கருணை கிழங்கு மருத்துவ பயன்கள் | Karunai Kilangu in Tamil

கருணை கிழங்கு மருத்துவ பயன்கள் | Karunai Kilangu in Tamil

கருணைக்கிழங்கு சுவையிலும் மருத்துவ குணத்திலும் சிறந்து விளங்கக்கூடியது கருணைக்கிழங்கு. குறிப்பாக மூலை நோய்க்கு மிகச்சிறந்த மருத்துவ உணவாக பயன்படுகிறது இந்த கருணைக்கிழங்கு.

சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் கிழங்கிலே மிகவும் பிரசித்தி பெற்றது கருணைக்கிழங்கு.

மூட்டு வலி

உடல் எடை அதிகமாகி மூட்டு வலி உட்பட்ட கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு சிறந்த மருந்தாக விளங்கக்கூடியது, இந்த கருணைக்கிழங்கு.

தொடர்ந்து அவர்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மூட்டு வலி குணமாகும். மற்ற கிழங்குகளை காட்டிலும் மிகச் சுலபமாக, ஜீரணமாகக் கூடியது இந்த கருணைக்கிழங்கு.

இரத்த அழுத்தம்

குடலில், கிருமிகள் சேராமல் தடுக்கவும் இரத்த நாளங்களில் கொழுப்புகள் படியாமல் இருக்கவும் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது கருணைக்கிழங்கு.

ரத்தத்தில் இருக்கும் அதிக கொழுப்பினை குறைப்பதிலும் ரத்தம் உறைதலையும் புரிதப்படுத்துவதில் முக்கிய பங்கினை வைக்கிறது இந்த கருணைக்கிழங்கு.

கருனை கிழங்கு பயன்கள்

 

சர்க்கரை நோயாளி சாப்பிடலாமா

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கிழங்கு வகைகளை சாப்பிடக் கூடாது என மருத்துவர்கள் சொல்வதுண்டு.

ஆனால் இந்த கருணை கிழங்கினை அவ்வப்போது உணவில் சேர்த்து வரலாம்.

பெண்கள் ஆரோக்கியம்

பெண்களின் ஹார்மோன் பிரச்சனையைக் கூட கட்டுப்படுத்தும் ஆற்றல் இந்த கிழங்கிற்கு உள்ளது.

முக்கியமாக நாற்பது வயதிற்கு மேல் வரும் மாதவிடாய் பிரச்சனையின் போது பெண்களின் ஈஸ்ட்ரோஜென் அளவை இது, அதிகப்படுத்துகிறது.

karunai kilangu masiyal

முடக்குவாதம்

வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துக்கள் அதிகம் கொண்டது இந்த கருணைக்கிழங்கு.

அதனால் முடக்குவாதம் உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர முடக்குவாதம் குணமாகும்.

கொழுப்பினை குறைக்க

அதிக கொழுப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் வேகவைத்து அரைத்த மசித்த கருணைக்கிழங்கினை ஒரு தேக்கரண்டி எடுத்து , நீர் விட்டு சோம்பு மற்றும் தனியா சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து அதனை வடிகட்டி குடித்து வர கொழுப்பு கரையும். மேலும் உயர் ரத்த அழுத்தமும் குறையும்.

கருணை கிழங்கு பயன்கள்

அல்சர்

இந்த கருணைக்கிழங்கு. கருணைக்கிழங்கினை மசித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து இதனுடன் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர நெஞ்செரிச்சல் மற்றும் அல்சர் குணமாகும். அதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் தீரும்.

கருணை கிழங்கு மருத்துவ பயன்கள்

  • உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கக் கூடியது இந்த கருணைக்கிழங்கு.

 

  • கருணைக்கிழங்கில் மாங்கனீசு, பொட்டாசியம், இரும்புச் சத்து, உட்பட பல சத்துக்களை தனக்குள்ளே கொண்டுள்ளது இந்த கருணைக்கிழங்கு.

 

  • கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம் ஆகியவை குணமாகும். பசியை தூண்டி இரைப்பைக்கு நல்ல பலம் சேர்க்கக் கூடியது இந்த கருணைக்கிழங்கு.

  • மூலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதனை முற்றிலும் குணமாக்க விரும்பினால் கருணைக்கிழங்கினை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.

 

  • மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர மூலத்தினால் உண்டாகக்கூடிய எரிச்சல் குணமாக்கும்.

 

  • அதோடு, நாளடைவில் மூலை முளைகள் சுருங்கி முற்றிலும் குணமாகும்.

 

  • உடல் எடை மிகுதியால் அவதிப்படுபவர்களுக்கு நல்ல தீர்வு கொடுக்கக் கூடியது இந்த கருணைக்கிழங்கு.

 

  • பெண்களுக்கு ஏற்படக்கூடிய வெள்ளைப்பாடு உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.

 

  • கடினமான வேலை செய்பவர்களுக்கு ஏற்படக்கூடிய உடல் வலியையும் குணமாக்கும் ஆற்றல் இந்த கருணைக் கிழக்குக்கு உண்டு.

 

  • இது கல்லீரலை சுறுசுறுப்பாக்கக்கூடியது. கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கல்லீருடைய இயக்கத்தை சீராக்குகிறது.

karunai kilangu images

மேலும்

கருணைக்கிழங்கு உடலை குளிர்விக்கும் உணவு என்பதால் இதனை ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் கருணைக்கிழங்கினை தவிர்ப்பது நல்லது.

சாதாரணமாக சமைத்து சாப்பிட்டால் நாக்கில் நமச்சலை ஏற்படுத்தும். நன்றாக வேகா வைத்த பின் தோலை உரித்து புளி சேர்த்து சமைத்தால் அதில் உள்ள காரம் நீங்கும், அரிப்பும் இருக்காது.

சிலர் அரிசி கழுவிய நீரில் கருணை கிழங்கினை வேக வைப்பதும் உண்டு. இதனால் காரண நமச்சல் கட்டுப்படும்.

இதனையும் படிக்கலாமே

நமது வலைதளத்தின் பக்கத்தினை Disclaimer கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning