பூனைகாலி விதை பயன்கள் | Poonaikali Vithai in Tamil
பூனைக்காலி விதை சித்த மருத்துவத்தில் மிக முக்கியமாக பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும்.
நரம்பு தளர்ச்சி
இந்த பூனைக்காலி விதையை நன்றாக பொடி செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அதனை அரை கிராம் அளவு எடுத்து பாலில் சேர்த்து அருந்தி வருவதன் மூலமாக ஆண்மை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
மேலும் நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சினைகளும் சரியாகும்.
பூனைக்காலி விதை, ஜாதிபத்திரி, சமுத்திரப்பச்சை சூடம் வசம்பு ஆகியவற்றை சரியான அளவு எடுத்து தினசரி இரண்டு வேலைகள் அதாவது காலை மாலை என அரை கிராம் முதல் ஒரு கிராம் வரை பாலுடன் சேர்த்து குடிப்பதன் மூலமாக ஆண்மை பெருகும்.
வயிறு பிரச்சனை
பூனைக்காலி விதை, சுக்கு, திப்பிலி, கிராம்பு, வெண் சித்திர மூலம், வேர்ப்பட்டை பூனைக்கண் குங்கிலியம், இவற்றை எடுத்து அதனுடன் நீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
அதனை சிறு மாத்திரை அளவு உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.
தினசரி ஒரு மாத்திரை வீதம் காலை மாலை இரண்டு வேளையும் சாப்பிட்டு வருவதன் மூலமாக வயிற்றிலுள்ள புழுக்கள் குன்மம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
பெண்கள் ஆரோக்கியம்
பூனைக்காலி விதை எண்ணெய் ஒரு லிட்டர் பசும்பாலில் 350 கிராம் அளவு சேர்த்து நன்றாக காய்ச்ச வேண்டும்.
பின்னர் அந்த விதையை காயவைத்து நன்றாக பொடியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை ஊற்றி பொடியாக்கப்பட்ட விதையினை இளம் வறுப்பாக வறுக்க வேண்டும்.
பின்னர் அதனுடன் சீனி சேர்த்து நன்கு கிளறி சுண்டைக்காய் ஆளாகி வரும் வரை உருட்டி கலந்து வைக்க வேண்டும்.
இந்த உருண்டையை காலை மாலை என இரண்டு வேளைகள் உண்ண வேண்டும்.
இவ்வாறு சாப்பிடுவதன் மூலமாக வெள்ளை வெட்டை மற்றும் பெண்களுக்கு மாதவிலக்கின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்படுதல் குணமாகும்.
உடல் உபாதைகள்
பூனைக்காலி வேரினை முறையான வகையில் கசாயம் செய்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை சாப்பிட்டு வருவதன் மூலமாக ஜுரம், வாதம், பித்தம், கபம் போன்ற நோய்கள் குணமாகும்.
யானைக்கால்
பூனைக்காலி வேரினை நன்றாக அரைத்து யானைக்கால் பிரச்சனை உள்ளவர்கள் பற்றுப்போட்டு வருவதன் மூலமாக நல்ல பலன் கிடைக்கும்.
உடல் பலவீனம்
பூனைக்காலி விதையின் மேல் பகுதியிலுள்ள தோலை நன்றாக நீக்கிவிட்டு ஆட்டுப்பாலில் சேர்த்து நன்றாக சொந்த காயவைக்கவும் காய வைத்த பின்னர் அதனை பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வருவதன் மூலமாக உடல் பலவீனம் சரியாகும்.
பூனைக்காலி விதை தேள் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது.
இதனையும் படிக்கலாமே
- நிலாவரை சூரணம் பயன்கள் | Nilavarai Uses in Tamil(Opens in a new browser tab)
- சீத்தாப்பழம் நன்மைகள் | Seethapalam Benefits in Tamil(Opens in a new browser tab)
- மக்காச்சோளம் பயன்கள் | Makka Cholam in Tamil(Opens in a new browser tab)
- ஜாதிக்காய் பொடி பயன்கள் | Jathikai Benefits in Tamil Language(Opens in a new browser tab)
- ஆமணக்கு எண்ணெய் பயன்கள் | Amanakku Oil Uses in Tamil(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- கம்பு பயன்கள் | Kambu Benefits in Tamil(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயமாக படிக்கவும்
20 Comments
Comments are closed.