அகத்தி கீரை பயன்கள் | Agathi Keerai Benefits

அகத்தி கீரை பயன்கள் | Agathi Keerai Benefits

அகத்திக்கீரையில் அறுபத்து மூன்று வகையான சத்துக்கள் இருப்பதாக சித்தாந்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.

இதில், எட்டு புள்ளி நான்கு சதவீதம் புரதச்சத்து ஒன்று புள்ளி நான்கு சதவீதம் கொழுப்புச் சத்து, மூன்று புள்ளி ஒரு சதவீதம் தாது உப்புக்கள் அடங்கியுள்ளன.

மேலும் மாவு சாது இரும்புச் சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்களும் இருக்கின்றன.

சுண்ணாம்புச் சத்து, இந்த அகத்திக்கீரை அதிக அளவில் உள்ளது. இது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு, உதவுகின்றது.

அகத்திக்கீரையில், இலை வேர், காய், பட்டை ஆகிய அனைத்து பாகங்களுமே மருந்தாக பயன்படுகின்றன.

தோல் நோய்கள்

குடல் புண், அரிப்பு, சொறி, சிரங்கு, முதலிய தோல் நோய்கள் அகத்திக்கீரை உணவாக உண்பதால் குணமாகும்.

அகத்தி கீரை பயன்கள்  Agathi Keerai Benefits

தொண்டை

தொண்டைப்புண் மற்றும் தொண்ட கட்டி உள்ளவர்கள் அகத்திக்கீரையை பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்த நோய்கள் நீங்கும்.

பித்தம், ரத்தக்கொதிப்பு ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் விலகும்.

அகத்திக்கீரையை மாதம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் ஏற்படும் உடல் வெப்பம், மலச்சிக்கல் ஆகியவை நீங்கும்.

காய்ச்சல்

அகத்தி மரப்பட்டை, வேர் பட்டை ஆகியவற்றை வகைக்கு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு இருநூறு மில்லியாக சுண்ட காய்ச்சி வடிகட்டி அதனை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

நூறு மில்லி அளவாக ஒரு வேலை குடித்து வந்தால் காய்ச்சல், தாகம், கை, கால் எரிச்சல், மார்பு எரிச்சல், முழங்கால் வலி , நீர்க்கடுப்பு, அம்மைக் காய்ச்சல் போன்றவை குணமாகும்.

அகத்தி கீரை பயன்கள்  Agathi Keerai Benefits

தலைவலி மற்றும் பித்தம்

அகத்தி இலைச் சாறும் நல்லெண்ணையும் இவை இரண்டையும் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து பதமாக காய்ச்சி வைத்து கொள்ளவும்.

வடிகட்டும் முன்பாக கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கிச்சிலிக்கிழங்கு, எலுமிச்சை ஆகியவற்றை வகைக்கு இருபது கிராம் பொடி செய்து போட்டு கலக்கி வடிகட்டி வைத்து கொள்ளவும்.

இதனை வாரம் ஒருமுறை தலையில் இட்டு குளித்து வந்தால், பித்தம் தணிந்து, தலை வலி நீங்கும்.மேலும் கண்கள் குளிர்ச்சி பெறும்.

வயிற்று வலி

அகத்தி இலைகளை பிழிந்து சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாறோடு சமளவு அளவு தேன் கலந்து அருந்தி வர வயிற்று வலி தீரும்.

அகத்திக்கீரை பால் சுரப்பைக் கூட்டும். அகத்திக்கீரைச் சாறு, இரு துளி மூக்கில் விட்டால் ஜலதோஷம் தீரும்.

அகத்திக்கீரை உடலில் உள்ளகெட்டநீரை வெளியேற்றும் ஆற்றல் கொண்டது. உணவு எளிதில் செரிமானம் ஆகும்.

ஆண்மை பலம்

அகத்திக்கீரை இரும்புச்சத்து நிறைந்ததோடு மட்டுமின்றி, வெங்காயம், பூண்டு சாப்பிட்டால் கிடைக்கும் அளவிற்கு இணையான ஆண்மை பலம் அளிக்கும் சத்துக்களையும் கொடுக்கின்றது.

அகத்தி கீரை பயன்கள்  Agathi Keerai Benefits

யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

அகத்திக்கீரை மருந்துகளை முறிக்கும் தன்மை கொண்டது. எனவே சித்த மருந்துகள் சாப்பிடும்போது, இதை சாப்பிடக் கூடாது.

பொதுவாக இந்த கீரையை, அடிக்கடி சாப்பிடாமல் வாரம் ஒரு நாள் மட்டும் சாப்பிட்டால் போதுமானது.

இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டா ரத்தம் கெட்டு போகும் வாய்ப்பு உண்டு. சொறி, சிரங்கும் தோன்றலாம்.

ரத்தம் குறைந்து, ரத்த சோகை ஏற்படலாம். தினமும் அகத்திக்கீரை சாப்பிட்டால் வயிற்று வலி, பேதி ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது.

மற்றபடிஅகத்திக்கீரையை மாதம் ஓரிரு முறை சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நன்மையை கொடுக்கிறது.

இதனையும் படிக்கலாமே

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning