வாழை இலை மருத்துவ பயன்கள் | Valai Ilai Uses in Tamil
பொதுவாகவே வாழை மரத்தின் வாழைத்தண்டு, வாழைப்பூ, வாழை இலை, வாழைக்காய், வாழைப்பழம் என அனைத்து பகுதிகளுமே நமது உடலுக்கு நன்மை தரக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில் வாழை இலையின் நன்மைகளைப் பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.
வாழை இலை என்றாலே நம் எல்லோருக்கும் உடனே நினைவிற்கு வருவது தலைவாழை இலை விருந்து தான்.
அது அசைவ உணவாக இருந்தாலும் சரி சைவ உணவாக இருந்தாலும் சரி நிச்சயம் தலைவாழை தான்.
இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலன இடங்களில் வாழை இலையின் பயன்பாட்டினை மறந்து, அதற்கு பதிலாக பாலித்தீன் பேப்பர்கள், தட்டுகள் மேலும் ஒரு சிலவற்றினை பயன்படுத்துகின்றனர்.
நகர்ப்புறங்களில் உள்ள ஹோட்டல்களில் பெரிதும் பாலித்தீன் பேப்பர்கள் தான் பயன்படுத்தப்படுகின்றது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவது மட்டுமல்லாமல் உடலுக்கு பல்வேறு தீங்குனையும் தருகிறது.
பசி உணர்வினை அதிகரிக்கும்
ஒரு சிலருக்கு குறைபாட்டினாலும், அதிகப்படியான மன அழுத்தத்தினாலும் பசி உணர்வானது சுத்தமாக இருக்காது. இவர்கள் அடிக்கடி வாழை இலையில் சாப்பாடு சாப்பிட்டு வருவதன் மூலமாக பசி உணர்வானது அதிகரிக்கும்.
மேலும் வாழை இலையில் எந்த ஒரு உணவை சாப்பிட்டாலும் எளிதில் ஜீரணம் ஆகும்.
வயிற்றுப்புண் குணமாகும்
வயிற்றுப்புண், வயிற்று வலி, வயிறு சார்ந்த பிரச்சனைகள் அனைத்துமே எதனால் ஏற்படுகின்றது என்றால் நீண்ட நாட்களாக அலுமினியம் உலோகம் பயன்படுத்தி சமைக்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தான் இந்த பிரச்சனை ஏற்படுகின்றது.
வயிறு சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் வாழை இலையில் உணவினை சாப்பிட்டு வருவதன் மூலமாக அதில் இருக்கக்கூடிய குளோரோஃபில் எனப்படக்கூடிய ஒரு வேதிப்பொருள் நாம் சாப்பிடக்கூடிய உணவினை நன்றாக செரிமானம் செய்கின்றது.
வாழை இலையில் சாப்பிடுவதன் மூலமாக வயிற்றுப் பகுதியில் உள்ள புண்கள் குணமாகிறது.
சரும வரட்ச்சி நீங்கும்
வயது அதிகரிக்க அதிகரிக்க தோளில் உள்ள ஈரப்பதமானது குறைந்து வறட்சித் தன்மை ஏற்பட்டு தோலில் சுருக்கங்கள் உருவாகின்றன.
தோலில் சுருக்கங்கள் உருவாவதனால் வயதான தோற்றம் ஆனது ஏற்படும். தினசரி மூன்று வேலைகளும் வாழை இலையில் உணவினை சாப்பிடுபவர்களுக்கு சருமத்தில் நீர் வரட்சியானது ஏற்படாமல், சருமத்தினை பளபளப்பு தன்மையுடன் காட்டும்.
இதனால் தோல் சுருக்கம் எதுவும் ஏற்படாமல் நீண்ட நாட்கள் இளமையான தோற்றத்தோடு இருக்க உதவுகிறது.
சிறந்த கிருமி நாசினி
நாம் உண்ணுகின்ற உணவில் உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஒரு சிலர் கிருமிகள் இருப்பதால் உணவானது நச்சுத்தன்மை அடைகின்றது.
இதனை நாம் உண்பதன் மூலமாக உடலுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுகின்றது.
வாழை இலையில் நாம் உணவினை சாப்பிட்டு வருவதன் மூலமாக இதில் இருக்கக்கூடிய கிருமி நாசினி வஸ்துக்கள் உணவில் இருக்கக்கூடிய நுண்கிருமிகளை அழித்து நமது உடலை நோய்கள் எதுவும் தொற்றாமல் பாதுகாக்கிறது.
கண்கள் ஆரோக்கியம்
நமது கண்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நமது தினசரி வேலைகள் எதுவும் பாதிக்காமல் நிம்மதியாக செய்ய முடியும்.
கண்களின் பெரும் பகுதி நீர் தன்மை கொண்ட திசுக்களால் உருவானது. கண்களில் ஈரப்பதமானது குறையாமல் இருக்கும் சமயங்களில் கண் பார்வை குறைபாடு, கண்ணெழுத்தம் இது போன்ற நோய்கள் எதுவும் ஏற்படாது.
வாழை இலையில் தினசரி உணவு சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு
இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்களை நம் அதிகம் பயன்படுத்துவதால் அது உலகெங்கிலும் சுற்றுச்சூழல் மாசுபாட்டினை ஏற்படுத்துகின்றது. இது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டு உணவு தயாரிக்க கூடிய இடங்களிலும், உணவு பரிமாறக்கூடிய இடங்களிலும் அதிக அளவில் பயன்படுத்துகின்றனர்.
இதற்கு பதிலாக நாம் வாழை இலையினை பயன்படுத்தினோம் என்றால் உடலுகு ஆரோக்கியம்.
மேலும் அவற்றை மண்ணில் நாம் வீசினாலும் விரைவில் மக்கக்கூடிய தன்மை கொண்டது. அது மட்டும் இல்லாமல் வாழை இலை நிலத்திற்கு உரமாகவும் மாறுகிறது.
இதனையும் படிக்கலாமே
- கலாக்காய் பயன்கள் | Kalakai Benefits in Tamil
- ஆஸ்துமா முற்றிலும் குணமாக | Best Good for Wheezing in Tamil
- சூரியகாந்தி விதை பயன்கள் | Sunflower Seeds in Tamil
- பித்தம் குறைய என்ன செய்ய வேண்டும் | How to Reduce Pitham in Tamil
- மூங்கில் அரிசி பயன்கள் | Bamboo Rice Health Benefits in Tamil
அனைவரும் வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்.
20 Comments
Comments are closed.