக்கடி இரத்த அழுத்த அளவை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே ரத்த சர்க்கரை அளவே சீராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அது மட்டுமல்ல ஏற்கனவே இதய நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள் அதிக உடல் எடை உள்ளவர்கள், மது மற்றும் புகை பழக்கம் அதிகம் உள்ளவர்கள் ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் அதிக மன அழுத்தம் உள்ளவர்கள், உடற்பயிற்சி என்பது அறவே இல்லாமல் இவர்களுக்கு இந்த பக்கவாதம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

பக்கவாதம் குணமாகும் காலம்

இதய நோய் உள்ளவர்கள் கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், உணவு முறை மற்றும் உடற்பயிற்சியில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

அதே போன்று அதிகமாக மது அருந்துதல் மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்தும், ரத்தம் உறையும் தன்மையும் அதிகரிக்கும்.

நிறைய பேருக்கு உள்ள ஒரு சந்தேகம் அசைவம் சாப்பிடுபவர்களுக்குத் தான், பக்கவாதம் வருமா சைவ உணவு சாப்பிட்டால், வராதா என்பது. உண்மையில் சைவமாக இருந்தாலும் சரி அசைவமாக இருந்தாலும் சரி அதிக கொழுப்புள்ள உணவு அதிகமாக எடுத்துக் கொள்வதால் கண்டிப்பாக பாதிப்பை உண்டு பண்ணும்.

உணவுகளில் உப்பை குறைத்து பயன்படுத்த வேண்டும். முக்கியமாக உணவில் பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் காய்கறிகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதிகமாக எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள் அதிக கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக எடுத்து கொள்வது இவற்றைக் குறைத்தாலே பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

இந்தப் பக்கவாதம் குடும்பத்தில் யாருக்காவது முன்னரே இருந்திருந்தால் மற்றவர்களும் வராமல் இருக்க மற்றவர்களும் உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.

தினமும் ஒரு அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். பொதுவாக இந்த நோயின் அறிகுறி எளிதில் வெளியில் தெரியாது. எனவே ஆறு மாதத்திற்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது நல்லது.

பக்கவாதம் வராமல் தடுக்க

இந்த பக்கவாதம் வராமல் தடுக்க வேண்டுமானால், வருமுன் காப்பதே சிறந்த வழியாகும். சர்க்கரையை கட்டுக்குள் வைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகைப்பிடித்தல், மது அருந்துவதை நிறுத்த வேண்டும். கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்காமல், பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமும் உடற்பயிற்சி கட்டாயம் செய்தல் வேண்டும். மன அழுத்தம் உள்ளவர்கள் யோகா போன்ற பயிற்சிகளின் மூலம் கவலை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

முக்கியமாக, ஆண்டுக்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து பார்த்துக் கொள்வது அவசியம்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைத்தகளத்தின் Disclaimer  பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning