சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியம் | Urinary Infection Treatment Home Remedies in Tamil

சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியம் | Urinary Infection Treatment Home Remedies in Tamil

பொதுவாக பருவ காலம் மாறும் பொழுது அந்தந்த பருவ காலத்திற்கு ஏற்ப சில உடல்நல பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

அந்த வகையில் கோடை காலத்தில் நிறைய பேருக்கு ஏற்படும் பிரச்சனைதான் நீர்க்கடுப்பு. இது, ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் குழந்தைகள், வயதானவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்க பிரச்சனையாகும்.

இது எல்லா காலங்களிலும் வருகிற பிரச்சனை என்றாலும் கோடையில் இதன் தாக்கம் கொஞ்சம், அதிகமாகவே இருக்கும். இதற்கு, பல காரணங்கள் உள்ளன.

நீர்க்கடுப்பு அறிகுறி

இந்த நீர்க்கடுப்பு ஏற்படும் நேரத்தில், சிறுநீர் போகும் சொல்ல முடியாத அளவிற்கு, கடுப்புடன் கூடிய வலி ஏற்படும்.

மேலும் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். ஆனால் அப்படி சிறுநீர் கழிக்க முயற்சி செய்யும் பொழுது சொட்டு சொட்டாக மட்டுமே சிறுநீர் வெளியேறும். இதை வெளியே சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது என்கிற அளவுக்கு அப்படி ஒரு அவஸ்தை.

இதில் குழந்தைகள் என்ன சொல்வது என்று செல்ல தெரியாமல் துடித்துப் போய் விடுவார்கள்.

urine infection cure tips in tamil

நீர்க் கடுப்பு ஏற்பட காரணம்

இந்த நீர்க் கடுப்பு எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் கோடையில் போதுமான அளவு தண்ணீர் குடிக்காததுதான் மிக முக்கிய காரணம்.

பொதுவாக நாம் தண்ணீர் அருந்தும் அளவு குறையும் பொழுது, சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். இதனால் சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி சிறுநீர் பாதையில் படிகங்களா படிந்துவிடும்.

இதனால் சிறுநீர் வெளியேற முடியாமல் எரிச்சல், வலியோடு துளித்துளியாக வெளியேறும். , மற்ற காலங்களில் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றால், கோடையில் மட்டும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும்.

உண்மையில் நிறைய தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சனைகள் வராது. அதே போன்று, நிறைய தண்ணீர் குடிக்கும் பொழுது கிருமி தொற்றுகள் இருந்தாலும் வெளியேறிவிடும்.

உண்மையில் நம் உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லை என்றாலும் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

இதனால் சிறுநீர் போகும் பொழுது எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவையும் ஏற்படும். முக்கியமாக கோடையில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்சத்துள்ள ஆகாரங்களை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும்.

கோடையில் அளவுக்கு மீறிய வியர்வையின் காரணமாக உடலில் நீர் இழப்பு ஏற்படும். இந்த நீர் இழப்பை ஈடு செய்ய நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.

நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைத்தாலும் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். அதாவது, நெடுந்தூரப் பயணம் செல்லும் பொழுது இது போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையில் உள்ள கிருமிகள் பன்மடங்காக பெருக வாய்ப்புள்ளது.

அதிலும் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அளவில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இப்பொழுது நீர்க்கடுப்பை உடனே போக்கும், சில வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

சின்ன வெங்காயம்

மூன்று சின்ன வெங்காயத்தை, பொடியாக நறுக்கி, அதை, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த தண்ணீரை குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்று விடும்.

இல்லை என்றால் மூன்று சின்ன வெங்காயத்தை அப்படியே பச்சையாக சாப்பிட்டாலும் சில நிமிடங்களிலேயே, நீர்க்கடுப்பு காணாமல் போய்விடும்.

எலுமிச்சை

ஒரு டம்ளர் தண்ணீரில், அரை மூடி எலுமிச்சை சாறு மற்றும் சிறிதளவு உப்பு.இவை இரண்டையும் கலந்து குடித்தால் நீர்க்கடுப்பு சரியாகி சிறுநீர் தாராளமாக பிரியும்.

இதில் உப்பிற்கு பதிலாக நாட்டு சர்க்கரையும் கலந்து சாப்பிடலாம். அதே போன்று ஒரு பாதி அளவு எலுமிச்சை பழ சாற்றுடன் எட்டு மடங்கு வெதுவெதுப்பான வெந்நீர் கலந்து குடித்து வந்தால் எரிச்சல், கடுப்பு இல்லாமல் சிறுநீர் வெளியேறும்.

Urinary Infection Treatment Home Remedies in Tamil

வெந்தயம்

வெந்தயத்தை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இதை தினமும் மோரில் கலந்து குடித்து வந்தால் நீர்க்குத்தல் வராது. வந்தாலும் இது போன்று குடித்தால் உடனே நீர்க்கடுப்பு நின்றுவிடும்.

பொதுவாக சிறுநீர் பாதையில் நச்சுகள் தங்கி இருந்தாலும் இந்த வெந்தயம் உடனடியாக நச்சுக்களை வெளியேற்றி தொற்றிலிருந்து காத்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடியது.

வெட்டிவேர்

மண்பானையில் சுத்தமான தண்ணீர் ஊற்றி வெட்டிவேரை போட்டு ஊற வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல் நீங்கும், உடல் சூடும் தணியும்.

புளிப்பானகம்

ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு புளியை நன்றாக கரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் வெல்லத்தை சேர்த்து குடித்தால் உடனே நீர்க்கடுப்பு நின்றுவிடும்.
இதை இன்றும் கிராமங்களில் செய்வார்கள். பழைய புளியாக இருந்தால் இன்னும் நல்லது.

தண்ணீர்

மிக முக்கியமாக, தினமும் குறைந்தது நான்கு லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அதே போன்று பெண்கள் வெள்ளிக்கிழமையிலும் ஆண்கள் சனிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்து வருவது நல்லது.

நீர்சத்துள்ள இளநீர், lemon juice, நீர்மோர் இவற்றை அடிக்கடி குடித்து வந்தாலும்,இது போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.

சிறுநீர் தொற்று வீட்டு வைத்தியம்

நீர் கடுப்பு உண்டாக வேறுசில காரணங்கள்

வேறு சில காரணங்களாலும் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் ஏற்படும். அதாவது சிறுநீர் வெளியேறுகிற பகுதியே சுத்தமாக வைத்துக்கொள்ள தவறினால்,நீர்க்கடுப்பு ஏற்படும்.

மேலும் நீர்த்தாரையில் கல் அடைத்துக் கொண்டாலும் அந்த பாதை சுருங்கி விட்டாலும் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும். இவர்களுக்கு சிறுநீர் சொட்டு சொட்டாக போகும். சிறுநீர் நிறம் அடர் மஞ்சளாகவோ கருப்பாக மாறும். இவர்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் நீர்க் கடுப்பை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் ரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கத் தவறினால் சிறுநீர் பாதையில் அடிக்கடி நோய் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்.

முக்கிய குறிப்பு

அன்றெல்லாம் கோடையில் கேழ்வரகு கூழ், கம்பங்கூழ், நீராகாரம், நுங்கு, பதநீர், இளநீர் போன்றவற்றை கோடை உணவாக எடுத்துக் கொண்டார்கள். எனவே, இது போன்ற பிரச்சனைகள் அப்பொழுது அதிகம் இல்லை.

ஆனால் சில உணவுகள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முதலில் தினமும் அதிகமாக coffee டீ குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

அதே போன்று அதிக காரம், புளி, உப்பு இவற்றையும் குறைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தினமும் அசைவ உணவு மற்றும் மசாலா உணவுகள் சாப்பிடுவதையும், குறைத்துக் கொள்ள வேண்டும்.

புகை பிடித்தல், மது அருந்துதல், இவற்றையும் தவிர்ப்பது நல்லது.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்.

 

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning