வேப்பிலை மருத்துவ பயன்கள் | Veppilai Uses in Tamil

வேப்பிலை மருத்துவ பயன்கள் | Veppilai Uses in Tamil

எங்கும் கிடைக்கும் வேப்பிலைகளின் சிறந்த மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம். நமக்கு அருகிலேயே கிடைக்கும் மூலிகைகள் நமக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்களை பெற்றிருக்கும்.

அந்த வகையில் எங்கும் எளிதாக கிடைக்கும் வேப்பிலையானது பல்வேறு நன்மைகளை கொண்ட ஒரு சிறந்த மூலிகையாகும்.

பாரம்பரிய மருத்துவத்தில் பல நோய்களைத் தீர்க்கும் ஒரு இயற்கை மருந்தாக இந்த வேப்பிலை பயன்படுகிறது.

வேப்பிலையை முறைப்படி பயன்படுத்தினால் எண்ணற்ற நோய்கள் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.

வேப்பிலைகளை பயன்படுத்தும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்று இப்போது பார்க்கலாம்.

வேப்பிலைகளில் நிம்பின்,நிம்போலிடே, நிமாண்டியல் என்ற இயற்கையான வேதிப் பொருட்களும் ஆன்டி பாக்டீரியாக்கள், பூஞ்சை மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள், அலர்ஜி எதிர்ப்பு பண்புகளும் நிறைந்துள்ளன.

வேப்பிலை மருத்துவ பயன்கள் Veppilai Uses in Tamil

இதில் நிறைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடென்ட் குணங்கள் உடலில் உள்ள நச்சுக்கள் கிருமிகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

பொதுவாகவே வேப்பிலைகளை சிறிதளவு எடுத்து வாரத்திற்கு ஒருமுறை கஷாயம் செய்து அருந்தி வந்தால் சளி, காய்ச்சல் முதல் கொண்டு எந்த நோயும் இல்லாமல் ஒரு தடுப்பு அரணாக உடலை பாதுகாக்க முடியும்.

சர்க்கரை

ரத்த சர்க்கரை அளவு அதிகம் கொண்டவர்கள் தினமும் காலை, மாலை வெறும் வயிற்றில் ஆறு அல்லது ஏழு வேப்பிலைகள் அல்லது வேப்பிலை பொடி கால் தேக்கரண்டி எடுத்து இரண்டு டம்ளர் நீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

அது ஒரு டம்ளராக வற்றியதும் ஆற வைத்து அருந்தி வந்தால் உடலில் சர்க்கரை அளவு குறைந்து கட்டுப்படும்.

குழந்தைகள் ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை வயிற்றுப் புழுக்கள். அதற்கு வாரம் ஒருமுறை கொழுந்து வேப்பிலைகள் அல்லது வேப்பம் பூக்களை நீரில் இட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் வயிற்றுப் பூச்சிகள் அழிந்து விடும்.

வேப்பிலை மருத்துவ பயன்கள் Veppilai Uses in Tamil

நோய் எதிர்ப்பு சக்தி

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கத் தொடங்கும். வேப்பிலைகளை வாரம் ஒருமுறை கஷாயமாக அருந்தி வரும் பொழுது ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் கெட்ட கிருமிகள் வெளியேறி ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளும்.

ரத்தத்தின் கெட்டித்தன்மையை குறைத்து மென்மையாக மாற்றும்.

கண்

கண்களில் அரிப்பு கண் சிவப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு துண்டு வேப்பம் பட்டையை சிறிதளவு நீரில் ஆறு மணி நேரம் ஊற வைத்து அந்த நீரை கண்களில் ஒரு நாளைக்கு மூன்று முறை இட்டு வந்தால் குணமாகும்.

வேப்பிலை மருத்துவ பயன்கள் Veppilai Uses in Tamil

தோல் பிரச்சனை

தோல் பிரச்சனைகளுக்கு வேப்பிலைகளை மிஞ்சிய மருந்து கிடையாது என யாருக்கும் தெரியாது.

அம்மை மற்றும் உடலின் மீது ஏற்படும் அரிப்பு அலர்ஜி போன்றவற்றிற்கு வேப்பிலை சாற்றுடன் சுத்தமான மஞ்சளை கலந்து உடல் முழுவதும் பூசி குளித்து வந்தால் குணமாகும்.

காயங்கள்

ஆறாத புண்கள் காயங்கள் போன்றவற்றின் மேல் வேப்பிலைகளை கொதிக்க வைத்த நீரை அல்லது வேப்பிலைச் சாற்றைத் தடவி வந்தால் குணமாகிவிடும்.

பொடுகு

பொடுகு பிரச்சனைக்கு வாரம் ஓரிரு முறை வேப்பிலை சாற்றுடன் சிறிதளவு எலுமிச்சைச்சாறு கலந்து தலை முழுவதும் தேய்த்து இருபது நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வந்தால் குணமாகும்.

கல்லீரல்

கல்லீரல் மற்றும் பித்தப்பையை காக்கும் சிறந்த மருந்தாக வேப்பிலைகள் பயன்படுகின்றன. கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேப்பிலை கஷாயத்தை தினமும் அருந்தி வரும் பொழுது கல்லீரல் பாதிப்புகள் குறையத் தொடங்கும்.

பொதுவாகவே மாதம் இரண்டு அல்லது மூன்று முறை வேப்பிலை அல்லது வேப்பிலைப் பொடியால் செய்த கஷாயத்தை அருந்தி வந்தால் கல்லீரல் நோய்கள் வராமல் தடுத்து பாதுகாக்க முடியும்.

வேப்பிலை மருத்துவ பயன்கள் Veppilai Uses in Tamil

புற்றுநோய்

புற்றுநோய்க்கு சிறந்த எதிர்ப்பு சக்தியைத் தரும். மருத்துவ குணங்கள் வேப்பிலைகளில் நிறைந்துள்ளன.

வேப்பிலைகளை பயன்படுத்துபவர்களுக்கு எந்தவித புற்றுநோயும் நெருங்காமல் காக்க முடியும்.

பற்கள்

பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கும் வேப்பிலை சிறந்த மருந்தாக பயன்படுகிறது. வேப்பிலை பொடி, கடுக்காய் பொடி கிராம்பு பொடி, புதினா இலை பொடி போன்றவற்றை சம அளவு கலந்து கொள்ளவும்.

மேலும் இதனுடன் சிறிதளவு உப்பையும் சேர்த்து கலந்து வைத்துக் கொண்டு தினமும், பல் துலக்கி வரும் பொழுது நாளடைவில் பற்கள் தொடர்பான பிரச்சனைகள் குணமாகும்.

வேப்பிலை மருத்துவ பயன்கள் Veppilai Uses in Tamil

வேப்பிலைகளை நோய்கள் வருவதற்கு முன்பாகவே பயன்படுத்தினா உடலைக் காக்கும் கவசம் போன்று செயல்பட்டு எந்த நோயும் நெருங்காமல் இருக்க முடியும்.

இதனையும் படிக்கலாமே

அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer  பக்கத்தினை காட்டாயம் படிக்கவும்.

Related Posts

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning