கோரை கிழங்கு பயன்கள் | Korai Kilangu Benefits in Tamil

கோரை கிழங்கு பயன்கள் | Korai Kilangu Benefits in Tamil

கோரைக்கிழங்கு என்பது சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவதில் முக்கியமாக பயன்படுத்தப்படும் நோய் தீர்க்கும் ஒரு அற்புதமான பொருளாகும்.

இது குளிர்ச்சித்தன்மை மற்றும் நறுமணத்தை தரக்கூடியது.

கோரைக்கிழங்கு ஒரு புல் வகையை சேர்ந்த மூலிகையாகும்.

கோரை கிழங்கு பயன்கள் Korai Kilangu Benefits in Tamil

காய்ச்சல்

பல நன்மைகளை அளிக்கும் இந்த கிழங்கு எந்தவித காய்ச்சலாக இருந்தாலும் விரைவில் குணமாக்கும் ஆற்றல் உடையது.

அதனால் இயற்கை மருத்துவத்தில் காய்ச்சலுக்கு தயாரிக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி தரும் மருந்துகளில் இதை ஒரு துணை மருந்தாக சேர்க்கப்படுகிறது.

ஞாபக மறதி

காய்ந்த கோரைக்கிழங்கு நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கக்கூடியது. கோரைக்கிழங்கின் பொடியில் பெரியவர்களாக இருந்தால் இரண்டு கிராம் அளவு எடுத்து ஒரு டம்ளர் இட்டு, கொதிக்க வைத்து அருந்தி வர வேண்டும்.

குழந்தைகளாக இருந்தால், அரை கிராம் அளவு எடுத்து, நீரில் இட்டு கொதிக்க வைத்து, கொடுத்து வரலாம்.

இவ்வாறு அருந்தி வரும் பொழுது, மூளையின் செயல்பாட்டு திறன் மேம்படும். ஞாபக மறதி குறைந்து, நினைவாற்றல் திறன் அதிகரிக்கத் தொடங்கும்.

கோரை கிழங்கு பயன்கள் Korai Kilangu Benefits in Tamil

பெண்களுக்கு உகந்தது

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், அடிவயிற்று வலி, கருப்பையில் புண்கள் போன்றவற்றை குணமாக்கும்.

நச்சுகளை நீக்க

உடலில் உருவாகும் அதிக அளவு சூடு, பித்தம் போன்ற பாதிப்புகளை குறைக்கும். உடலில் உள்ள நுண்கிருமிகளையும், நச்சுக்களையும் வெளியேற்றி ரத்தத்தை சுத்திகரிக்கும் குணம் கொண்டது.

கோரை கிழங்கு பயன்கள் Korai Kilangu Benefits in Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

காய்ச்சல் இருக்கும் பொழுது, கற்பூரவள்ளி, நிலவேம்பு, சுக்கு, மிளகு, கடுக்காய் தோல், அதிமதுரம் போன்றவற்றுடன், கோரைக்கிழங்கு பொடியையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அருந்தி வரும் பொழுது காய்ச்சலின் தீவிரத்தை குறைத்து உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

வயிற்றுப்போக்கு

கோரைக்கிழங்கு பொடியை, வயிற்றுப்போக்கு இருக்கும் காலங்களில் சிறிதளவு நீரில் இட்டு, கொதிக்க வைத்து, அருந்தி வந்தால் சிறந்த பலனை கொடுக்கும்.

கோரை கிழங்கு பயன்கள் Korai Kilangu Benefits in Tamil

சரும பிரச்சனை

கோரைக்கிழங்கு தோல் நோய்களுக்கு அருமருந்தாக செயல்படும் ஆற்றல் கொண்டது.

கோரைக்கிழங்கின் பொடியை கஸ்தூரி மஞ்சள் மற்றும் பால் சேர்த்து சருமத்தின் மீது பூசி குளித்து வரும் பொழுது உடல் சூட்டினால் உருவாகும் கொப்புளங்கள், தேமல், வியர்க்குரு, முகப்பரு போன்ற பல தொந்தரவுகள் மறைய தொடங்கும்.

மூட்டு வலி

கோரைக்கிழங்குஅரை தேக்கரண்டி அளவு எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து காலை மற்றும் மாலை வேளையில் அருந்தி வரும் பொழுது மூட்டு வலி குறைய தொடங்கும்.

கோரை கிழங்கு பயன்கள் Korai Kilangu Benefits in Tamil

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின்  Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.

 

Related Posts

1 Comment

  1. Pingback: trippy chocolates

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning