வல்லாரை கீரை சமையல் | Vallarai Keerai Benefits in Tamil

வல்லாரை கீரை சமையல் | Vallarai Keerai Benefits in Tamil

வல்லாரை கீரை சமையல் | Vallarai Keerai Benefits in Tamil

முற்காலத்தில் நமது முன்னோர்கள் வல்லாரை உண்பது நன்று, நல்லாரை காண்பது நன்று என்று, ஒரு பழமொழி கூறியுள்ளனர். அந்தப் பழமொழிக்கு ஏற்ப, வல்லாரை மருத்துவ குணங்களை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.

வல்லாரை கீரை என்றாலே, மூளை வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தும் கீரை என்று பலரும் நினைக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் அதுமட்டுமல்லாமல் அதையும் தாண்டி, நிறைய மருத்துவ குணங்களை, இந்த வல்லாரை கீரை பெற்றுள்ளது.

வல்லாரை கீரை நம் உடலில் ஒரு நோய் எதிர்ப்பு மருந்தாக பயன்படுகிறது. அதாவது, ரத்தம் மற்றும் உடலில் உள்ள நோய் கிருமிகளை அழிக்கும் சக்தி இந்த வல்லாரைக்கு உண்டு.

நமது ரத்தத்தில் ஏதாவது நச்சு கலந்து உள்ளதா என்பதை காட்டிக் கொடுக்கும் தன்மை நமது தோலுக்கு உண்டு.

தோல் பிரட்சனை

தோலில் ஏதாவது அரிப்பு, படை, சொறி இதை போன்று ஏதாவது இருந்தாலே நம் உடலில் ஏதாவது நச்சுக் கலந்து உள்ளது என்பது அர்த்தம்.

அந்த நச்சுக்களை நீக்க இந்த வல்லாரை கீரை ஒரு அருமருந்தாக செயல்படும்.

வல்லாரைக்கீரையை ஒரு துவையலாகவோ அல்லது வெறும் வல்லாரைக்கீரையை அரைத்து, விழுதாகவோ, தண்ணீர் விட்டு விழுங்கிடலாம்.

இதை போன்று தினமும் தொடர்ந்து செய்து வரும்போது, எந்த வித தோல் நோயாக இருந்தாலும் சரியாகிவிடும்.

அதாவது, தோல் நோய்க்கு வெளி மருந்து பூச்சு மட்டும் பூசாமல் இது போன்று உடலின் உட்புறம் இருக்கக்கூடிய அந்த நச்சுக்களை வெளியேற்ற இந்த வல்லாரையை பயன்படுத்தினால் அனைத்து விதமான தோல் நோய்களும் சரியாகும்.

வல்லாரை கீரை சமையல் | Vallarai Keerai Benefits in Tamil

யானைக்கால் நோய்

வல்லாரைக்கீரை, யானை கால் நோயை சரி செய்யும் தன்மை கொண்டுள்ளது.

வல்லாரைக் கீரையை ஒரு கைப்பிடி அளவு எடுத்து, வாணலில் எண்ணெய் விடாமல் தணலிலே நன்கு வதக், அந்த வெதுவெதுப்பான சூடோடு இருக்கும் பொழுது ஒரு துணியில வைத்து அந்த யானைக்கால் உள்ள இடத்தில் கட்டி வருவதன் மூலமாக இந்த யானைக்கால் நோய் சரியாகும்.

யானைக்கால் நோய் உள்ளவர்கள், வல்லாரைக் கீரையை உணவிலும் எடுத்துகொண்டு வரும் பொழுது, விரைவிலேயே நிவாரணம் தெரிய ஆரம்பிக்கும்.

வல்லாரைக் கீரையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச் சத்து தாது உப்புகள் ஏராளமாக இருக்கும் காரணத்தினால் ரத்ததிற்கு தேவையான சத்துக்கள் அனைத்தையும் சரிவிகித அளவில் கொடுக்கக்கூடியது இந்த வல்லாரை கீரை.

உடலில் ஏதாவது வீக்கத்தோடு கூடிய வலி இருந்தால் அந்த இடத்தில இந்த வல்லாரை கீரையை அரைத்து பத்தாக போட்டுவரவும் .

இதை போன்று தொடர்ந்து செய்யும் பொழுது அந்த வீக்கமும்குறைய துடைக்கும். மேலும் வலியும் சரியாகிவிடும்.

பற்களில் உள்ள கறை

இந்த வல்லாரைக் கீரைக்கு பற்களில் உள்ள மஞ்சள் கறயைப் போக்கும் தன்மையும் உண்டு. இரண்டு அல்லது மூன்று வல்லாரைக் கீரையை எடுத்துக் கொண்டு நேரடியாகவே பற்களில் வைத்து நன்கு தேய்த்து விடவும். இவாறு தொடர்ந்து செய்து வரும்பொழுது பற்களில் உள்ள அந்த மஞ்சள் கறை நீங்கி விடும்.

வல்லாரை கீரை சமையல் | Vallarai Keerai Benefits in Tamil

மூளை வளர்ச்சி

நமது மூளைக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் நிறைந்தது இந்த வல்லாரைக்கீரை. அதனால்தான் இந்த வல்லாரைக்கீரைக்கு சரஸ்வதி என்று மற்றொரு பெயரும் உள்ளது.

மந்தமாக படிக்கும் குழந்தைகள், தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை, காலையில் வெறும் வயிற்றில் மூன்று வல்லாரைக் கீரை தொடர்ந்து பச்சையாகக் கொடுத்து வரும் பொழுது நன்கு மூளை வளர்ச்சி அடையும்.

குழந்தைகள் நியாபக மறதி இந்த இன்றி படிப்பார்கள்.

மாரடைப்பு

நமக்கு எதிர்காலத்தில் மாரடைப்பு நோய் வராம இருக்க வேண்டும் என்றால், இந்த வல்லாரைக்கீரை தினமும் ஒரு ஐந்து அல்லது பத்து வல்லாரிக்கீரையை எடுத்து நன்கு அரைத்து வைத்து கொள்ளவும். அதனுடன் ஒரு அரை எலுமிச்சை பழத்தின் சாறு பிழிந்து விட்டு தினமும் குடிச்சிட்டு வரும் பொழுது, மாரடைப்பு நோயே நம்மை நெருங்காமல் பார்த்துக்கொள்ளலாம்.

வல்லாரை கீரை சமையல் | Vallarai Keerai Benefits in Tamil

குடல் ஆரோக்கியம்

வல்லாரை இலையை வாயில போட்டு நன்றாக மென்று அந்த சாறை குடித்து வந்தால் குடலில் இருக்கக்கூடிய புண், குடல் நோய், வாய் புண், வாய் துர்நாற்றம் அனைத்தும் சரியாகிடும்

கண்

இந்த வல்லாரை கீரையை, தினமும் சாப்பிடுபவர்களுக்கு கண் மங்கல் முற்றிலும் சரியாகும்.

கண் பார்வை தெளிவடையும். கண்களுக்கு நன்கு குளிர்ச்சியை தரக்கூடியது.

குழந்தைகளின் ஆரோக்கியம்

அஜீரணக் கோளாறுகள் எல்லாவற்றையும் நீக்கக்கூடியது இந்த வல்லாரைக்கீரை.

இந்த வல்லாரைக் கீரையை குழந்தைங்க சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிப்பார்கள். இந்த வல்லாரைக் கீரையை நன்றாக அரைத்து தோசை மாவில் சேர்த்து , தோசையாக செய்து கொடுக்கலாம். இந்த தோசையும் மிகவம் சுவையுடன் இருக்கும். எனவே குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுடைய மூளை வளர்ச்சிக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தலைமுடி

எவர் ஒருவர், தன் வாழ்நாள் முழுவதும், வல்லாரைக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருகிறார்களோ, அவர்களுக்கு முதுமை என்பதே கிடையாது.

அதாவது, தலைமுடி என்றுமே கருமையாக இருக்கும். இளநரை இருப்பவர்களும் சரி, அல்லது தலையில் வெள்ளை முடி இருப்பவர்களும் சரி தொடர்ந்து இந்த வல்லாரைக் கீரையை சாப்பிட்டுட்டு வரும்பொழுது, அந்த வெள்ளை முடி கருமையாக மாற ஆரம்பிக்கும்.

இதனையும் படிக்கலாமே

கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)

முட்டைகோஸ் ஏன் சாப்பிட வேண்டும் தெரியுமா?(Opens in a new browser tab)

பூண்டு மருத்துவ பயன்கள் | uses of garlic in tamil(Opens in a new browser tab)

அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)

உளர் திராட்சையில் இத்தனை நன்மைகளா(Opens in a new browser tab)

முட்டை அதிகம் சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா(Opens in a new browser tab)

உருளைக்கிழங்கு நன்மைகள் | urulaikilangu in tamil(Opens in a new browser tab)

மருத்துவ குணம் வாய்ந்த வெந்தயத்தின் தன்மைகள்(Opens in a new browser tab)

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning