பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் | Badam Pisin in Tamil

பாதாம் பிசின் மருத்துவ பயன்கள் | Badam Pisin in Tamil

மருத்துவ முறைகளில் அந்த காலம் முதல் ஒரு சில மரங்களில் வடிகின்ற பிசின் போன்றவை, மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் பாதாம் மரத்திலிருந்து வடியும் பாதாம் பிசின் அற்புதமான நன்மைகளை கொண்டுள்ளது என்பது, நிறைய பேருக்கு தெரிய வாய்ப்பில்லை.

பாதாம் பருப்பை போன்றே இதுவும் மிகவும் மருத்துவ தன்மை கொண்டவை. ஆனால் இதன் விலை மிகவும் குறைவு.

மதுரைக்கு புகழ் சேர்க்கும் பானம் என்றால், அது ஜிகர்தண்டா. இதன் ருசிக்கு முக்கிய காரணம் இந்த பாராம் பிசின் தான்.

ஜிகர்தண்டாவை தெரிந்த அளவிற்கு பாதாம் பிசின் பற்றி பலருக்கும் தெரியாது. உண்மையில் இயற்க்கை நமக்கு அளித்த அற்புதமான மருத்துவ உணவுகளில் இதுவும் ஒன்றாகும்.

பாதாம் பிசின் மருத்துவ பயன்கள்

தாது பற்றாக்குறை

பொதுவாக உடலுக்கு எந்த அளவு வைட்டமின் சத்துக்கள் முக்கியமோ அதே அளவு மினரல் எனப்படும் தாதுக்களும் மிகவும் அவசியமாகும்.

இந்த தாதுக்கள் உடலின் எலும்புகள், தோல் போன்றவற்றின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். தாதுக்கள் அதிகம் உள்ள பாதாம் அதிகம் சாப்பிட்டு வர உடலில் தாது பற்றாக்குறை நீங்கி விடும்.

 உடல் சூடு

நமது நாட்டில் பெரும்பாலான காலங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதால் சிலருக்கு உடல் சூடு அதிகமாகி மிகவும் அவதிப்படுகிறார்கள்.

அதிலும் சிலருக்கு இதனால் வேறு சில உடல்நல பாதிப்புகளும் ஏற்படுகின்றன. மேலும் கோடை காலங்களில் உடலில் நீர் வறட்சி சிலருக்கு நீர் சுருக்கு ஏற்படும்.

அதே போன்று சிறுநீரகப்பைகளில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீர் கழிக்க முடியாத நிலையும் உண்டாகி அவதிப்படுவார்கள்.

இதற்கு நமது முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய பாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியை கொடுத்து வெப்பத்தால் ஏற்படும் பல பிரச்சனைகளை நீக்கக்கூடியது.

இதற்கு ஊறவைத்த பாதாம் பிசினை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் அடைப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும். மேலும், கோடை காலங்களில் ஏற்படும் நீர் வறட்சி மற்றும் நீர் சுருக்கு போன்றவையும் நீங்கும்.

badam pisin in tamil

அமிலத்தன்மை (அசிடிட்டி)

சிலருக்கு அளவிற்கு அதிகமான உணவை சாப்பிடுவதாலும் இரவில் நெடு நேரம் கழித்து உணவு சாப்பிடுவதாலும் நெஞ்செரிச்சல் எனப்படும் வயிற்றில் செரிமான இடங்களில் ஏற்றத்தாழ்வால் உணவு சரியாக செரிமானம் ஆகாமல் இருப்பது போன்றவை ஏற்படுகிறது.

இப்படியான சமயங்களில் பாதாம் பிசினை ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் acidity, நெஞ்செரிச்சல் போன்றவை நீங்கும்.

நீண்ட நாள் நோய்

நீண்ட நாள் நோயால் பாதிக்கப்பட்டு உடல் நலம் குன்றியவர்கள் நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் பாதாம் பிசினை நீரில் ஊற வைத்து வாரத்தில் மூன்று முறை சாப்பிட்டு வந்தால் நோயால் உடல் இழந்த சக்தியை மீண்டும் உடலுக்குத் தரும்.

மேலும், நீண்ட கால நோயைப் போக்குவதற்கு உண்டான நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் தன்மை உடையது.

ஆண் மலடு

ஆண் மலட்டுத்தன்மை உள்ளவர்கள் தினமும் இரவு இளம் சூடான பசும்பாலில் பாதாம் பிசினை கலந்து பருகி வந்தால் உடலில் உஷ்ணம் தணிந்து நரம்புகள் வலுப்பிற்று மலட்டுத்தன்மை நீங்கும்.

தாய்மார்கள் ஆரோக்கியம்

புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு வலு அதிகம் தேவைப்படும். வட இந்தியாவில் பல காலமாகவே புதிதாக குழந்தை பெற்ற பெண்களுக்கு பாதாம் பிசின் அதிகம் கலந்த லட்டு இனிப்புகளை வழங்கும் வழக்கம் இன்றும் பின்பற்றப்படுகிறது.

அவற்றை சாப்பிடும் பெண்களுக்கு உடல் வலுப்பெறுகிறது மற்றும் கருப்பையில் குழந்தை பிறந்த பிறகு இருக்கும் நச்சுகளையும் வெளியேற்றுகிறது.

மேலும் பாதாம் பிசின் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வயிற்று எரிச்சலுக்கு மிகவும் நல்லது. உடல் சூட்டினால் ஏற்படும் அல்சர், கண் எரிச்சல் போன்றவை குணமாகும்.

badam pisin benefits in tamil

உடல் குளிர்ச்சி

இன்று நாம் அருந்தும் குளிர்பானங்கள் வெறும் கலோரிகளை கொண்டது மட்டுமே. உடல் குளிர்ச்சி அடைந்த ஒரு உணர்வை கொடுத்தாலும் உண்மையில் அவை நமது உடலை, குளிர்விப்பது இல்லை.

இதில் உடலுக்கு கெடுதலைத் தவிர வேறு எந்த நன்மையும் கிடையாது.

ஆனால் நமது முன்னோர்கள் அதிகமாக பயன்படுத்திய பாதாம் பிசின் ஒரு சிறந்த குளிர்ச்சியைக் கொடுக்கும் குணங்களைக் கொண்டுள்ள ஒரு அற்புதமான ஒன்றாகும்.

badam pisin health benefits in tamil language

பாதம் பிசின்

பார்ப்பதற்கு ஒரு காய்ந்த பசைப் பொருளில் இருக்கும். இதை தண்ணீரில் எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

அதாவது இரவு ஊற வைத்து காலையில் இதை பார்த்தால் பளபளப்பான ஒரு திடமான, jelly போன்ற கெட்டியான ஒரு வடிவில் மாறிவிடும்.

சிறிது போட்டாலே போதும். நிறைய வந்துவிடும். இதில் பால் சர்க்கரை சிறிது ஏலக்காய் தூள் சேர்த்து சாப்பிடலாம்.

மேலும் இதனை பாயாசம் போன்றவற்றில் சேர்த்தும் நம் விருப்பப்படி செய்தும் உணவுகளில் கலந்தும் சாப்பிடலாம்.

விலை மலிவானது மற்றும் இயற்கையான உணவு என்பதால் இதில் செயற்கையான நிறங்கள் ஏதும் இல்லை என்பதால், குழந்தைகளுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது.

இது, அனைத்து நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும். எனவே, நீங்களும் இன்றே வாங்கி பயன்பெறுங்கள்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning