மக்காச்சோளம் பயன்கள் | Makka Cholam in Tamil
மக்காசோளம் என்பது புல் வகையை சேர்ந்த தாவர உணவு.
நமது முன்னோர்கள்மக்கா சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல், பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தி வந்தனர்.
அப்படிப்பட்ட சோளத்தை நாம் அதிகம் உண்பதால், நமக்கு கிடைக்கின்ற பல்வேறு விதமான நன்மைகள் என்ன? என்று பார்க்கலாம்.
நமது உடம்பிற்கு தேவையான தினசரி நார்ச்சத்து தேவையை முழுமையாக அடங்கிய தானியமாக மக்கா சோளம் இருக்கின்றது.
மக்கா சோளத்தில் வைட்டமின் பி சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. அதிலும் குறிப்பாக டயாமின் மற்றும் நியாசின் ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.
அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுவது, ஞாபக மறதி நிலை மற்றும் தோல் சம்பந்தமான வியாதிகள் உடலில் நாசின் சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றது.
மக்கா சோளம் தொடர்ந்து தயாமின் மற்றும் நியாசின் சத்துக்கள் கிடைக்கப்பெற்று, மேற்கூறிய குறைபாடுகள் நீங்கி உடலை வலுப்படுத்தி ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
மக்கா சோளத்தை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து நமக்கு முழுமையாக கிடைக்கின்றது.
இதனால், மூல நோய் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.
புற்றுநோய்
மக்கா சோளத்தில் இருக்கும் இந்த நார்ச்சத்து குடல், வயிறு புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
ஜீரணம்
வயிற்றில் செரிமான அமிலங்கள் சுரப்பை சரி செய்து, உண்ணும் உணவுகள் நன்றாக ஜீரணம் ஆக வழிவகை செய்கின்றது.
கர்ப்பிணி பெண்கள்
மக்கா சோளத்தில் போலிக் அமிலம் அதிக அளவில் இருக்கின்றது. எனவே கர்ப்பிணி பெண்கள் சோளத்தை கட்டாயம் சாப்பிட வேண்டும்.
கொலஸ்ட்ரால்
சோளத்தில் காக்கப்படுவதாக பல மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்க உதவுகின்றது.
இதய ஆரோக்கியம்
எனவே சீரான ரத்த ஓட்டம் செல்வதை உறுதி செய்து இதய பாதிப்புகள் ஏற்படாமல் காக்கின்றது.
மக்கா சோளத்தில் உள்ள இரும்புச்சத்து ரத்த சோகையை குறைக்க உதவுகின்றது.
கண் பார்வை
மேலும், சோளத்தில்பீட்டா கரோட்டின் எனப்படும் சத்து அதிகமாக இருப்பதால், கண் பார்வைத்திறன் தெளிவாகவும், கூர்மையாகவும் இருப்பதற்கு மிகவும் உதவுகின்றது.
சர்க்கரை நோய்
நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகம் நன்மையை கொடுக்கின்றது. மக்கா சோளம் இன்சுலின் ஹார்மோன் சுரப்பை சீராக வைத்து நோயாளிகளுக்கு ரத்தத்தில் திடீரென சர்க்கரையின் அளவு அதிகரிக்கும் ஆபத்தான நிலையை தடுக்கின்றது.
இதனையும் படிக்கலாமே
- தேங்காய் சாப்பிட்டால் இவளவு பயன்களா(Opens in a new browser tab)
- சடா மாஞ்சில் மருத்துவ பயன்கள் | Jatamansi in Tamil(Opens in a new browser tab)
- நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்(Opens in a new browser tab)
- காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா?(Opens in a new browser tab)
- நாயுருவி பயன்கள் | Nayuruvi Plant Uses in Tamil(Opens in a new browser tab)
- அனைவருக்கும் பிடித்த கரும்பின் மருத்துவகுணம்(Opens in a new browser tab)
- சோற்றுக்கற்றாழை பயன்கள் | Katralai Benefits in Tamil(Opens in a new browser tab)
- பனங்கற்கண்டு நன்மைகள் | Panakarkandu Uses in Tamil(Opens in a new browser tab)
- அதிவிடயம் பயன்கள் | Athividayam Uses in Tamil(Opens in a new browser tab)
அனைவரும் நமது வலைதளத்தின் Disclaimer பக்கத்தினை கட்டாயம் படிக்கவும்.
6 Comments
Comments are closed.