வெட்டி வேர் பயன்கள் | Vetti Veru Uses in Tamil
வெட்டி வேரை பழங்காலத்தில் இருந்தே நமது முன்னோர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.இது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இது ஒரு புல் இனத்தினை சார்ந்ததாகும். ஆற்றுப்பகுதில் நன்றாக வளரகூடிய இந்த வெட்டி வேர்.நாட்டு மருத்துவத்தில் இந்த வெட்டி வேருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு.
இந்த வெட்டி வேருக்கு உஷ்ணத்தை தணிக்கும் சக்தியானது அதிகமாகவே இருக்கிறது. வெட்டி வேரினை பற்றி நாம் இதுவரை அருந்திடாத பல மருத்துவ பயன்களை பற்றி பாப்போம்.
உடல் சோர்வு
கோடை காலங்களில் மண்பானையில் உள்ள நீரில் வெட்டிவேரை போட்டு வைக்க வேண்டும். அந்த தண்ணீரை நாள்தோறும் பருகி வருவதன் மூலமாக தாகம் தணிந்து உடல் சோர்வு நீங்கி உற்சாகம் வரும்.
நம்மில் பல பேருக்கு, காய்ச்சல் வந்த பின்பு உடலில் வலி, சோர்வு அதிகமாக இருக்கும். இதனை நீக்க வெட்டிவேரை நீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை பருகி வந்தால் உடல் சோர்வும் உடல் வலியும் நீங்கும்.
இந்த தண்ணீரை குடிப்பதன் மூலம், ஜீரண சக்தியும் அதிகரிக்கும். வயிற்றுப்புண்ணும் குணமடையும்.
வியர்வை துர்நாற்றம்
வெயில் காலங்களில் உடம்பில் ஏற்படும் வியர்வை துர்நாற்றத்தை நீக்க வெட்டிவேரை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து அந்த விழுதினை சுடு தண்ணீரில் கலந்து குளிக்க வேண்டும்.
அறையின் வெப்பநிலை
கோடை காலங்களில் வீட்டிற்கு உள் பகுதியில் வெப்பம் தன்மை அதிகமாக இருக்கும். அந்த சமயங்களில் நம் வீட்டு ஜன்னல்களில் வெட்டி வேரினை கொண்டு செய்யப்பட்ட தடுப்புகளை வைத்து வர நம் வீட்டிற்குள் இருக்கும் வெப்பநிலை குறைந்து குளிர்ச்சி தன்மை அடைகிறது.
நீர்க்கடுப்பு
நீர்க்கடுப்பு விலகவும் வெட்டிவேர் பயன்படுகிறது. வெட்டிவேரை நூறு கிராம் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு மண்ணினால் செய்யப்பட்ட சட்டியில் போட்டு நான்கு கப் நீர் நன்றாக காய்ச்சி, அதனுடன், திருநீற்றுப் பச்சை விதையைப் போட்டு வெயில் நேரத்தில் குடித்து வந்தால் வெயில் சூட்டினால் ஏற்படும் உடம்பு எரிச்சல், கழுத்து வலி, சூட்டுக் கொப்பளங்கள், சிறுநீர்க் கடுப்பு ஆகியவை நீங்கி விடும்.
முகபருக்கள் நீக்க
முகபருக்கள் நீக்கவும் வெட்டிவேர் பயன்படுகிறது. துண்டுகளாக வெட்டிய வெட்டிவேர் சிறிதளவு, கொட்டையை நீக்கிய கடுக்காய் ஒன்று.
இவன் இரண்டையும், முதல் நாள் இரவே சுடுநீரில் போட்டு, ஊற வைத்து விட வேண்டும். மறுநாள் அதை அரைத்து விழுதாக்கி அந்த விழுதை முகபருக்கள் மீது தடவி வர தழும்பு இல்லாமல் மறைந்துவிடும்.
தீக்காயம்
தீக்காயம் ஏற்பட்டால் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் வெட்டிவேரை அரைத்து அந்த விழுதினை தீக்காயத்தின் மேல் பூசி வந்தால் தீக்காயம் விரைவில் குணமாகும். தழும்பும் விரைவில் மறைந்துவிடும்.
மூட்டு வலி
வயதான அல்லது வயது ஆகி கொண்டிருப்பவர்களுக்கு கால் வலி பிரச்சனைகள் அடிக்கடி இருக்கும்.
தேங்காய் எண்ணெயுடன் வெட்டிவேரை சேர்த்து நன்றாக காய்ச்சி அந்த எண்ணெயை இரண்டு நாட்கள் கழித்து நம் காலில் எங்கு வலி உள்ளதோ, அந்த இடங்களில் தடவி வரலாம். இப்படி தொடர்ந்து செய்து வர, மூட்டு வலி போன்ற பிரச்சனைகளும் குணமாகும்.
உடல் சூட்டினால் ஏற்படும் வயிற்று வலி விலக வெயில் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, வயிற்று கடுப்பை நீக்க, வெட்டி வேரை நன்றாக காய வைத்து சுத்தம் செய்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வயிற்று உபாதைகள்
பெருஞ்சீரகத்தை பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
வெட்டிவேர் பொடி ஒரு தேக்கரண்டி, கருஞ்சீரகப் பொடி ஒரு தேக்கரண்டி இவை இரண்டையும் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இரண்டு மில்லி கிராம் அளவிலான தண்ணீரைக் குடித்து வந்தால் வயிற்று வலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.
மேலும்
ஆயுர்வேதத்தில், வெட்டி வேரில் இருந்து தயாரிக்கப்படும் நறுமண எண்ணெயானது, மன அமைதிக்கும், மனநோய்க்கும் மருந்தாக பயன்படுத்தப் படுகிறது.
இவை தவிர வெட்டிவேரை மூலதனமாகக் கொண்டு உருவாக்கப்படும் விசிறியைக் கொண்டு வீசினால் அதில் வரும் காற்றின் மூலம் உடல் எரிச்சல் தொண்டை வறட்சி போன்றவையும் சரியாகும்.
இதனையும் படிக்கலாமே
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
- கற்பூரவள்ளி மருத்துவ பயன்கள் | Karpooravalli in Tamil(Opens in a new browser tab)
- இலுப்பை எண்ணெய் பயன்கள் | Iluppai Oil Benefits(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- கருணை கிழங்கு பயன்கள் | Karunai Kilangu Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டயமாக படிக்கவும்
8 Comments
Comments are closed.