தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

தூதுவளை இந்தியாவில் அனைத்து இடங்களிலும் பயிராகும்.

இது ஒரு காய கற்பக மூலிகைகளில் ஒன்றாகும்.
தமிழக சித்த மருத்துவத்தில், காயகற்ப மருந்துகள் என்பது மிகவும் சிறப்பானதாகும்.

காயகற்பம் என்பது காயம் என்றால் உடல், கர்ப்பம் என்றால் உடலை நோய் அணுகாதபடி, வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க செய்யும் ஒரு மருந்து

இது ஒரு பிணி நீக்கி, வயதுக்குத் தகுந்தவாறு ஏற்படும் நோயிலிருந்து விடுபட வைத்து, நீண்ட நாள் வாழ செய்வதாகும்.

இதை போன்று பல மூலிகைகள் உள்ளன. காயகற்ப மருந்துகளில் சிறப்பானது ஒன்று தான் தூதுவளை.

இந்த தூதுவளைக்கு சிங்கவல்லி மற்றும் அளர்க்கம் போன்ற வேறு பெயர்களும் உள்ளது.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

இந்தியா முழுவதுமே தோட்ட வேலிகளில் வளரும் ஒருவகை கொடி இனம். தூதுவளை கொடி முழுவதுமாக முட்கள் நிறைந்து காணப்படும்

இதன் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவப் பயன்கள் கொண்டது.

இதனுடைய மருத்துவ பயன்களை பற்றி பார்க்கலாம்.

சளி, இருமல்

தூதுவளை இலையைப் பறித்து நன்றாக சுத்தம் செய்து வைத்து கொள்ளவும். அதனுடன் தேவைக்கேற்ப பூண்டு, மிளகு வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து வைத்து கொள்ளவும்.

தூதுவளை துவயலினை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வருவம்பொழுது உடலுக்கு நல்ல பலம் கிடைப்பது மட்டுமின்றி சளி, இருமல், இரைப்பு போன்றவை நீங்கும்.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

புற்றுநோயை தடுக்க

தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால், புற்றுநோய் வராம தடுக்கலாம்.

தொண்டை புற்று, வாய் புற்று, கருப்பை புற்று ஆகியவற்றிற்கு தூதுவளை மருந்து நல்ல பலன் கொடுத்துள்ளது என மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

நரம்பு தளர்ச்சி

இன்றைய காலங்களில் ஆண்கள் பலருக்கு நரம்பு தளர்ச்சி காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் தூதுவளைக் கீரையை வாரத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது சமையல் செய்து சாப்பிட்டு வருவதன் மூலமாக, உடல் வலு பெறுவதுடன் ஆண்மை சக்தியை அதிகரிக்கிறது.

வலிமையான பற்கள், எலும்புகள்

பற்கள் தொடர்பான நோய் உள்ளவர்கள், தூதுவளைக் கிரியை தொடர்ந்து நாற்பத்தி எட்டு நாட்கள், பருப்புடன் கலந்து சாப்பிட்டு வருவதன் மூலம், நல்ல தீர்வு கிடைக்கும்.

தூதுவளை கால்சியம் சத்து அதிகம் நிறைந்திருப்பதால், எலும்புகள், பற்களையும், பலப்படுத்தும்.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

விஷ கடி

தேள் , பூரான், விஷ வண்டுகள் போன்றவற்றால் கடிப்பட்ட நபர்கள் உடனடியாக தூதுவளை பொடியை கலந்து சாப்பிட்டால் அவற்றின் விஷம் முறியும்.

உடலில் பித்தம் அதிகரிப்பதால் சிலருக்கு தலை வலி, மயக்கம் போன்றவை ஏற்படும். அதை சரி செய்ய தூதுவளை சிறப்பாக செயல்படுகிறது.

ஆஸ்துமா

மனிதனின் முறையான சுவாசத்தை பாதிக்கும் நோய்களாக இருப்பது, ஆஸ்துமா.

இது போன்ற நோய்களை போக்க தூதுவளை நெய்யில் வதக்கி துவையலாக தயாரித்து மூன்று வேளை உணவில் சேர்த்து சாப்பிட்டால் ஆஸ்துமா நீங்குவதோடு நோய் வராம தடுக்கவும் உதவியாக இருக்கிறது.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

மேலும்

பருப்புடன் சேர்த்து தூதுவளைக் கீரையினை சமைத்து தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

அவ்வாறு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும் மேலும் பற்கள் உறுதியாகும், மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும்.

தூதுவளை நன்கு அரைத்து, அதனை துவையல் செய்து வைத்து கொள்ளவும்.

இந்த துவயலினை சாப்பிட்டு வரும்பொழுது தலையில் உள்ள கபம் குறையும்.

நெடுகால இருமல், காது மந்தம்,நீங்காத நமச்சல், பெரு வயிறு மந்தம் போன்றவற்றிற்கு தூதுவளை மருந்தாகும்.

மூக்கில் நீர் வடிவது, வாயில் அதிக அளவில் நீர் சுரப்பு ஏற்படுவது , பல் ஈறுகளில் நீர் சுரப்பது போன்றவற்றை சரிசெய்ய தூதுவளைக்கீரை சிறந்த மருந்து.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

தூதுவளைப் பூவை நிழலில் உலர்த்தி நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும். அதனை பாலில் கலந்து ஒரு மண்டலம் தவறாமல் பருகி வந்தால் ஆண்மை பெருகி உடலிற்கு பலம் சேர்க்கிறது.

தூதுவளையை தினம் குடித்து வரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

தூதுவளை வத்தல் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.

இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் கண் தொடர்பான நோய்களுக்கு தீர்வு கிடக்கிறது.

தூதுவளை பயன்கள் | Thoothuvalai Keerai Benefits in Tamil

இதனையும் படிக்கலாமே

 

Related Posts

1 Comment

  1. Pingback: ยิง sms

Comments are closed.

Updatetamil warningYou cannot copy content of this pageUpdatetamil warning