வாழைத்தண்டு பயன்கள் | Valaithandu Benefits in Tamil

வாழைத்தண்டு பயன்கள் | Valaithandu Benefits in Tamil

வாழைத்தண்டானது வாழை மரத்தின் வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாவற்றையும் தன் மீது சுமந்து, உயர நிற்பது மட்டுமின்றி நம் உடலில் உள்ள பல உறுப்புகளை சீர் செய்து திறம்பட செயல்படுத்தவும் உதவுகிறது என்பதை நாம் அறியாமல் இருக்கிறோம்.

வாழைத்தண்டை வாரத்தில் ஒருமுறை சாப்பாட்டில் சேர்ப்பதால் நமக்கு ஏற்படும் நன்மைகளை இங்கே பார்ப்போம்.

வாழைத்தண்டு பயன்கள் Valaithandu Benefits in Tamil

நச்சுக்கள்

நச்சுக்களைப் போக்க உதவுகிறது. வாழைத்தண்டில் டையூரிட்டிக் எனப்படும் சிறுநீர் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் பண்புகள் நிறைந்துள்ளன.

எனவே, நாம் வாழைத்தண்டு சாறைப் பருகுவதால் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, சிறுநீரகக் குழாயில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

ரத்த சோகை

ரத்த சோகையை போக்குகிறது. வாழைத்தண்டில் இரும்பு மற்றும் வைட்டமின் பி 6 சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இரும்பு மற்றும் வைட்டமின் பி6 சத்துக்கள், நம் ரத்தத்தில் உள்ளஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

இதன் மூலம் ரத்த சோகையை நம்மை விட்டு போக்குகிறது. இதனால்தான் ரத்த சோகை உள்ளவர்களுக்கு வாழைத்தண்டை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

வாழைத்தண்டு பயன்கள் Valaithandu Benefits in Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வாழைத்தண்டில் பொட்டாசியம் சத்தானது நிறைந்துள்ளது.
எனவே, வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த நோயும் நம்மை அண்டாமல் பாதுகாக்கிறது.

சிறுநீரக கல்

சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கிறது. நம் சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படுவதற்கான காரணம் கால்சியம் படிவங்கள் தான்.

நாம் வாழைத்தண்டு சாறைக் குடிப்பதால் வாழைத்தண்டில் உள்ள directic எனப்படும் சிறுநீரக ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும் பண்புகள் நம் சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் படிமங்களை வெளியேற்றுகின்றன.

இதன் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

வாழைத்தண்டு பயன்கள் Valaithandu Benefits in Tamil

மலசிக்கல்

மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது. வாழைத்தண்டில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே மலச்சிக்கல் உள்ளவர்கள் வாழைத்தண்டை சமைத்தோ அல்லது ஜூஸ் ஆகவோ குடித்தால் மலச்சிக்கல் குணமாகும்.

நெஞ்சு எரிச்சல்

நெஞ்சு எரிச்சலை குணமாக்குகிறது. அடிக்கடி நெஞ்சு எரிச்சலால் கஷ்டப்படுகிறவர்கள் வாழைத்தண்டு சாறை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள அமில தன்மையை சமன் செய்து விரைவாக நெஞ்செரிச்சலை குணமாக்குகிறது.

வாழைத்தண்டு பயன்கள் Valaithandu Benefits in Tamil

நீரிழிவு நோய்

நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவை வாழைத்தண்டு கட்டுப்படுத்துகிறது.

எனவே, நீரிழிவு நோய்களோ வாழைத்தண்டை வாரத்தில் இரண்டு முறை உணவில் சேர்ப்பதன் மூலம் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம்.

உடல் எடை

உடல் எடையை குறைக்க உதவுகிறது. வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து உடலின் செல்களில் இருக்கிற கொழுப்புகளை அகற்ற உதவுகிறது.

நாம் வாழைத்தண்டு சாறு பருகினதும் வயறு நிறும்பினது போல் நமக்குத் தோன்றும். இதனால் நம் ஆரோக்கியமற்ற தின்பண்ட மற்றும் junk foods சாப்பிடுவதை தவிர்த்து, நம் உடல் எடையை குறைக்கலாம்.

எனவே நாம் வாரத்தில் ஒருமுறை இந்த வாழைத்தண்டை சாப்பிட்டு மேற்கண்ட நன்மைகளை பெற்று நீண்ட நாள் வாழ வாழ்த்துகிறோம்.

வாழைத்தண்டு பயன்கள் Valaithandu Benefits in Tamil

 

மாதவிடாய் பிரச்சனை

இந்த வாழைத்தண்டானது பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படக்கூடிய அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுபடுத்த உதவுகிறது.மேலும் பெண்களின் உடல் பலம் பெரும்.

மேலும் இந்த வாழைத்தண்டானது வயிற்றில் உள்ள புண்களினை குணமாக்க உதவுகின்றது.

 

 

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை படிக்கவும்

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning